Sunday, March 27, 2011

வாழ்கையின் வெற்றிக்கு 20 கோட்பாடுகள் !!!

* எந்த விசயமாக இருந்தாலும் அல்லது எந்த பிரச்னையாக இருந்தாலும் அதை அழகா கையாளுங்கள்.

* அர்த்தமில்லாமலும்,தேவையில்லாமலும் பின் விளைவுகளை அறியாமலும் பேசிக் கொண்டிருப்பதை விடுங்கள்.

* தானே பெரியவன்,தானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள்.

* விட்டுக் கொடுங்கள்.

* சில நேரங்களில்,சில சங்கடங்களை சகித்துத்தான் ஆக வேண்டும் என்பதை உணருங்கள்.

* நீங்கள் சொன்னதே சரி,செய்வதே சரி என்று கடைசி வரை வாதாடதிர்கள்.

* குறுகிய மனப்பான்மையை விட்டோளியுங்கள்.

* உண்மை எது,பொய் எது என்று விசாரிக்காமல் இங்கே கேட்டதை அங்கும்,அங்கே கேட்டதை இங்கும் சொல்வதை விடுங்கள்.


* மற்றவர்களை விட உங்களையே எப்போதும் உயர்த்தி நினைத்து கவலைப்படதிர்கள்.

* அளவுக்கதிகமாய் தேவைக்கதிகமாய் ஆசைப்படதிர்கள்.

* எல்லோரிடத்திலும் எல்லா விசயங்களையும், அவர்களுக்கு சம்பந்தம் உண்டா இல்லையோ,சொல்லி கொண்டிருக்காதிர்கள்.

* கேள்விபடுகிற எல்லா விசயங்களையும் அப்படியே நம்பி விடாதிர்கள்.

* உங்கள் கருத்துகளில் உடும்புபிடியை இல்லாமல் கொஞ்சம் தளர்த்திக்கொள்ளுங்கள்.

* மற்றவர்களுக்கு உரிய மரியாதையை கட்டவும்,இனிய இதமான சொற்களை பயன்படுத்தவும் மறக்கதிர்கள்.

* புன்முறுவல் காட்டவும்,சிற்சில அன்பு சொற்களை சொல்லவும் கூட நேரமில்லாமல் நடந்து கொள்ளாதிர்கள்.

* பேச்சிலும்,நடத்தையிலும்,திமிர்த்தனத்தயும் தேவையில்லாத மிடுக்கையும் தவிர்த்து அடக்கத்தையும் பண்பாட்டையும் காட்டுங்கள்.

* அவ்வபோது நண்பர்கள் உறவினார்கள் நேரில் சந்தித்து மனம் திறந்து பேசுங்கள்.

* பிணக்கு ஏற்படும்போது அடுத்தவர் முதலில் இறங்கி வர வேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சை துவக்க முன் வாருங்கள்.

*தேவையான இடங்களில் நன்றியும்,பாராட்தையும் சொல்ல மறவதிர்கள்.

குழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாத சில…

குழந்தைகளை நல்ல விதமாய் வளர்ப்பது பெற்றோர் கையில் தான் உள்ளது. குழந்தைகள் முன்னிலையில் செய்யக்கூடாத, சொல்லக்கூடாத சிலவற்றைத் தவிர்த்தால், அவர்கள் நல்ல பிள்ளைகளாக வளர்வது நிச்சயம். குழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாதது என்னென்ன?
*கணவன்-மனைவி சண்டை சச்சரவு குழந்தைகளுக்குத் தெரியக் கூடாது. அவர்கள் முன்னிலையில், சண்டையிட்டுக் கொள்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

*குழந்தைகள் முன்னிலையில், பிறரை பற்றி தேவையில்லாமல் விமர்சிக்காதீர்கள். உதாரணமாக, “உங்கள் பிரண்ட் மகா கஞ்சனாக இருக்கிறாரே’ என்று நீங்கள் உங்கள் கணவரிடம் கேட்டதை நினைவில் வைத்துக் கொண்ட குழந்தை, அவர் வரும் போது, “அம்மா கஞ்சன் மாமா வந்து இருக்கிறார்’ என்று சொல்ல நேரிடலாம்.

*தீய சொற்களை பேசுவதை தவிருங்கள். அதிலும் குழந்தைகள் முன்னிலையில் பேசுவதை அறவே தவிருங்கள். நீங்கள் பேசுவதை கவனித்து தான் உங்கள் குழந்தை பேசுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

*சிறு குழந்தைகளை மிரட்டும் போது, “கொன்னுடுவேன், தலையை திருகிடுவேன், கையை உடைப்பேன்’ போன்ற வார்த்தைகளை உபயோகிக்காதீர்கள்.

*சில தாய்மார்கள் சில விஷயங்களை தங்கள் கணவரிடம் இருந்து மறைக்க விரும்புவர். எனவே, குழந்தைகளிடம், “அப்பாகிட்டே சொல்லிடாதே’ என்று கூறுவர். அப்படி நீங்கள் சொன்னால், உங்கள் குழந்தை தன்னை பெரிய ஆளாக நினைத்துக் கொண்டு, உங்கள் கணவர் முன்னிலையிலேயே “அப்பாக்கிட்ட சொல்லிடுவேன்’ என்று மிரட்டும்.

*குழந்தைகளிடம் அவர்கள் டீச்சரைப் பற்றி கமென்ட் அடிக்கக் கூடாது. “உங்க டீச்சருக்கு வேற வேலை இல்லை; உங்க டீச்சருக்கே ஒண்ணும் தெரியலே’ போன்ற வார்த்தைகளை அவர்களிடம் கூறக் கூடாது. அப்படி கூறினால், குழந்தைகள் அவர்கள் ஆசிரியர் மீது வைத்திருக்கும் மதிப்பு குறைந்து, அவர்கள் படிப்பை பாதிக்க வழிவகுக்கும்.

