Wednesday, December 14, 2011

2021 - ல் தமிழ் செய்திதாள்களில் வரும் தலைப்பு செய்திகள் (கற்பனை)

  *பாகிஸ்தான் திவிரவாதி கசாப் மாரடைப்பில் மரணம். காரணம் அவருக்கு அதிக அளவு பிரியாணி உணவாக வழங்கப்பட்டதே காரணம் 
.
   *முன்னாள் மத்திய மந்திரி ராசாவின் மகன்  12 G ஊழலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.


   *போயஸ்கார்டனில் ஜெயலலிதா வீட்டில் உள்ள 2 பாதாள ரகசிய அறைகள் திறப்பு அதில் உள்ள தங்க வைர நகைகளை மதிப்பிட அதிகாரிகள் திணறல். மற்ற அறைகளை திறக்க உயர் நீதி மன்றம் தடை விதிப்பு.

  *ஜெயலலிதா அவரின் உத்தரவு படி கலைஞர் ஆட்சியில் கட்டப்பட்ட அனைத்து பாலங்களும் இடிக்கப்பட்டு அதற்கு பதிலாக சுரங்கபாதை அமைக்கப்பட்ட பணிகள் முடிக்கப்பட்டன.


  *பள்ளியில் மாணவர்களுக்கு மதிய உணவுடன் வழங்கப்பட்ட சாரயத்தில் கலப்படம், மாணவர்கள் 100 பேர் சாவு
  
  *வேட்பாளர்களின் விமானத்திற்கு பின்னால் ஐந்து விமானங்கள் மட்டுமே பறக்க வேண்டும் இந்திய தேர்தல் அதிகாரி அறிவிப்பு.

  *மதுரை தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்ற ஜெயலலிதா விமானத்திற்கு பின் 200 விமானங்கள் பறந்து சென்றன.

 *திமுக தலைவர் ஸ்டாலினும், பொது செயலாளர் அழகிரியும்  மகளிர் அணித்தலைவி கனிமொழியும், கொள்கை பரப்பு செயலாளர் வடிவேலும் முப்பெறும் விழாவில் கலந்து கொண்டனர்.

  *தமிழகத்தில் தமிழருக்கு வாழ இடம் கொடுக்க மத்திய அரசு ஏற்பாடு செய்யும் வரை உண்ணாவிரதம் இருக்க  போவதாக கண்ணிர் விட்டு அழுதவாறு  வைகோ அறிவிப்பு.

  *இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் உண்டியல் குலுக்கும் முறை ஒழிப்பு அதற்கு பதிலாக இணையத்தின் வழியாக பேபால் மூலம் பணம் வசூலிக்க முடிவு.

*முன்னாள் நடிகரும் தேமுதிக கட்சி தலைவருமான விஜயகாந்த் விருத்தாசலத்தில் உள்ள குக்கிராமத்தில் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு நிற்க இடம் ஒதுக்குமாறு எல்லா கட்சிகளுடன் ரகசிய பேச்சு வார்த்தை.

  *ரஜினிகாந்துக்கு அம்மாவாக நடிக்க அனுஷ்கா என்ற நடிகையுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது..

*கலைஞரின் வாழ்க்கை படமாக எடுக்கப்படுகிறது. அதிலாவது முதலமைச்சர் வேடத்தில் நடிக்க விஜய்க்கு வாய்ப்பளிக்க சந்திரசேகர் வேண்டுகோள்..  

*முதியோர் இல்ல வாசலில் ரெமி மார்டினை குடித்து விட்டு பாட்டிகளை கிண்டல் செய்து வம்புக்கிழுத்த சாருவுக்கு  பெண்கள் அமைப்பு கண்டனம்.


2021 -ல் தமிழ் செய்திதாள்களில் என்ன மாதிரி தலைப்பு செய்திகள் வரும் என்று கற்பனையில் எழுந்தவைதான் இந்த பதிவு.இது யாரையும் காயப்படுத்துவதற்க்காக எழுதப்பட்டதல்ல

இப்படியும் சில தமிழர்கள்

 *எப்போது தமிழனிடம் பணம் இல்லையோ அப்போது அவன் வீட்டில் இருந்து காய்கறிகளை சமைத்து சாப்பிடுவான்.
அதே தமிழனிடம் எப்போது பணம் வருகிறதோ அப்போது அவன் உயர்தர ஹோட்டலுக்கு சென்று பச்சை காய்கறிகளை சாப்பிடுவான்.
 *எப்போது தமிழனிடம் பணம் இல்லையோ அப்போது அவன் சைக்கிள் ஒட்டுவதன் மூலம் வேலைக்கு செல்வான்
அதே தமிழனிடம் எப்போது பணம் வருகிறதோ அப்போது அவன் சைக்கிள் ஒட்டுவதன் முலம் உடற்பயிற்சி செய்வான்.


