Tuesday, May 10, 2011

மனதை தொட்டு செல்லும் ஒரு ஆண்மகனின் கதறல்கள்...........


மனதை தொட்டு செல்லும் ஒரு ஆண்மகனின் கதறல்கள்...........

என் அம்மாவிற்கு ஒரு கண்தான் உள்ளது. அவளை நான் வெறுக்கிறேன். அவளை பார்க்கும் போதெல்லாம் நான் வெட்கப்பட்டு கூனி குருகிப்போகிறேன். அவள் ரோட்டோர கடை நடத்தி வருமானம் ஈட்டுகிறாள்.நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது ஃபீல்ட் ட்ரிப் போகும் போது என்னை வழியனுப்ப ஸ்கூலுக்கு வந்தாள் அவளை நண்பர்கள் மத்தியில் பார்க்க வெட்கம் பிடுங்கி தொலைந்தது. அன்றிலிருந்து என் நண்பர்கள் என்னை கேலி செய்ய தொடங்கினார்கள்,

எப்போதும் அம்மா என் கண்ணில் படாமல் இருக்க ஆசைப்பட்டேன். ஒரு நாள் வாய்விட்டே அவளிடம் சொல்லிவிட்டேன். உன்னை பார்க்கவே எனக்கு பிடிக்கவில்லை அம்மா உன்னால் நான் எல்லோர் முன்னால் கேளீக்கை பொருளாட்டம் ஆகிவிட்டேன். நீ செத்து போய்விடேன் என்றும் சொல்லிவிட்டேன். அதற்கும் என் அம்மா ஒரு பதிலும் கூறாமல் சென்றுவிட்டார்கள்.

இதை நீண்டகாலமாக சொல்லவேணும் போலிருந்தது அதானால் சொல்லிவிட்டேன். சொன்னதால் என் மனதுக்கு ஒரு திருப்தி.

அம்மா அதற்காக என்னை தண்டிக்காததால் அவளை அதிக அளவு மனதை காயப்படுத்தவில்லை என்று நினைத்துக் கொண்டேன்.

அன்று இரவு தூக்கத்தில் முழித்து தண்ணிர் குடிப்பதற்க்காக கிச்சனுக்கு சென்ற போது, அம்மா சத்தமில்லாமல் அழுது கொண்டிருப்பதை பார்த்தேன். அவள் எதைபார்த்தாவது பயந்து இருந்தால் என்னை எழுப்பி இருப்பாள் அப்படி ஏதும் நடக்கவில்லையென்பதால் நான் மாலையில் நான் சொன்னதிற்காகத்தான் அவள் அழுது கொண்டிருக்கிறாள் என்பது எனக்கு மெல்ல புரிந்தது. அதனால் என் இதயத்தின் ஒரமாக யாரோ கிள்ளியது போன்ற வலி தோன்றியது.என்னுடைய வறுமையையும் என் ஒரு கண் அம்மாவையும் வெறுத்தேன். அவளிடம் சொன்னேன் நான் வளர்ந்து ஒரு பெரிய வெற்றிகர ஆளாக வருவேன் என்று.


அன்று முதல் நான் மிகவும் கடினமாக படித்தேன். எனக்கு ஸ்காலர்ஷிப் கிடைத்ததால் எனது கல்லூரி படிப்பையும் வெளி நாட்டில் முடித்து மிகப் பெரிய வேலையில் அமர்ந்து, அதன் பின் கல்யாணம் முடிந்து குழந்தைகளை பெற்று, குழந்தைகளின் நலன் கருதி சென்னையில் வந்து செட்டில் ஆகிவிட்டேன். இப்போது நான் ஒரு சந்தோஷமான வெற்றிகரமான மனிதன் காரணம் இந்த சூழ்நிலை என் அம்மாவை நினைவுபடுத்தவில்லை.

நாளுக்கு நாள் என் சந்தோஷம் பலமடங்கு பெருகியது. ஒரு நாள் எதிர்பாராமல் யாரோ என்னை பார்க்க வந்தாக சொன்னார்கள். ஹாலில் வந்த பார்த்த போது அது என் ஒற்றை கண் அம்மா. வானமே என் மேல் இடிந்து விழுந்தது போல ஒரு உணர்வு. என் அம்மாவை பார்த்த என் சிறு குழந்தை பயந்து அலறி அழுக ஆரம்பித்தது.