* குழந்தைக்கு எதற்கெடுத்தாலும் காசு கொடுத்துப் பழக்கக் கூடாது. அதிலும் கமிஷன் கொடுத்து பழக்கப்படுத்துவது கூடவே கூடாது. ” கடைக்குப் போய் ஷாம்பூ வாங்கிட்டு வந்தால், உனக்கு சாக்லேட் வாங்க காசு தருவேன்’ என்பது போல பேசுவதை தவிருங்கள். இல்லாவிட்டால், நாளடைவில் ஒவ்வொன்றிற்கும் காசை எதிர்பார்க்க ஆரம்பித்து விடுவர்.

*குழந்தைகள் முன்னிலையில் தரமான படங்களையே பார்க்க வேண்டும். நீங்கள் வாங்கும் புத்தகங்களும் தரமாக இருக்கிறதா என்று பார்த்து வாங்கவும்.

*உங்கள் குழந்தையுடன் அடுத்த வீட்டுக் குழந்தையை ஒப்பிட்டுப் பேசாதீர்கள். அப்படி பேசினால், குழந்தையின் மனதில் தாழ்வு மனப்பான்மை வளரும்.

*படிப்பு விஷயத்தில் குழந்தைகளைக் கண்டிக்கும் போது, “பாசிடிவ் அப்ரோச்’ இருக்க வேண்டும். “நீ நன்றாக படித்தால் டாக்டராவாய்; நன்றாக விளையாடு பெரிய ஸ்போர்ட்ஸ்மேன் ஆகலாம்’ என்று கூறி, ஊக்கப்படுத்த வேண்டும். “நீ படிக்கிற படிப்புக்கு பியூன் வேலை கூட கிடைக்காது. இந்த மார்க் வாங்கினா மாடு தான் மேய்க்கலாம்’ என்றெல்லாம் பேசி, பிஞ்சு மனதை வேதனை அடைய செய்யக் கூடாது.

*குழந்தை முன்னிலையில் உங்கள் கணவர், வீட்டில் இருக்கும் பிற நபர்கள் சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது, புகையிலை போன்ற செயல்களை மேற்கொள்ள ஒரு போதும் அனுமதிக்காதீர்கள்.

உலகை இயக்கிய முதல் கம்ப்யூட்டர் ஒரு பார்வை !!!!