  *எப்போது தமிழனிடம் பணம் இல்லையோ அப்போது அவன் நடந்து உணவை தேடி செல்வான்.
அதே தமிழனிடம் எப்போது பணம் வருகிறதோ அப்போது அவன் நடப்பதன் மூலம் உணவை செரிக்க செய்வான்.

எப்போது தமிழனிடம் பணம் இல்லையோ அப்போது கல்யாணம் செய்து கொள்ள ஆசைப்படுவான்.
அதே தமிழனிடம் எப்போது பணம் வருகிறதோ அப்போது அவன் விவகாரத்து செய்து கொள்ள ஆசைப்படுவான்.


 *எப்போது தமிழனிடம் பணம் இல்லையோ அப்போது அவன் மனைவி உதவியாளராக (secretary) இருக்க ஆசைப்படுவான்.
அதே தமிழனிடம் எப்போது பணம் வருகிறதோ அப்போது அவன் உதவியாளர் மனைவி போல நடக்க ஆசைப்படுவான்.


  *எப்போது தமிழனிடம் பணம் இல்லையோ அப்போது அவன் பணக்காரன் போல நடிப்பான்.
அதே தமிழனிடம் எப்போது பணம் வருகிறதோ அப்போது அவன் ஏழை போல நடிப்பான்.


*ஷேர் மார்கெட் ரொம்ப மோசமாக இருப்பதாக சொல்லிக் கொண்டேதமிழன் அதில் மீண்டும் மீண்டும் முதலீடு செய்வான்.
பணத்தை பிசாசு என்று தமிழன் சொல்லிக்கொண்டே அதை தேடி செல்வான்.
உயர்ந்த பதவிகளில் இருப்பவர்கள் தனிமைப்படுத்தப் படுவார்கள் என்று சொல்லிக் கொண்டே தமிழர் உயர்ந்த பதவியை அடைய ஆசைப்படுவார்கள்



தமிழா.........தமிழா

இந்தியாவில் அம்பானியை விட அதிக சம்பளம் வாங்கும் இரண்டு தமிழர்கள்( CEO)

இந்தியாவில்  அனில்அம்பானியை விட அதிக சம்பளம் வாங்கும் CEO-க்கள் 3000-க்கும் அதிகமானோர். இவர்கள் அந்த கம்பெனியின் மூளை. இவர்கள் எடுக்கும் ஓவ்வொரு முடிவும் அந்த கம்பெனியின் வளர்ர்சியில் மிக முக்கியம். அது மிகவும் எளிதல்ல.

இந்த லிஸ்டில் இரு தமிழர்கள் இரண்டாவது இடத்தையும் மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளனர் என்பது மிகவும் ஆச்சிரியப் படத்தக்காதாகும்.



முதலாம் இடத்தை பெறுபவர்  நவீன் ஜிண்டால் ( Naveen Jindal )
சம்பளம் : Rs 69.757  கோடி .

நவின் ஜிண்டால்   ஜிண்டால்  ஸ்டில் & பவர் ( Jindal Steel & Power.Naveen Jindal,) என்ற கம்பெனியின் சேர்மன் & மேனேஜிங் டைரக்டர் ஆவார் . இவர் அதிக சம்பளம் வாங்கும் CEO களில் . இவர் 2010-ல் ரூ-69.757 கோடி( (Rs 697.57 million) சம்பளம் பெற்று முதல் இடத்தை பெற்றுள்ளார்