உடனே நான் என் அம்மாவை பார்த்து நீ யார்? எதுக்காக நீ என் வீட்டிற்கு வந்தாய்? என் குழந்தை உன்னை கண்டு பயப்படுகிறது. வீட்டை விட்டு வெளியே போ என்று கத்தி அவளை யாறென்று தெரியாதது போல நடிக்க ஆரம்பித்தேன்.அவளும் மன்னித்து கொள்ளுங்கள் நான் விலாசம் மாறி வந்து விட்டேன் போலிருக்கிறது என்று சொல்லி வெளியே போக ஆரம்பித்தாள்.அவளுக்கு என்னை யாறேன்று தெறியவில்லை அதற்காக கடவுளுக்கு நன்றி சொல்லி கொண்டு அவளை மீண்டும் என் வாழ் நாள் உள்ளவரை பார்க்கவே கூடாது என்று முடிவு செய்து கொண்டேன்

ஒரு நாள் எனக்கு ரீயூனியன் கடிதம் என் பள்ளியில் இருந்து வந்தது. அதில் கலந்து கொள்வதற்காக என் மனைவியிடம் பொய்சொல்லி பிஸினஸ் விஷயமாக செல்கிறேன் என்று சொல்லி வந்துவிட்டேன். ரீயூனியன் முடிந்த பின் ஒரு ஆர்வத்தினால் நான் வசித்த வீட்டை பார்க்க சென்ற போது என் அம்மா குளிர்ந்த தரையில் படுத்து இருந்தாள். அம்மா என்று அவளை அழைத்தேன் பதில் இல்லை அப்போதுதான் தெரிந்தது என் குரலுக்கு பதில் சொல்ல முடியாத நிலையில் அவள் இறந்து கிடப்பது .அவள் கையில் ஒரு கவர்.. அது எனக்கு எழுதப்பட்ட கடிதம்..


அதில் அவள் எழுதியிருந்தாள்

எனது அன்பிற்கும் பாசத்திற்கும் நேசத்திற்கும் உள்ள மகனுக்கு உன் அம்மா எழுதிக் கொள்வது
,

எனது வாழ் நாள் முடியும் தருணம் வந்துவிட்டது. கவலைப்படாதே நான் மீண்டும் உன் வீட்டிற்கு வந்து உன் குழந்தையை வந்து பய முறுத்த மாட்டேன்.நீ மட்டும் எப்போதாவது வந்து பார்த்து செல்ல மாட்டாயா என்ற மிகப் பெரிய ஆசை எனக்குள் இருந்தது.உன் பள்ளியில் ரீயூனியன் இருப்பதாக கேள்விபட்டேன். கவலைப்படாதே நான் அங்கு ஒற்றை கண்ணோடு வந்து உனக்கு கெளரவ குறைச்சல் ஏற்படுத்த மாட்டேன். என் உள்ளுணர்வு சொல்லுகிறது நீ ரீயூனியன் வரும் போது நீ விட்டிற்கு வருவாய் என்று. அது வரை என் உயிர் இருக்குமா என்பது தெரியாததால் நான் இந்த கடிதத்தை உனக்கு எழுதி வைத்துள்ளேன்.


உனக்கு சிறுவயது இருக்கும் போது ஒருவிபத்தில் உன் அப்பாவை இழந்தேன். அந்த விபத்தில் உன் ஒரு கண்ணும் பறி போனது. நீ ஒற்றை கண்ணோடு வலம் வருவதை என்னால் நினைத்து பார்க்க முடியவில்லை. அதனால் நான் என் கண்ணை உனக்கு தானம் பண்ணினேன்.நீ என் கண்ணால் இந்த உலகத்தை பார்ப்பதில் எனக்கு மிகவும் சந்தோஷம்.நீ செய்த எந்த செயல்களூம் எனக்கு எப்போதும் மனவருத்தத்தை தரவில்லை. சில சமயங்களில் நீ என்மீது கோபபட்டு கத்திய போதும் நீ என்மீது வைத்துள்ள அன்பினால்தான் நீ அப்படி கத்துகிறாய் என்று கருதினேன்.நீ வெகு சிறியவயதில் நீ என் காலைஸ் சுற்றி சுற்றி வந்ததை மட்டுமே நான் நான் மிஸ் பண்ணுகிறேன்.


உன்னையே உலகமாகவும்
உன்னை எப்பொழுதும் இழந்துதவிக்கும்

உன் அம்மா

அம்மா அம்மா என்று நான் கதறி அழுகத்தான் முடிந்தது.

-------

நான் ஆன்லைனில் ஆங்கிலத்தில் படித்த இந்த கதையை நான் என் வழியில் இங்கே தந்துள்ளேன். இந்த அன்னையர் தினத்தில் தன் அம்மாவை மறந்து இருக்கும் பிள்ளைகளுக்கு இந்த மகனின் கதறல் காதில்விழும் என்ற நம்பிக்கையில் இதை இங்கே வழங்கியுள்ளேன்.அன்னை இருக்கும் வரை நமக்கு அவர்களின் அருமை பெருமை தெரியாது. இழந்தவர்களிடம் கேட்டுபாருங்கள் அவர்கள் கதை கதையாக சொல்லுவார்கள். கடவுள் ஒவ்வொருவரிடமும் வந்து இருக்க முடியாதால்தான் அவர் வாழும் தெய்வாமாக அன்னையை படைத்து நம்மிடம் அனுப்பி வைத்துள்ளார்

No comments:

Post a Comment