Friday, December 9, 2011

நீங்க முன்னேற 'ஆசை' மட்டும் போதுமா...

நாம பலநேரம்  ஏதார்த்தம் என்பதை தவறவிட்டுவிடுகிறோம். சகஜமான வாழ்வை தொலைத்துவிட்டு முட்டி மோதி கடைசியில் கைகாசு கூட மிஞ்சாமல் போகிறது.  நம் வயிறு பசிக்குது என்று உணவை நம் கை எடுத்து வாயில் ஊட்டிவிடுகிறது.  அவ்வுணவை பல் அரைத்து வயிற்றுக்குள் தள்ளுகிறது.  அதை உடலும் தேவையானது என்று ஏற்றுகொள்கிறது. ஆனா நாம் வாழும் வாழ்வில் பிடிக்கிறதோ, பிடிக்கலையோ கட்டாயத்தின் பேரில் சிரமப்பட்டுதான் வாழ்ந்தாகவேண்டி இருக்கிறது. இப்படிப்பட்ட இடரான வழ்க்கை எதற்கு.? வயிறு பசித்து கை எடுத்து கொடுத்து சாப்பிடுவதை போல வாழ்வும் எதார்த்தமாக இருந்தால் நாம் வாழும் வாழ்வில் எந்த வேதனையும்  இல்லை அப்படியே இருந்தாலும் அது வேதனையாக இருப்பதில்லை.

நீங்கள் அருவியில் கொட்டுகிற தண்ணீரை பார்த்திங்கனா ரொம்ப சலசலப்பா இருக்கும். அதன் பக்கத்தில் போகவே முடியாது. ஆனா அதே அருவி தண்ணீர் கொஞ்சம் தூரம் போன பின்னே அதன் நீரோட்டம் கவனித்தீர்கள் என்றால் அது எந்தவித சலனம் ஏற்படுத்தமால்   அமைதியாக போகும் அதில் எப்போதும் ஒரு அழகு இருக்கும். அதுபோலதான் நாம் வாழும் வாழ்வும்  நீரோட்டம் போன்றது.  அருவி போல் எப்போதும் சலலப்பு இருந்தாலும் அதன் தெளிந்த நீரோடையாக இருப்பது நமக்கு என்றும் நல்லதாக இருக்கும். அது நாம் வாழும் வாழ்வை எந்தவிதத்திலும் சிதைக்காமல் தொந்தரவு செய்யாமல் இருக்கும். நான் சொல்வது வாழ்வின் ஏதார்த்தத்தை இதை  புரிந்தவர்களுக்கு வாழ்வது ரொம்ப எளிதுதாக இருக்கும்.

நீங்கள் எரியாத மெழுகுவர்த்தியாய் இருந்துகொண்டு மற்றவரை எரியவைக்க முயற்சிப்பதில் என்ன பயன். முதலில் உங்கள் அனுபவங்களில் உங்களை தேடுங்கள். நம் பசிக்கு உணவு இல்லாதபோது பக்கம் பக்கமாக படித்து என்ன பலன் வேண்டிருக்கு. இது என் அனுபவத்தில் தேடிய வாக்கியம்...     

அறிவு சார்ந்த ஒன்றை தெரிந்துகொள்ள நாம் ஒரு அரங்குக்கு செல்வோம். அங்கு ஏற்கனவே பல பேரு இருப்பார்கள் நாம் கடைசியாக போய் அமர்வோம். இப்போது நாம் நினைப்போம் "ஐயோ நாம்தான் கடைசியா" என்று ஆனால் கொஞ்சம் நேரம் கழித்து நம் பின்னே பல பேர் வந்து அமர்வார்கள் இப்போது நாம் கடைசி இல்லை.  நமக்குதான் பிரச்சனை என்றால் பலபேர் பிரச்சனையுடதான் இருக்கிறார்கள். வாழ்கிறார்கள்.  "உனக்கு கிழே உள்ளவர் கோடி" என்று கண்ணதாசன் எழுதிய பாடல் போல் இருக்கிறது பிரச்சனைகள்.  எதுவும் நம் நினைப்பில்தான் உள்ளது.     