இன்றைக்கு நமது கைகளுக்குள் இருக்கும் ஒரு சின்ன கைப்பேசியில் நவீன கணினியே இயங்குகிறது. அந்தத் தொழில் நுட்பத்தில் மகத்துவத்தையும், உன்னதத்தையும் நம்மில் பலரும் நினைத்துப் பார்ப்பதில்லை. ஏனெனில் அது இன்றைக்கு சந்தையில் எங்கும் கிடைக்கும் சாதாரணப் பொருளாகிவிட்டது.
இன்றைக்கு பல வீடுகளில் கணினி, தொலைக்காட்சியைப் போல மிக எளிதாய் நுழைந்து விட்டிருக்கிறது. அலுவலகங்கள், கல்வி நிலையங்கள், விற்பனை வளாகங்கள், வங்கிகள், ஆராய்ச்சிக் கூடங்கள், மருத்துவ நிலையங்கள் என எந்த ஒரு தளத்தை எடுத்துக் கொண்டாலும் கணினி இன்றி ஒரு அணுவும் அசையாது எனும் நிலமை இன்று நிலைபெற்று விட்டது எனலாம்.
 இன்றைக்கு இப்படி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி, மிகச் சிறிய அளவில் நமது பைகளில் அமைதியாய் துயிலும் இந்த தொழில்நுட்பத்தின் ஆரம்ப வடிவம் எப்படி இருந்தது ? அதன் பின்னால் நிகழ்ந்த பல்லாண்டு கால உழைப்பு எப்படிப்பட்டது என்பதை பின்னோக்கிப் பார்க்கும் போது வியப்பு மேலிடுகிறது.
கணினித் துறையின் உயிராதாரமான பணிகளில் ஒன்று மென்பொருள் (கணினியை இயக்குவதற்குத் தேவையான புரோகிராம்கள்) எழுதுவது. இந்த வேலையைச் செய்பவர்களை “கம்ப்யூட்டர் புரோகிராமர்” என அழைக்கின்றனர்.
இப்போது நாம் பார்க்கும் கணினியின் தொடக்கம் சார்லஸ் பாபேஜ் (1791-1871) என்பவரால் உருவாக்கப்பட்டது. கணிதத்தையும் எந்திரத்தையும் இணைத்துப் பகுப்பாய்வுப் பொறி (Analytical Engine) என்ற முதல் கணினியை அவர் உருவாக்கினார்.
 கணினியின் ஆரம்ப வடிவம் மிகப்பெரிய அறைக்குள் திணிக்கப்பட்ட ஏராளமான இயந்திரங்கள் என்பதே வியப்பூட்டும் உண்மையாகும். அறுபது ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட முதல் கணினியை வைக்க ஒரு மிகப்பெரிய அறை தேவைப்பட்டிருக்கிறது. இப்போது இருப்பது போல வசதிகள், மானிட்டர், கீபோர்ட் எதுவும் இல்லாத, புள்ளிகளும் கோடுகளும் இணைந்து செயல்பட்ட முதல் கணினியில் எடை ஆயிரம் கிலோ.
அந்தக் கணினியில் வேகமும், விவேகமும் மிகவும் குறைவு. தற்போதைய சாதாரண கணினிகளின் நினைவாற்றல் அந்த முதல் கணினியின் நினைவாற்றலை விட பத்து இலட்சம் மடங்கு அதிகம் என்றால் நினைத்துப் பாருங்கள்.
அவருடன் இணைந்து பணியாற்றியவர் புகழ் பெற்ற ஆங்கிலக் கவிஞர் பைரன் என்பவரின் மகளான ‘அகஸ்டா அடா கிங் ‘ என்பவர்
உலகின் முதல் கம்ப்யூட்டர் புரோகிராமர் ஒரு பெண். அவர் “அடா பைரன் லவ்லேஸ்” (1816-1852).
புகழ்பெற்ற ஆங்கிலக் கவிஞரான பைரனின் மகள் இவர். மிகச்சிறந்த கணித அறிஞராகவும், இசைக் கலைஞராகவும் திகழ்ந்தார்.
தொடக்க கால கணிப்பீட்டுப் பொறிகளான அனலிட்டிக்கல் என்ஜின் மற்றும் டிஃபரன்ஸ் என்ஜினை வடிவமைத்தவர் சார்லஸ் பாபேஜ்.
தன்னுடைய 18 வயதில் பாபேஜ் உடன் சேர்ந்து பணியாற்றினார், அடா. பாபேஜ் “அனலிட்டிக்கல் என்ஜின்” வடிவமைப்பில் ஈடுபட்டபோது அதன் ஆற்றலை மற்றவர்களைவிட மிகச்சரியாக விளங்கிக்கொண்டார். அனலிட்டிக்கல் என்ஜினை இயக்கத் தேவையான புரோகிராம்களையும் எழுதினார்.
கணினிகள் மூலம் இசையமைக்க முடியும் என முன்னறிந்து கூறினார் அடா. கணினித்துறையில் நீங்காத இடம் பெற்றுள்ள இவர், தன்னுடைய 36 வயதில் புற்று நோய் காரணமாக உயிரிழந்தார்.
அவர் நினைவைப் போற்றும் வகையில் அமெரிக்கப் பாதுகாப்புத் துறை 1980 இல் கணினி நிரல் மொழி (Programme language) ஒன்றுக்கு அடா (ADA) என்று பெயர் சூட்டியது.
பல வருடங்களுக்கு முன்னால் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது என்றாலும் . இந்த சாதனை அதிகரப்பூர்வமாக 1948ம் ஆண்டு ஜூன் 21ம் தியதி அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது .
இந்த முதல் கணினி நிரூபித்த வினாடியே உலகில் மாபெரும் தொழில் நுட்ப, அறிவியல் விஞ்ஞான வளர்ச்சிக்கான முளை விட்ட வினாடி எனலாம். அந்த வினாடியைப் போல உன்னதமான நிமிடம் என் வாழ்வில் வந்ததில்லை என அதைக் கண்டுபிடித்த பேராசிரியர் பிரடி வில்லியம்ஸ் ஒருமுறை குறிப்பிட்டிருந்தார்.
1948 இல் டிரான்சிஸ்டர் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் அதுவரை இருந்து வந்த வெற்றிடக் குழலுக்கு (Vacuum tube) விடை தரப்பட்டது; இதன் விளைவாக இரண்டாம் தலைமுறைக் கணினிகள் புழக்கத்திற்கு வந்தன.
1958 இல் ஒருங்கிணைச் சுற்றமைப்பு (Integerated cirucuit – IC) கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் மூன்றாம் தலைமுறைக் கணினிகள் வந்தன. இதனால் ஒரு சாதாரணச் சில்லைப் (Chip) பயன்படுத்தி பல கணினிப் பகுதிகளை இணைக்க முடிந்தது. ஒரு இயக்க அமைப்பினைப் (Operating system) பயன்படுத்தி பல நிரல்களை (Programmes) இயக்கும் வாய்ப்பும் உண்டாயிற்று. மேலும் நான்காம் தலைமுறைக் கணினி உருவாவதற்கும் வழி ஏற்பட்டது.
1971 இல் இன்டெல் நிறுவனம் கண்டுபிடித்த 4004 சில்லுவில் மையச் செயலகம் (Central Processing Unit – CPU), நினைவகம் (Memory), உள்ளீடு/வெளியீட்டுக் கட்டுப்பாட்டுச் சாதனங்கள் ஆகிய அனைத்தும் இடம்பெற்றன. ஃ 1981 இல் IBM நிறுவனம் தனியாள் கணினியை (Personal Computer – PC) அறிமுகப்படுத்தியது.
 1983 இல் தனியாள் கணினியை அவ்வாண்டின் சிறந்த மனிதனாக ‘டைம்ஸ் ‘ இதழ் தேர்ந்தெடுத்தது.
பரம் 10000 என்னும் கணினி இந்தியாவில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட மீக்கணினியாகும் (Super computer).
தற்போது அமெரிக்க ஐக்கிய நாட்டில் உள்ள மொத்தக் கணினிகளின் எண்ணிக்கை உலகின் மற்ற எல்லா நாடுகளிலுள்ள கணினிகளின் எண்ணிக்கையைவிடக் கூடுதலாகும்.
அந்த முதல் விதை விழாமல் இருந்திருந்தால், அந்த முதல் மூளை எழாமல் இருந்திருந்தால் இன்றைக்கு நாம் காணும் பெரும்பாலான வளர்ச்சிகள் சாத்தியமில்லாமல் போயிருக்கக் கூடும்.
பேபி – என பெயரிட்டழைத்து இந்த மகத்தான கண்டுபிடிப்பை நிகழ்த்திய டாம் கில்பர்ன், அடா பைரன் லவ்லேஸ் , சார்லஸ் பாபேஜ் , மற்றும் பிரட்டி வில்லியம்ஸ் இவர்களில் யாருமே இன்று உயிருடன் இல்லை எனினும் அவர்களுடைய பெயர் வரலாற்றில் அழிக்கப்படாத நிலையில் அழுத்தமாக எழுதப்பட்டு விட்டது என்பது மட்டும் யாராலும் மறுக்கமுடியாத உண்மை .