இரண்டாம் இடத்தை பெறுபவர் கலாநிதி மாறன் (Kalanithi Maran) சம்பளம் Rs 37.08 crore

இரண்டாவது  இடத்தை பெற்றுள்ளவர் நமது தமிழகத்தை சார்ந்த கலாநிதி மாறன் ஆவார். இவர் சன் டிவி  நெட்வொர்க் மற்றும் ஸ்பைஷ்ஜெட்  என்ற நிறுவனத்தின்  சேர்மன் & மேனேஜிங் டைரக்டர் ஆவார். இது மட்டுமல்லாமல் 21 டெலிவிஷன் சேனலுக்கும் 42 FM க்கும் ஒனர் ஆவார் ரெட் FM என்ற நிறுவனத்தின் பங்குதாரரும் மற்றும் பல நிறுவனங்களையும் நிர்வாகித்தும் வருகிறார். இவர் பெறும் ஆணடு வருமானம் Rs 37.08 கோடி (Rs 370.8 million) in 2010

மூன்றாவது இடத்தில் வருபவர் காவேரி மாறன் ( Kavery Maran) சம்பளம்: Rs 37.08 crore இவர் கலா நிதி மாறனின் துணைவியாவார் இவர் சன் டிவியின் மேனேஜிங் டைரக்டர் ஆவார். இவரும் கலாநிதி நடத்தும் அநேக கம்பெனிகளில் பங்கு கொள்கிறார்.

(Source: Business India ) இந்த தகவல்கள் பிசினஸ் இந்தியா இதழ்களில் இருந்து பெறப்பட்டது.

இப்படி உழைத்து சம்பாதித்து இரண்டாவது முன்றாவது இடத்தை  பெற்றுள்ளவர்கள் தமிழர்கள் என்று படிக்கும் போது நமக்கு பெருமையாக இருக்கும் அதே நேரத்தில் ஊழல் முலம் அதிக அளவு சம்பாதித்தவர்களும் இவர்களின் குடும்பத்தினர்தான் என்று நினைக்கும் போது மனம் வேதனைக்குள்ளாகி தலை குனிந்து நிற்க வேண்டிய நிலமையை ஏற்படுத்தியவர்களும் இந்த தமிழர்கள் தான்.

Friday, December 9, 2011

சுவையும் ஆரோக்கியமும் தரும் கனி வகைகள்

ஆப்பிள் :-  
இரும்புச்சத்து, ஆர்சனிக் சத்து மற்றும் பாஸ்பரஸ் சத்து அதிகம் கொண்டது ஆப்பிள். ரத்த சோகையை போக்குவதற்கான அருமருந்து ஆப்பிள்.

விளாம்பழம் :-  
மலச்சிக்கல், வயிற்றுப் போக்கு, வயிற்றுக் கடுப்பு, பெப்டிக் அல்சர் மற்றும் நுரையீரல் கோளாறுகளை நீக்குகிறது விளாம்பழம்.

வாழைப்பழம் :-  
ஒரு வாழைப்பழத்தில் 100 கலோரி அளவு சத்து உள்ளது. உணவு செரிமானத்திற்கு கிரியா ஊக்கியாக செயல்படுகிறது வாழைப்பழம். வாழைப்பழத்தில் அதிகமாக உள்ள பொட்டாசியம் நரம்புகளும், தசைகளும் இலகுவாக செயல்படுவதற்கு உதவுகிறது


திராட்சை :-  
உணவு செரிமானத்திற்கு உதவும் திராட்சை, காய்ச்சலின் போது ஏற்படும் பலவீனத்தை குறைக்க பெரிதும் உதவுகிறது.

மாம்பழம் :-  
கல்லீரலில் ஏற்படும் உபாதைகளுக்கு ஏற்றது. உடல் எடையைக் கூட்டும். உடலுக்குத் தேவையான சத்துப் பொருட்களான இரத்தம், சதை, கொழுப்பு, எலும்பு மஜ்ஜை மற்றும் விந்து ஆகியவை உருவாவதற்கு மாம்பழம் பயன் படுகிறது.

ஆரஞ்சு : - 
வைட்டமின் ‘சி’ அதிகமாக உள்ளது ஆரஞ்சு. மனித உடலில் பொதுவாக ஏற்படும் ஜலதோஷம், ஃபுளு காய்ச்சல், இரத்தப் போக்கு முதலியவற்றை கட்டுப்படுத்த உதவும்.

பப்பாளிப் பழம் :-  
பப்பாளியில் வைட்டமின் ‘ஏ’ அதிகமாக உள்ளது. கல்லீரலுக்கு ஏற்ற உணவு பப்பாளி. மேலும் மலச்சிக்கலைப் போக்குவதற்கு பெரிதும் உதவுகிறது.

