Saturday, January 12, 2013

விண்டோ இயக்கமுறைமையினுடைய வளர்ச்சிபாதையின் முகப்பு படங்கள்

1985விண்டோ -பதிப்பு 1.0

  இது மைக்ரோ சாப்ட் நிறுவனத்தின் விண்டோ இயக்கமுறைமையின் முதல் பதிப்பாக வெளியிடபட்டது .இதுஒருகணினிக்குள் சுலபமான பயன்பாடுகளுடன் பலசெயல் செய்யவல்லதாக இருந்த்து
1987 விண்டோ -பதிப்பு 2.0


  விண்டோவின் இரண்டாம் பதிப்பு கட்டுபாட்டு பலகத்துடன் வெளியிடபட்டது
1988 விண்டோ -பதிப்பு 2.1

  விண்டோவின் அதே இரண்டாம் பதிப்பு கட்டுபாட்டு பலகம் மட்டுமல்லாது கூடுதலாக பெயின்ட் என்ற பயன்பாட்டுடன் வெளியிடபட்டது
1990 விண்டோ -பதிப்பு 3.0

விண்டோவின் மூன்றாம்  பதிப்பு எம்எஸ் டாஸிற்கு பதிலாக கோப்பு மேலாளர் நிரல்தொடர் மேலாளர் ஆகிய கருவிகள் சேர்ந்ததது
1992 விண்டோ -பதிப்பு 3.1


இது விண்டோ மூன்றாம்  பதிப்பின் மேம்பட்ட பதிப்பாக 32 பிட் வட்டுஅனுகலை ஆதரிக்கம்படியும் தனிப்பட்டவர்களின் ஏராளமான வாய்ப்புகளுடனும் முதன்முதலில் Minesweeper என்ற விளையாட்டு மென்பொருளுடன்  வெளியிடபட்டது
1995 விண்டோ -பதிப்பு 95


  முதன்முதலில் தற்போது இருக்கும் தோற்றத்தைபோன்று புதிய இடைமுகத்துடனும் விண்டோ-95 மேம்படுத்தபட்ட வரைகலையும் தொடர்பாடல் மென்பொருளடனும் சேர்த்து அறிமுகபடுத்தபட்டது
1998 விண்டோ -பதிப்பு 98


   தற்போதும் தனியாள் கணினிகளில் இதுவரை தொடர்ந்து பயன்படுத்தி கொண்டிருக்கின்ற இதுவரை வெளியிட பட்ட விண்டோ பதிப்புகளிலேயே இது ஒரு திறன்மிக்க நீட்டிக்கபட்ட மென்பொருட்களுடன் கூடிய வெற்றிபடைப்பகும்  
2000 விண்டோME
விண்டோ மில்லியனியம் எனும் இந்த பதிப்பு தற்கு முந்தைய பதிப்புகளைவிட கூடுதல் கருவிகளும் திறனும் கொண்டதாகும் ஆயினும் அவ்வளவு பிரபலமானது அன்று
2001 விண்டோ  XP


  இது தற்போதும் பெரும்பாலனவர்களால் பயன்படுத்திகொண்டிருக்கும் விண்டோகளுக்கெல்லாம் தந்தையாக கருதபடுவதும்  திறன்மிக்கதும் ஏராளமான கருவிகளைகொண்டதுமான பதிப்பாகும்
2006 விண்டோ விஸ்டா


இது அவ்வளவு பிரபலமாகவில்லை எனினும் பரவாயில்லை எனும்படியான வசதிகளைகொண்டது
2009 விண்டோ 7
விண்டோ 98 விண்டோ எக்ஸ்பி அடுத்ததாக மிகப்பிரபலமான முக்கிய மைல்கல்லாக இந்த பதிப்பு இன்று விளங்குகின்றது இத மிகத்திறன்மிக்க கருவிகளும் இதுவரை பார்த்தேயிராத வசதிவாய்ப்புகளுடனும் வெற்றிநடை போடுகின்ற  படைப்பாகும்
2012 விண்டோ 8


    இது மாறுதல் செய்யபட்ட பயனாளர்களின் இடைமுக்த்துடனும் இன்னும் ஏராளமான வசதிவாய்ப்புகளுடனும் 2012 ஆம்ஆண்டின இறுதியில் வெளிவரஇருக்கின்றது

No comments:

Post a Comment