காதலர் தின உடையின் நிறங்கள் !!!

இறந்து போனவருக்கும் குழந்தை பிறக்கும் !!!


“ஐயோ… என்னால் அப்பாவாக முடியாதே” என இனிமேல் ஆண்கள் யாருமே புலம்பத் தேவையில்லை என்கிறது பிரிட்டன் ஆராய்ச்சியாளர்களின் ஒரு சூப்பர் ஆராய்ச்சி முடிவு.

விந்தணுவும் முட்டையும் இணைந்து கரு உருவாவது தானே இயற்கையின் நியதி. ஒருவேளை நோயினாலோ, வேறு ஏதேனும் காரணத்தினாலோ சரியான விந்தணுக்கள் இல்லாத ஆண்கள் என்ன செய்வது ?



கவலையை விடுங்கள் உங்கள் உடலிலுள்ள ஒரு “ஸ்டெம் செல்” போதும் உங்களுக்குச் சொந்தமான ஒரு விந்தணுவை உருவாக்கி விடலாம் என்பது தான் அந்த ஆராய்ச்சி சொல்லும் ஆச்சரிய சங்கதி. பிரிட்டனின் நியூகாசில் பல்கலைக்கழகத்தில் நடந்த இந்த ஆராய்ச்சியை தலைமையேற்று நடத்தி உலகின் புருவத்தை உயர வைத்திருப்பவர் பேராசிரியர் கரிம் நயிர்னியா.
இன்றைய தேதியில் ஆறு தம்பதியரில் ஒருவருக்கு குழந்தை பிறப்பதில் சிக்கல் இருக்கிறது. பழைய காலத்தைப் போல குழந்தையில்லையேல் பழியை பெண்ணின் தலையில் போட்டு விட்டு தப்பிக்கவும் நவீன யுகம் வளர்ச்சி இடம் தருவதில்லை. ஒரு சோதனை போதும் யாருக்குப் பிரச்சினை, என்ன பிரச்சினை போன்ற சர்வ சமாச்சாரங்களையும் புட்டுப் புட்டு வைக்க.
குளோபல் வார்மிங், ஆபீஸ் டென்ஷன், பீட்சா, பர்கர், சீஸ் என கொழுப்பு உணவுகள், நோ எக்சர்சைஸ், மன அழுத்தம் இப்படி ஆயிரத்தெட்டு காரணங்கள் இதைச் சுற்றி. அதனால் இப்போதெல்லாம் ரேஷன் கடை வாசலில் நீளும் கூட்டத்தை விட அதிகமாய் கைனோகாலஜிஸ்ட் களின் வாசலில் கூட்டம் நீள்கிறது என்பது தான் நிஜம்.
உண்மையில், பிரச்சினை இப்போதெல்லாம் பெரும்பாலும் ஆண்களிடம் தான். ஜீவனில்லா விந்தணு, வீரியமில்லா விந்தணு, மூவ்மெண்ட் குறைவான விந்தணு, குறைவான எண்ணிக்கை இப்படி எக்கச்சக்கமான பிரச்சினைகள் இந்த உயிரணுவைச் சுற்றி. இந்தப் பிரச்சினைகளுக்கெல்லாம் தீர்வாகக் கூடும் இந்த ஆராய்ச்சி என்பதே இப்போதைக்கு மருத்துவ உலகின் நம்பிக்கை.


உலக மருத்துவ வரலாற்றிலேயே முதன் முறையாக எனும் அடைமொழியுடன், ஒரு ஆண் கருவிலிருந்து ஒரு செல்லைப் பிரித்தெடுத்து, , அதை சோதனைக்கூடத்தில் ஸ்பெர்ம் ஆக வளரச் செய்திருக்கிறார் அவர். கருவிலிருந்து தான் செல்லை எடுக்க வேண்டுமென்றில்லை, ஆண்களின் கைகளிலிருந்தே ஒரு ஸ்டெம் செல்லைப் பிரித்து எடுத்து ஒரு ஸ்பெர்ம் செல்லை உருவாக்க முடியும் என நம்புகிறார் பேராசிரியர் கரிம் நயிர்னியா.
எளிதாய் சொன்னாலும் இதன் பின்னணியில் உள்ள உழைப்பு அசாத்தியமானது. ஸ்டெம் செல் ஒன்றை திரவ நைட்ரஜனில் பதப்படுத்தி, அங்கிருந்து சாதாரண வெப்பநிலைக்குக் கொண்டு வந்து வைட்டமின்கள் உதவியுடன் ஸ்பெர்ம் ஆக வளர்த்தெடுக்க நான்கு முதல் ஆறு வாரங்கள் ஆகிறதாம். இந்த விந்தணுவை IVF முறைப்படி நேரடியாக முட்டையில் செலுத்தினால் கரு தயார். ஆண்மையில்லை, விந்தணு இல்லை எனும் ஆண்களின் குறைபாடுகளுக்கு குட்பை சொல்லிவிடலாம்.