அன்னாசி :-
மூக்கு ஒழுகுதல், சுவாசக் குழாயில் ஏற்படும் பாதிப்புகள் மற்றும், சாதாரண காய்ச்சல் இவைகள் உடலைப் பாதிக்காமல் தடுக்கிறது அன்னாசி.

செர்ரீபழம் :-
செர்ரீ பழத்தில் உள்ள தாதுப் பொருள் யூரிக் அமிலம் உருவாவதை தடுக்கிறது மேலும் மூட்டுகளில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க உதவுகிறது

சுயமுன்னேற்றம்


வாழ்க்கையில் மகிழ்ச்சி தேவை என்றால் முதலில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளையும் உங்கள் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டுமென எண்ணுவதை நிறுத்துங்கள். நீங்கள் வருந்துவதாலோ, அதையே நினைத்துக் கொண்டு இருப்பதாலோ எதுவும் மாறப் போவதில்லை. வாழ்வை அதன் போக்கில் விட்டு, உங்கள் முயற்சியைத் தொடருங்கள். நடப்பவை அனைத்தும் நன்மைக்கே என எடுத்துக் கொள்ளுங்கள்.

எரிமலை சாம்பலில் அதிக சத்துக்கள் இருப்பதைப் போல் எந்த ஒரு துன்பத்திலும் நிச்சயம் ஒரு நன்மை இருக்கும். அன்னப்பறவை போல் துன்பத்தை விலக்கி நன்மையை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். எல்லா வெற்றிகளுக்கும் பின்னால் நிச்சயம் ஒரு வலி மிகுந்த கடினப் பாதை இருக்கும்.

மற்றவர்களிடம் குறை காணுவதை விட்டு உங்களுக்குள் என்ன நடக்கிறது என கவனியுங்கள். உங்கள் ஆழ்மனதின் விருப்பங்கள், நம்பிக்கைகளை அறிந்து, அதன் சின்னச் சின்ன ஆசைகளை நிறைவேற்றி, உங்களின் லட்சியத்திற்குத் தயார் படுத்துங்கள்.

அனைத்து வசதிகளும் இருந்தால்தான் சாதிக்க முடியும் என்பது தவறு. வசதி இருப்பின், வரும் வாய்ப்புகளை மட்டுமே பயன்படுத்த முயலுவோம். இல்லாவிட்டால், இனி என்ன செய்யலாம் என யோசித்தே மற்றவருக்கும் வாய்ப்புகளை வழங்குவோம்.

எப்போதும் ஏதோ ஒன்றை நினைத்து வருந்திக் கொண்டு நிம்மதியின்றி இருப்பவன் பைத்தியமென ஹெரொடொடுச் என்ற அறிஞர் கூறுகிறார்.

மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுப் பார்ப்பதை விட்டுவிட்டு, கடவுள் ஒரு வழியை மூடினால் ஒரு வழியைக் காட்டுவார் என எண்ணுங்கள். அதில் உங்களால் எவ்வளவு தூரம் சாதிக்க முடியும் எனப் பாருங்கள்.

ஒரு நிகழ்வு நிகழ்வில்லையெனில் அதில் உங்கள் குணத்திற்கு ஒவ்வாத ஏதோ ஒன்று உள்ளது என அர்த்தம். இன்று முதல் ஆனந்தம் என வீட்டில் உங்களுக்கு பிடித்த இடத்திலிருந்து உங்களுக்கு பிடித்த செயலைச் செய்யுங்கள்.

வீட்டில் எந்த இடமும் பிடிக்கா விட்டால் வெளியே வாருங்கள். இயற்கை மலர்கள், மனிதர்கள், மரங்கள், மலைகள், நதிகள் எனப் பரந்து விரிந்திருக்கிறது. அதில் உங்களுக்குப் பிடித்த தனிமை நிச்சயம் கிடைக்கும். அந்தத் தனிமையில் உங்களைத் தேடி எதிர்மறை எண்ணங்களை விலக்குங்கள்.