நம்மில் உள்ளவர்கள் எல்லோரும் நல்லா சிந்திகிறாங்க பேசசொன்ன மணிக்கணக்காக பேசுகிறார்கள். எழுத சொன்னால் பக்கம் பக்கமாக எழுதுகிறார்கள். ஆனால் செய்முறை பயிற்சி இருக்கா என்றால் இல்லை ஒழுக்கத்தை பற்றி ஓயாமல் பேசுவோர்களும் உண்டு ஆனால் சொன்ன ஒழுக்கத்தை ஒருநாளேனும் நினைத்தார்களா இல்லை கடைபிடித்தார்களா என்றால் இல்லை. இதில் அவர்களுக்கு செயல்முறை பயிற்சி இல்லை. எதையும் பழக்கத்தில் கொண்டுவர முயற்சி செய்யவேண்டும். எல்லோருக்கும் எல்லா திறமைகளும் உண்டு. அதை வெளிகொண்டுவரத்தான் யாரும் முயற்சிப்பதில்லை ஆசை என்னவோ எல்லோருக்கும்தான் இருக்கிறது ஆனா அதை சிலபேர்தான் அடைகிறார்கள். காரணம் ஆசையுடன் ஆர்வம் மட்டும் போதாது முயற்சி அதனுடன் இணைந்த பயற்சியும் அதை என்றும் நடைமுறைபடுத்தி இயல்பாக்கினால் கடின உழைப்பு என்று சொல்வது கூட  எளிமையாகிவிடும். ஆர்வத்துடன் போதிய முயற்சியும், பயிற்சியும் இருந்தால் எதுவும் சாத்தியம்தான்.

நாம் வெற்றி, வெற்றி என்று சொல்வது ஒன்றுமில்லை ஆசையின் மறைபொருல்தான் வெற்றி. நாம் நினைக்கும் அடையும்  வெற்றி ஒரு எல்லைவரை வரையறுத்தது. அதை பார்பவர்களுக்கு வேண்டுமானால் நாம் வெற்றி அடைந்தவர்களாக இருக்கலாம். ஆனால் அது வெற்றி இல்லை. ஒருவரின் எண்ணத்தின் பார்வைமட்டும் நம் வெற்றியை நிர்ணயப்பதில்லை. அதில் நம் எவ்வளவு மன உறுதியாய் பெற்றோம் என்பதில்தான் வெற்றி உள்ளது. ஏழை ஏழையாய் இருப்பதற்கு அவனிடம் இருந்து சுரண்டலுக்கு அடுத்து ஒரு சில காரணங்களும் உண்டு. அதை அவன் எப்போதும் அறியவில்லை அவன் ஏழ்மையின் எண்ணமும் ஒரு காரணம். ஏழ்மையில் இருப்பவன் எழ்மையைதான் நினைப்பான் அதனால் மேலும் அவன் ஏழையாகின்றான். பணக்காரன் மேலும் பணத்தையே நினைக்கின்றான் அதனால் மேலும்  பணக்காரனாகின்றான். இதில் ஏழ்மையை இருப்பதற்கும் பணகாரனாய் இருப்பதற்கும்  எண்ணமே விதையாக இருக்கிறது. வானத்தில் பரந்த பறவையை பார்த்து தாமும் அதுபோல பறக்கவேண்டும் என்ற கற்பனை என்னத்தை விரித்த மனிதன்தான் அந்த எண்ணத்தை  உண்மையாக்குவதற்க்கு பெரிய சவாலே நடத்தி காட்டினான். அந்த சவால் ரைட் சகோதரர்களால் உண்மையாக்கபட்டது. பறவைபோல கற்பனை செய்த மனிதனின் எண்ணம் நிறைவேறியது.     

பலதை கைகொள்ள என்றால் சிலது நடைமுறைபடுத்திதான் ஆகவேண்டும். புகை பிடிப்பதால் உடல் நலகேடு என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் புகையின் தீமையை படித்து இன்னொன்று புகையை இழுத்து விடுவார்கள். நான் எதையும் செயல்முறையில் கொண்டுவர முயற்சிக்கிறேன். நான் 10 வருடமாக புகை பிடிக்கும் பழக்கம் இருந்தது ஆனால் இப்போது 3 வருடமாக புகையை நிறுத்திவிட்டேன் இதனால் என் உடலும், மனமும் சரியாக இருக்கிறது. தினமும் காலையில் 5 மணிக்கு எழுந்திருக்க வேண்டும் என்று நினைத்தேன் 2 வருடமாக செயல்படுத்துகிறேன். "இதெல்லாம் என்ன ஒரு பெரிய விஷயமா" என்று நீங்கள் கேட்கலாம் ஆனால் எனக்கு பல திட்டசெயல் முறைகளை நடைமுறைபடுத்த சிலதை கடைபிடித்துதான் ஆகவேண்டும். 

வாழ்வில் கிடைக்கவேண்டியது கிடைக்கவேண்டும் என்றால் சிலதை நடைமுறைபடுத்திதான் ஆகவேண்டும். அதனால் படிப்பதுடன் இருக்காமல் முடிவதை செயல்முறைபடுத்துங்கள். நீங்கள் காணும் எதிர்பார்ப்பும் நிச்சயம் நிறைவேறும். இது என்னால் நிரூபிக்கப்பட்ட வெற்றிமுறை...   

No comments:

Post a Comment