                  இவர் ஏற்கனவே இந்த ஆராய்ச்சியை எலிகளை வைத்து நடத்தி நிறைய எலிக்குட்டிகளை உருவாக்கினார் என்பது வியப்புச் செய்தி ! ஆனால் மனித விந்தணுவை வைத்து இன்னும் குழந்தையை உருவாக்கவில்லை, காரணம், பிரிட்டனில் அதற்கான அனுமதி இல்லை என்பது தான்.

ஏற்கனவே செயற்கை முறையில் கருத்தரிக்க வைக்கும் முறை இருக்கிறது. ஆனால் அதற்கு ஸ்பெர்ம் யாராவது தானமாய் தரவேண்டும், முட்டை யாராவது தானமாய் தரவேண்டும். இரண்டையும் சேர்த்து ஏதோ ஒரு தாயின் கருவறையில் கருவாய் வளர்க்க வேண்டும். எப்படிப் பார்த்தாலும் “ எனக்குள்ள ஓடற இரத்தம் தான் உனக்குள்ளயும் ஓடுது” என டயலாக் அடிக்க முடியாத உறுத்தல் பெற்றோருக்கு கொஞ்சம் இருக்கத்தான் செய்யும். ஆனால் இந்த புதிய ஆராய்ச்சி மட்டும் நடைமுறைக்கு வந்தால், அச்சு அசலாக பெற்றோரின் குணாதிசயங்களுடன் இயற்கையாய் பிறக்கும் குழந்தைக்குரிய அத்தனை இயல்புகளோடும் செயற்கையாய் ஒரு குழந்தையை உருவாக்க முடியும் என்கிறார் கரீம்.
இந்த ஆராய்ச்சி ஸ்பெர்ம் தொடர்பான பல ஆராய்ச்சிகளுக்கான கதவுகளை ஒரு சேரத் திறந்திருக்கிறது. உயிரணுக்கள் எப்படி உருவாகின்றன, வளர்கின்றன, என்னென்ன தன்மையில் வலுவடைகின்றன என அனைத்து நுண்ணிய விஷயங்களையும் இனிமேல் விரிவாக அறிய முடியும் என்பது மருத்துவ நம்பிக்கை. அப்படி நடந்தால் “வயாகரா” போல ஒரு மாத்திரை வந்து சர்வ உயிரணுப் பிரச்சினைகளையும் தீர்த்து வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இந்த அவசர உலகில் இனிமேல் “அந்த” விஷயங்களெல்லாம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பெண்கள் தேவைப்படும் போது குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளலாம் போலிருக்கிறது. “ஏங்க, உங்க கையைக் கொஞ்சம் நீட்டுங்க. ஒரு செல் வேணும், குழந்தை பெற்றுக்கொள்ளப் போகிறேன்” என மனைவியர் சொல்லும் காலத்தை நினைத்தால் கொஞ்சம் படபடப்பாகத் தான் இருக்கிறது !
இப்படியெல்லாம் நடந்தால் ஆண்களுக்கு இங்கே என்ன வேலை என டென்ஷனாகாதீர்கள். இப்போதைக்கு ஒரு விந்தணுவை உருவாக்க ஒரு ஆணின் ஸ்டெம் செல் கட்டாயம் தேவை என்பதே நிலை. பெண்ணின் ஸ்டெம் செல்லைக் கொண்டு விந்தணு உருவாக்க முயன்ற முயற்சிகள் தோல்வியடைந்திருக்கின்றன. அப்படி பெண்ணின் செல்லில் இருந்தே ஒரு விந்தணுவும் உருவாக்க முடிகின்ற ஒரு காலம் உருவாகும் போது ஒரு குழந்தைக்கு பெண்ணே தாயுமானவளாகவும், தந்தையானவளாகவும் மாறும் வியப்பின் உச்சகட்டம் உருவாகும் !
இந்த ஆராய்ச்சியின் மிகவும் வியக்கத் தக்க விஷயமே இனிமேல் தான் இருக்கிறது. அதாவது இறந்து போன ஒருவருடைய உடலிலிருந்து கூட ஒரு செல்லை எடுத்து அதை வளரவைத்து ஸ்பெர்ம் ஆக மாற்றி அவருடைய சந்ததியை செயற்கையாகவே உருவாக்கிவிடலாம் என்பது தான் அது !
இறந்து பல வருடங்களானால் கூட இந்த செயற்கை ஸ்பெர்ம் உருவாக்குதல் சாத்தியம் எனும் தகவல் ஜுராசிக் பார்க் படம் போல திகிலூட்டுகிறது.