மனதில் எதிர்மறை எண்ணங்களை விலக்கினால் அந்தக் காலி இடம் நேர்மறை எண்ணங்களால் நிறையும். இயற்கையை நம்பி வாழ்வின் ஒவ்வொரு வினாடியையும் ரசித்து உங்கள் லட்சியத்திற்குத் தேவையான உங்களிடம் இல்லாத திறமையைக் கற்றுக் கொண்டு, கடுமையான உழைப்புடன் நல்ல எண்ணங்களால் நல்முயற்சி செய்தால் வாழ்க்கையில் வெற்றி உங்களுக்கே!

நீங்க முன்னேற 'ஆசை' மட்டும் போதுமா...

நாம பலநேரம்  ஏதார்த்தம் என்பதை தவறவிட்டுவிடுகிறோம். சகஜமான வாழ்வை தொலைத்துவிட்டு முட்டி மோதி கடைசியில் கைகாசு கூட மிஞ்சாமல் போகிறது.  நம் வயிறு பசிக்குது என்று உணவை நம் கை எடுத்து வாயில் ஊட்டிவிடுகிறது.  அவ்வுணவை பல் அரைத்து வயிற்றுக்குள் தள்ளுகிறது.  அதை உடலும் தேவையானது என்று ஏற்றுகொள்கிறது. ஆனா நாம் வாழும் வாழ்வில் பிடிக்கிறதோ, பிடிக்கலையோ கட்டாயத்தின் பேரில் சிரமப்பட்டுதான் வாழ்ந்தாகவேண்டி இருக்கிறது. இப்படிப்பட்ட இடரான வழ்க்கை எதற்கு.? வயிறு பசித்து கை எடுத்து கொடுத்து சாப்பிடுவதை போல வாழ்வும் எதார்த்தமாக இருந்தால் நாம் வாழும் வாழ்வில் எந்த வேதனையும்  இல்லை அப்படியே இருந்தாலும் அது வேதனையாக இருப்பதில்லை.

நீங்கள் அருவியில் கொட்டுகிற தண்ணீரை பார்த்திங்கனா ரொம்ப சலசலப்பா இருக்கும். அதன் பக்கத்தில் போகவே முடியாது. ஆனா அதே அருவி தண்ணீர் கொஞ்சம் தூரம் போன பின்னே அதன் நீரோட்டம் கவனித்தீர்கள் என்றால் அது எந்தவித சலனம் ஏற்படுத்தமால்   அமைதியாக போகும் அதில் எப்போதும் ஒரு அழகு இருக்கும். அதுபோலதான் நாம் வாழும் வாழ்வும்  நீரோட்டம் போன்றது.  அருவி போல் எப்போதும் சலலப்பு இருந்தாலும் அதன் தெளிந்த நீரோடையாக இருப்பது நமக்கு என்றும் நல்லதாக இருக்கும். அது நாம் வாழும் வாழ்வை எந்தவிதத்திலும் சிதைக்காமல் தொந்தரவு செய்யாமல் இருக்கும். நான் சொல்வது வாழ்வின் ஏதார்த்தத்தை இதை  புரிந்தவர்களுக்கு வாழ்வது ரொம்ப எளிதுதாக இருக்கும்.

நீங்கள் எரியாத மெழுகுவர்த்தியாய் இருந்துகொண்டு மற்றவரை எரியவைக்க முயற்சிப்பதில் என்ன பயன். முதலில் உங்கள் அனுபவங்களில் உங்களை தேடுங்கள். நம் பசிக்கு உணவு இல்லாதபோது பக்கம் பக்கமாக படித்து என்ன பலன் வேண்டிருக்கு. இது என் அனுபவத்தில் தேடிய வாக்கியம்...     

அறிவு சார்ந்த ஒன்றை தெரிந்துகொள்ள நாம் ஒரு அரங்குக்கு செல்வோம். அங்கு ஏற்கனவே பல பேரு இருப்பார்கள் நாம் கடைசியாக போய் அமர்வோம். இப்போது நாம் நினைப்போம் "ஐயோ நாம்தான் கடைசியா" என்று ஆனால் கொஞ்சம் நேரம் கழித்து நம் பின்னே பல பேர் வந்து அமர்வார்கள் இப்போது நாம் கடைசி இல்லை.  நமக்குதான் பிரச்சனை என்றால் பலபேர் பிரச்சனையுடதான் இருக்கிறார்கள். வாழ்கிறார்கள்.  "உனக்கு கிழே உள்ளவர் கோடி" என்று கண்ணதாசன் எழுதிய பாடல் போல் இருக்கிறது பிரச்சனைகள்.  எதுவும் நம் நினைப்பில்தான் உள்ளது.     

