Wednesday, May 11, 2011

இதுதாண்டா வாழ்க்கை......



கடவுள் ஒரு கழுதையை முதலில் படைத்து அதனிடம் சொன்னார். நீ ஒரு கழுதை. நீ உன்முதுகில் நிறைய சுமைகளை சுமந்து காலை முதல் மாலை வரை உழைக்க வேண்டும். உனக்கு மூளை கிடையாது. உனக்கு புல்தான் உணவு. நீ 50 ஆண்டுகள் வாழ்வாய் என்று சொன்னார்.


அதற்கு கழுதை பதில் சொன்னது. 50 ஆண்டுகள் ரொம்ப அதிகம். 20 ஆண்டுகள் எனக்கு போதும் என்றது. அதற்கு கடவுளும் சம்மதித்தார்.



-----------------------------------------------------------------------------------------------
கடவுள் ஒரு நாயை படைத்து அதனிடம் சொன்னார்.

நீ ஒரு நாய் , நீ மனிதனுக்கு நல்ல நண்பண். நீ அவனது வீட்டை பாதுகாக்க வேண்டும்.உனக்கு வேண்டிய உணவை அவன் தருவான்.. நீ 30 ஆண்டுகள் வாழ்வாய் என்று சொன்னார்.


அதற்கு நாய் பதில் சொன்னது. 30 ஆண்டுகள் ரொம்ப அதிகம். 15 ஆண்டுகள் எனக்கு போதும் என்றது. அதற்கு கடவுளும் சம்மதித்தார்.





----------------------------------------------------------------------------------------------
கடவுள் ஒரு குரங்கை படைத்து அதனிடம் சொன்னார்

நீ ஒரு குரங்கு. நீ மரத்துக்கு மரம் தாண்டுவாய்.. பல வித்தைகளை காட்டுவாய். நீ 20 ஆண்டுகள் வாழ்வாய் என்று சொன்னார்



அதற்கு குரங்கு சொன்னது. 20 ஆண்டுகள் ரொம்ப அதிகம். 10 ஆண்டுகள் எனக்கு போதும் என்றது. அதற்கு கடவுளும் சம்மதித்தார்.



-----------------------------------------------------------------------------------------------
கடவுள் கடைசியில் ஒரு மனிதனைப் படைத்து அவனிடம் சொன்னார்.

நீ ஒரு மனிதன். இந்த உலகில் நீ ஒரு முழுமையான படைப்பு . நீ எல்லா மிருகங்களுக்கும் தலைவன். நீ இந்த உலகத்தேயே ஆளுவாய். நீ 20 ஆண்டுகள் வாழ்வாய் என்று சொன்னார்.


அதற்கு மனிதன் சொன்னான். 20 ஆண்டுகள் ரொம்ப குறைவு. எனவே கழுதை வேண்டாம் என்று சொன்ன 30 வருஷங்களையும், நாய் வேண்டாம் என்று சொன்ன 15 வருஷங்களையும், குரங்கு வேண்டாம் என்று சொன்ன 10 வருஷங்களையும் எனக்கு தாருங்கள் என்று கேட்டான். கடவுளும் அதற்கு சம்மாதித்தார்.

அதிலிருந்து மனிதன் 20 வருடங்கள் மனிதனாகவும், அதன் பிறகு கல்யாணம் , வேலை செய்து எல்லா சுமைகளையும் முதுகில் சுமந்து 30 வருடங்கள் கழுதைப் போல வாழ்ந்தான்.பிறகு குழந்தைகளை நல்ல படியாக பாதுகாத்து வளர்த்து கிடைத்தவைகளை சாப்பிட்டு நாய் போல 15 வருடம் வாழ்ந்து வந்தான். பின் வேலையில் இருந்து ஒய்வு பெற்று 10 வருடங்கள் குரங்கு போல மரத்துக்கு மரம் தாவுவது போல வீட்டுக்கு வீடு, பையன் வீட்டில் இருந்து பொண்ணு வீட்டுக்கும் மாறி மாறி சென்று பேரக் குழந்தைக்களுக்கு வேடிக்கை காட்டி வாழ்ந்து வருகிறான்

No comments:

Post a Comment