Friday, March 11, 2011

உடல்நலம்தொடர்பான தகவல்கள்



முதுகு வலி குறைய… நாம் கடினமான வேலைகளைச் செய்யும்போது தசைப் பிடிப்பு, மூட்டுவலி, முதுகுவலி ஏற்படுகிறது.
மூட்டு நழுவுவதாலும் முதுகு வலி ஏற்படலாம். இதற்கு எளிமையான பயிற்சியின் மூலம் தீர்வு காணலாம். முதுகுப்புறம் தரையில் படும்படியாக படுத்துக்கொண்டு, குதிகால்களை மடக்கி, நாற்காலி மேல் வைத்துக் கொள்ள வேண்டும்.
குதிகால்களுக்கு தலையணை வைத்துக் கொள்ளலாம். இப்படி ஒன்று அல்லது இரண்டு நாள்களுக்குச் செய்து வரவும்.
நீண்ட நேரம் இவ்வாறு செய்யாமல் சிறிது நேரம் நடந்து விட்டு பயிற்சி செய்யவும். மேலும் சூட்டு ஒத்தடம் 20 – 30 நிமிஷங்களுக்குக் கொடுத்தாலும் வலி குறையும்.
வலி குறைய…: உயரத்துக்கு ஏற்ற உடல் எடையைப் பராமரிப்பது அவசியம். உட்காரும்போதும் நிற்கும்போதும் தூங்கும்போதும் சரியான நிலைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.
குனிந்து எந்த ஒரு அதிக சுமையுள்ள பொருளையும் தூக்க வேண்டாம். மாறாக முழுங்காலை ஊன்றி, பிறகு தூக்க வேண்டும். நீண்ட தூரம் கார்களை ஓட்டுவோர், விட்டு விட்டு ஓய்வுக்குப் பின் பயணம் செய்வது நல்லது. ஹீல்ஸ் இல்லாத காலணிகளை அணிவது நல்லது. நாற்காலியில் எப்போதும் நேராக நிமிர்ந்து உட்கார வேண்டும். தொடர்ந்து நிற்பவர்கள் கால்களை மாற்றி மாற்றி ஓய்வு கொடுக்கப் பழக வேண்டும்.
தரையில் மல்லாந்து படுத்துக் கொண்டு லேசாக இடது காலை மடக்கி, நெஞ்சுக்கு நேராகக் கொண்டு வரவும். ஐந்து வினாடிகள் அப்படியே இருக்கவும். பின் பழைய நிலைக்குக் கொண்டு வரவும். பின்பு வலது காலை மடக்கி இது போல் செய்யவும்.
இப்படியே மாறி மாறி 10 முறை செய்தால், முதுகு வலி குறையும். புத்துணர்வு கிடைக்கும்.
குழந்தை சாப்பிட அடம் பிடித்தால்…
தேர்வு முடிவுகள் வெளியாகும் காலம் இது. “என் குழந்தையும் முதல் மதிப்பெண் வாங்கிடுமா’ என ஒவ்வொரு பெற்றோரும் ஏக்கப் பெருமூச்சுடன் தத்தம் குழந்தையை தொடர்ந்து தயார்படுத்தும் உத்வேகம் இயல்பானது.
சுவர் இருந்தால்தான் சித்திரம் தீட்ட முடியும்! அறிவுத் திறன் கொண்ட குழந்தைக்கு ஆரோக்கியமான உடல் நலம் அவசியம். ஆனால், ஆரோக்கியத்தை அருகில் உள்ள கடையிலோ அல்லது பெரிய “ஷாப்பிங் மால்’களில் வாங்க முடியாது. கொஞ்சம் மெனக்கெடத்தான் வேண்டும்.
ஆரோக்கியத்தின் அடையாளம்: “பால்குடி’ மறக்கும் நிலையிலேயே “ப்ரீ கே.ஜி.’, “எல்.கே.ஜி.’ என படிக்க அனுப்பும் காலச் சூழலில் உள்ள நாம், குழந்தைகளை சத்தான உணவுகளைச் சாப்பிட வைப்பதுதான் முதல் சவால். நல்ல பசியுள்ள, சுறுசுறுப்பான சேட்டை செய்யும் குழந்தை ஆரோக்கியத்தின் அடையாளம்.
“சேட்டையெல்லாம் இருக்கிறது; குழந்தை சாப்பிடத்தான் மறுக்கிறது’ என்று சொன்னால், நோய் எதிர்ப்பாற்றல் நாளடைவில் குறையத் தொடங்கி விடும். பசியை எப்படி உண்டு பண்ணுவது – அந்த மந்திரம் தெரியுமா எனப் பல தாய்மார்கள் பதறிக் கேட்பது உண்டு. சித்த மருத்துவத்தில் “பசித் தீ தூண்டிகள்’ என்று நம் முன்னோர் பல மூலிகைகளை அடையாளம் காண்பித்துள்ளனர்.
உரை மருந்து – அஸ்திவாரம்: குழந்தை பிறந்து 3 மாதம் ஆன உடனே, அதற்கு பசியைத் தூண்டுவதற்கான முயற்சி தொடங்கி விடுகிறது. “கடுக்காய், மாசிக்காய், அதிமதுரம், வசம்பு, அக்கரகாரம்’ என மூலிகைகள் அடங்கிய உரை மருந்தை 3 மாத குழந்தையாயிருக்கும் போதே கொடுக்க ஆரம்பித்தால் “ரெடிமேட் போஷாக்கு’ உணவுகள் பக்கம் போக வேண்டியிருக்காது.
குழந்தை வளர வளர நவ தானியங்களான திணை, ராகி, கம்பு, சோளம், பயறு வகைகள் அடங்கிய சத்துமாவு கஞ்சி, பனைவெல்லம் சேர்த்து தினம் ஒரு வேளை கொடுக்க வேண்டும்.
2 – 3 வயதில் ஓடி விளையாட ஆரம்பித்ததும் “சாப்பிட மாட்டேன்’ என குழந்தை அடம் பிடிப்பதும், காற்றடித்தால் பறந்துவிடும் அளவுக்கு தகடாக இருப்பதும் பல பெற்றோருக்குப் பெருத்த கவலை. பஞ்சதீபாக்னி (சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலக்காய், சீரகம் ஆகிய ஐந்தும் சேர்ந்த தூள்.), தேற்றான் முதலிய சித்த மருந்துகளை மருத்துவரின் ஆலோசனைப்படி கொடுத்து வந்தால், பசி அதிகரித்து உடல் எடை கண்டிப்பாகக் கூடும்.
மருத்துவர் ஆலோசனை எதற்கெனில், உடல் எடை குறைவு எதனால் என்பதைத் தெளிவாகக் கணிப்பது மிக அவசியம், சாதாரண வயிற்றுப் புழுக்கள், ரத்த சோகை, மாந்தம், கணை (”பிரைமரி காம்ப்ளக்ஸ்’) எனப் பல காரணங்கள் “”ஒல்லிக்குச்சி உடலுக்கு” உண்டு.
இது தவிர அக்கறையின்மை எனும் பழக்கவழக்க நோயும் காரணமாக இருக்கலாம். “வருமுன் காப்போம்’ என்ற மூதுரைப்படி பின்னாளில் நல்ல உடல் நலத்துடன் சாதிக்க வேண்டுமெனில் இந் நாளிலேயே உடல் வலுவை அதிகரித்துக் கொள்ள வேண்டும்.
கண் கூர்மையைப் பெருக்கும் பொன்னாங்கண்ணி, புத்தி கூர்மையைப் பெருக்கும் பிரமி, வல்லாரை, நோய் எதிர்ப்பாற்றலை வளர்க்கும் நெல்லிக்காய், சீந்தில் என சித்த மருத்துவம் சொல்லும் எளிய மூலிகைகளை முறையாக ஆலோசித்து பெற்றுச் சாப்பிட வைத்தால் நாளைய தலைமுறை நிச்சயம் வெல்லும் என்பதில் சந்தேகமில்லை.