நம்மில் உள்ளவர்கள் எல்லோரும் நல்லா சிந்திகிறாங்க பேசசொன்ன மணிக்கணக்காக பேசுகிறார்கள். எழுத சொன்னால் பக்கம் பக்கமாக எழுதுகிறார்கள். ஆனால் செய்முறை பயிற்சி இருக்கா என்றால் இல்லை ஒழுக்கத்தை பற்றி ஓயாமல் பேசுவோர்களும் உண்டு ஆனால் சொன்ன ஒழுக்கத்தை ஒருநாளேனும் நினைத்தார்களா இல்லை கடைபிடித்தார்களா என்றால் இல்லை. இதில் அவர்களுக்கு செயல்முறை பயிற்சி இல்லை. எதையும் பழக்கத்தில் கொண்டுவர முயற்சி செய்யவேண்டும். எல்லோருக்கும் எல்லா திறமைகளும் உண்டு. அதை வெளிகொண்டுவரத்தான் யாரும் முயற்சிப்பதில்லை ஆசை என்னவோ எல்லோருக்கும்தான் இருக்கிறது ஆனா அதை சிலபேர்தான் அடைகிறார்கள். காரணம் ஆசையுடன் ஆர்வம் மட்டும் போதாது முயற்சி அதனுடன் இணைந்த பயற்சியும் அதை என்றும் நடைமுறைபடுத்தி இயல்பாக்கினால் கடின உழைப்பு என்று சொல்வது கூட  எளிமையாகிவிடும். ஆர்வத்துடன் போதிய முயற்சியும், பயிற்சியும் இருந்தால் எதுவும் சாத்தியம்தான்.

நாம் வெற்றி, வெற்றி என்று சொல்வது ஒன்றுமில்லை ஆசையின் மறைபொருல்தான் வெற்றி. நாம் நினைக்கும் அடையும்  வெற்றி ஒரு எல்லைவரை வரையறுத்தது. அதை பார்பவர்களுக்கு வேண்டுமானால் நாம் வெற்றி அடைந்தவர்களாக இருக்கலாம். ஆனால் அது வெற்றி இல்லை. ஒருவரின் எண்ணத்தின் பார்வைமட்டும் நம் வெற்றியை நிர்ணயப்பதில்லை. அதில் நம் எவ்வளவு மன உறுதியாய் பெற்றோம் என்பதில்தான் வெற்றி உள்ளது. ஏழை ஏழையாய் இருப்பதற்கு அவனிடம் இருந்து சுரண்டலுக்கு அடுத்து ஒரு சில காரணங்களும் உண்டு. அதை அவன் எப்போதும் அறியவில்லை அவன் ஏழ்மையின் எண்ணமும் ஒரு காரணம். ஏழ்மையில் இருப்பவன் எழ்மையைதான் நினைப்பான் அதனால் மேலும் அவன் ஏழையாகின்றான். பணக்காரன் மேலும் பணத்தையே நினைக்கின்றான் அதனால் மேலும்  பணக்காரனாகின்றான். இதில் ஏழ்மையை இருப்பதற்கும் பணகாரனாய் இருப்பதற்கும்  எண்ணமே விதையாக இருக்கிறது. வானத்தில் பரந்த பறவையை பார்த்து தாமும் அதுபோல பறக்கவேண்டும் என்ற கற்பனை என்னத்தை விரித்த மனிதன்தான் அந்த எண்ணத்தை  உண்மையாக்குவதற்க்கு பெரிய சவாலே நடத்தி காட்டினான். அந்த சவால் ரைட் சகோதரர்களால் உண்மையாக்கபட்டது. பறவைபோல கற்பனை செய்த மனிதனின் எண்ணம் நிறைவேறியது.     

பலதை கைகொள்ள என்றால் சிலது நடைமுறைபடுத்திதான் ஆகவேண்டும். புகை பிடிப்பதால் உடல் நலகேடு என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் புகையின் தீமையை படித்து இன்னொன்று புகையை இழுத்து விடுவார்கள். நான் எதையும் செயல்முறையில் கொண்டுவர முயற்சிக்கிறேன். நான் 10 வருடமாக புகை பிடிக்கும் பழக்கம் இருந்தது ஆனால் இப்போது 3 வருடமாக புகையை நிறுத்திவிட்டேன் இதனால் என் உடலும், மனமும் சரியாக இருக்கிறது. தினமும் காலையில் 5 மணிக்கு எழுந்திருக்க வேண்டும் என்று நினைத்தேன் 2 வருடமாக செயல்படுத்துகிறேன். "இதெல்லாம் என்ன ஒரு பெரிய விஷயமா" என்று நீங்கள் கேட்கலாம் ஆனால் எனக்கு பல திட்டசெயல் முறைகளை நடைமுறைபடுத்த சிலதை கடைபிடித்துதான் ஆகவேண்டும். 

வாழ்வில் கிடைக்கவேண்டியது கிடைக்கவேண்டும் என்றால் சிலதை நடைமுறைபடுத்திதான் ஆகவேண்டும். அதனால் படிப்பதுடன் இருக்காமல் முடிவதை செயல்முறைபடுத்துங்கள். நீங்கள் காணும் எதிர்பார்ப்பும் நிச்சயம் நிறைவேறும். இது என்னால் நிரூபிக்கப்பட்ட வெற்றிமுறை...   

Thursday, December 8, 2011

ஆயக்கலைகள் அறுபத்திநாலு.

 [Madurai+089.jpg]


ஆயக்கலைகள் அறுபத்திநாலு.
1.அட்சரங்கள்.
2.விகிதம்.
3.கணிதம்.
4.வேதம்.
5.புராணம்.
6.வியாகரணம்.
7.ஜோதிடம்.
8.தர்ம சாஸ்த்திரம்.
9.யோக சாஸ்த்திரம்.
10.நீதி சாஸ்த்திரம்.
11.மந்திர சாஸ்த்திரம்.
12.நிமித்த சாஸ்த்திரம்.
13.சிற்ப சாஸ்த்திரம்.
14.வைத்திய சாஸ்த்திரம்.
15.சாமுத்ரிகா லட்சணம்.
16.சப்தப்பிரம்மம்.
17.காவியம்.
18.அலங்காரம்.
19.வாக்கு வன்மை.படத்தைச் சேர்
20.கூத்து.
21.நடனம்.
22.வீணை இசை.
23.புல்லாங்குழல் வாசிப்பு.
24.மிருதங்க இசை.
25.தாளம்.
26.ஆயுதப் பயிற்சி.
27.ரத்னப்பரீட்சை.
28.கனகப்பரீட்சை(தங்கம் பற்றி அறிதல்)
29.யானை ஏற்றம் மற்றும் சாதி அறிதல்.
30. குதிரை ஏற்றம் மற்றும் சாதி அறிதல்.
31.ரத சாஸ்த்திரம்.
32பூமியறிதல்.
33.போர்முறை சாஸ்த்திரம் மற்றும் தந்திரம்.
34.மற்போர் சாஸ்த்திரம்.
35.வசீகரித்தல்.
36.உச்சாடனம்.
37.பகைமூட்டுதல்.
38.காம சாஸ்த்திரம்.
39.மோகனம்.
40.ஆகரஷனம்.
41.ரசவாதம்.
42.கந்தரவ ரகசியம்.
43.மிருக பாஷை அறிதல்.
44.துயரம் மாற்றுதல்.
45.நாடி சாஸ்த்திரம்.
46.விஷம் நீக்கும் சாஸ்த்திரம்.
47.களவு.
48.மறைத்துரைத்தல்.
49.ஆகாயப் பிரவேசம்.
50.விண் நடமாட்டம்.
51.கூடுவிட்டு கூடுபாய்தல்.
52.அரூபமாதல்.
53.இந்திர ஜாலம்.
54.மகேந்திர ஜாலம்.
55.அக்னி ஸ்ம்பனம்.
56.ஜலஸ்தம்பனம்.
57. வாயு ஸ்தம்பனம்.
58.கண்கட்டு வித்தை.
59.வாய்கட்டு வித்தை.
60.சுக்கில ஸ்தம்பனம்.
61.சுன்ன ஸ்தம்பனம்.
62.வாள்வித்தை.
63.ஆன்மாவை கட்டுப்படுத்துதல்.
64.இசை.