இருபது வயதினருக்கும்… கிட்னி ஸ்டோன் பிரச்னை உணவை மாற்றினால் தப்பலாம்

அறுபது வயதினருக்கு ஏற்படும் பல உடல் கோளாறுகள் இப்போது, இருபது வயதினருக்கு கூட வருகிறது. காரணம், உணவுப்பழக்கத்தில் ஏற்பட்ட நவீன மாற்றங்கள் தான். பிட்சா, பர்கர் போன்ற ஜங்க் புட் பழக்கம் தான் இதற்கு காரணம்.
இந்த வகையில், நாற்பது வயதில் இருந்து அறுபது வயது வரை உள்ளவர்களுக்கு வந்து கொண்டிருந்த “கிட்னி ஸ்டோன்’பிரச்னை, இருபது வயதினருக்கு சகஜமாக வருகிறது. ஒபிசிட்டி, அதிக உப்பு, காரமுள்ள உணவு வகைகள், கால்சியம் மாத்திரைகள் ஆகியவை தான் காரணம் என்று டாக்டர்கள் கூறுகின்றனர்.
கிட்னி ஸ்டோன் என்பது, ஆண்களுக்கு தான் வரும்; பெண் களுக்கு மிக அரிது; ஆனால், சமீப காலத்தில், 20 -30 வயதுகளில் உள்ள ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமான எண்ணிக்கையில் இந்த பாதிப்பு ஏற்படுகிறது.
வருவது ஏன்
கிட்னியில் கற்கள் சேர்ந்து தொந்தரவு செய்ய காரணம் பல இருந்தாலும், அது ஏற்படுவதற்கு காரணம், சிறுநீர் போகும் போது, அதில் உள்ள துகள்கள், திடமாகி கற்களாக மாறுகிறது. இதில் 75 சதவீத கற்கள், கால்சியம் மற்றும் ஆக் சலேட் தொடர்பான கற்கள் தான். உப்பு சார்ந்த உணவுகளால் சிறுநீரில் உள்ள உப்புச்சத்துக்கள், கற் களாகின்றன. அதுபோல உணவுகளில் உள்ள கழிவுகளில் ஆக்சலேட் என்ற கழிவு பிரிகிறது. அதுவும் கால்சியத்துடன் சேர்ந்து கற்களை உருவாக்குகிறது. இரண்டும் சிறுநீருடன் வெளியேறாமல் திடமாகி விடுகின்றன. இது தவிர, கால்சியம் பாஸ் பேட் கற்களும் சேர்கின்றன. சில சமயம், சிறுநீரில் உள்ள அமிலச்சத்து, திடமாகி கற்களாகின்றன. இப்படி பலவகையில் கற்கள் ஏற்படுகின்றன.
ஆரம்பம் எப்படி
சிறுநீரக கற்கள் உருவாவதற்கு காரணம், போதுமான தண்ணீர் குடிக்காமல் இருப்பது தான் என்று முன்பு சொல்வதுண்டு. உடலுக்கு போதுமான தண்ணீர் தேவை. அது வறண்டுபோகக்கூடாது. அதனால், நாளுக்கு மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று டாக்டர்கள் சொல்வர்.
தண்ணீராகவோ, பழ ரசமாகவோ , திரவ உணவாகவோ உடலுக்குள் போக வேண்டும். அப் போது தான் இப்படிப்பட்ட சிறுநீரக கற்கள் சேராது. உப்பு சார்ந்த பிஸ்கட், உணவுகள் சாப்பிடுவோருக்கு இந்த பிரச்னை எளிதில் ஏற்படும்.அதனால், உணவிலும் உப்பைக் குறைப்பது மிக நல்லது. இதுபோல, அதிக சர்க்கரையும் ருசிக்கக்கூடாது.
என்ன சாப்பிடலாம்
கிட்னி ஸ்டோன் வராமல் தடுக்க மட்டுமல்ல, உடல் ஆரோக்கியத்துக்கும் தண்ணீரும், ஜூஸ் களும் அடிக்கடி சாப்பிடுவது நல்லது. உடல் வற்றிப் போகக் கூடாது என்பதற்கு இந்த இரண்டும் முக்கியம். ஆனால், இளம் வயதினருக்கு இரண்டுமே எதிரிகள்.
டப்பாவிலும், பாட்டிலிலும் அடைக்கப்பட்ட கோலா ஜூஸ்கள் தான் பிடித்தமானது; அதுபோல, பிட்சா, பர்கர் போன்ற ஜங்க் உணவுகள் சாப்பிடுவதில் தான் அதிக அக்கறை டீன் ஏஜினருக்கு.அதை மாற்றி, காய்கறி மற்றும் புரூட் சாலட்களை சாப்பிடலாம்; தினமும் மூன்று லிட்டர் தண்ணீர் குடித்தால், தோலிலும் பளபளப்பு அதிகரிக்கும்.
கால்சியம் குறைக்கலாமா
கிட்னி ஸ்டோனில் கால்சியம் கற்கள் தானே இருக்கிறது; அதனால், கால்சியம் இல்லாத உணவுகளை சாப்பிடலாம்; பால் போன்ற பொருட்களை விட்டுவிடலாம் என்று சிலர் தவறான யோசனை சொல்வர். அது தவறு. கால்சியம் கற்கள் என்பதால், அது தொடர் பான உணவுகளை கைவிட்டுவிட்டால் வேறு வகையில் பாதிப்பு வரும். கால்சியம் மாத்திரைகளை விழுங்குவோர் மட்டும், அதை தவிர்க்கலாம். இதற்கு டாக்டரின் யோசனை கேட்க வேண்டும்.
சிகிச்சை என்ன
சிறுநீரக கற்கள் என்பது சிலருக்கு சிறிய அளவில் இருக்கும். அவற்றை சில பயிற்சிகள், மருந் தால் சரி செய்து விட முடியும். சிலருக்கு பெரிதாக இருக்கும். அதை அகற்ற அறுவை சிகிச் சை தான் ஒரே வழி. இப் போது இந்த வகை கோளாறுகளை சரி செய்ய நவீன சிகிச்சைகளும் வந்துவிட்டன. ஒலியை கிளப்பிக்கூட கற்களை கரையச்செய்யும் “லித் தோட்ரிப்சி’ முறையும் உள்ளது. லேசர் கருவி மூலமும் கற்களை கரைக்கலாம். ஆனால், இவற்றால், சிறுநீரக திசுக்கள் பாதிக்கப்படாமல் பார்த் துக்கொள்ள வேண்டும். சிலருக்கு “கோல்ப்’ பந்து அளவுக்கு கூட சிறுநீரக கல் இருக்கலாம். அதற்கு அறுவை சிகிச்சை தவிர வேறு வழியில்லை.
ஒபிசிட்டி உள்ளவர்கள்…
சிறுநீரக கற்கள் யாருக்கு வரும் என்றெல்லாம் சரியாக சொல்ல முடியாது; இருபது வயதை தாண்டியவர்களுக்கும் வருவதால், அவர்கள் உஷாராக இருக்க வேண்டும். குண்டாக (ஒபிசிட்டி) இருப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சரியாக சிறுநீர் போகாமல் இருந்தால், டாக்டரிடம் காட்டலாம். சிறுநீரக கற்கள் உள்ளவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற பிரச்னைகளும் ஏற்பட வாய்ப்புண்டு. அதனால், இதெல் லாம் வராமல் பார்த்துக்கொள்ள உணவு முறையில் இளம் வயதினர் மாற்றத்தை கொண்டு வந்தால் நல்லது.
அசட்டையாக இருப்பவரா நீங்க?

இனி உஷார்
“சே, இவ்ளோ தானா… கண்டிப்பா இனி பாலோ பண்ணனும்…ன்னு நினைப்பீர்கள். ஆனால், அசட்டையாக இருந்து விடுவீர்கள், இனி அப்படி வேண்டாமே. கொழுப்பு எவ்ளோ: ஆண்களின் மொத்த எடையில், 12ல் இருந்து 18 சதவீதம் வரை கொழுப்பு இருக்கலாம்; அது போல பெண்களுக் குள்ள மொத்த எடையில் 19ல் இருந்து 26 வரை இருக்கலாம். அதற்கு மேல் இருந்தால் கவனிக்க வேண்டும். ஒரு நாள் உணவில் 30 -40 கிராம் தான் கொழுப்பு நம் உடலில் சேரும் படி சாப்பிட வேண்டும். அதனால், தான் அதிக சதவீதம், கொழுப்புள்ள உணவுகளை குறைத்துக்கொள்ள வேண்டும்.
லிபிட் ப்ரொபைல்: முன் பெல்லாம் கொலஸ்ட்ரால் என்றாலே என்னவென்றே தெரியாது. இப்போது இதய பாதிப்பு வருவதை சொல்ல, கொலஸ்ட்ரால் மட்டுமல்ல லிபிட் ப்ரொபைல் சோதனை முக்கியம். ரத்தப்பரிசோதனை செய்து கொண்டால், கெட்ட கொழுப்பு, நல்ல கொழுப்பு, கொலஸ்ட்ரால் எல்லாம் தெரிந்து விடும்.
ரத்தப்பரிசோதனையில், ட்ரைகிளிசரைட்ஸ் என்பது கொழுப்பு அளவை காட்டிக்கொடுக்கும். இது அதிகமாக இருந்தால் கொலஸ்ட் ரால் அதிகம் இருக்கிறது என்று பொருள்.
பி.எம்.ஐ., 30: பாடி மாஸ் இன் டெக்ஸ் என்று சொல்லப்படும் பி.எம்.ஐ., ஒருவரின் ஒபிசிட்டி, அதிக எடையை காட்டிக்கொடுக் கும். உடல் எடை எவ்வளவு கிலோ என்பதை பார்த்து, அதில் இருந்து உயரம் அளவை மீட்டரில் வகுக்க வேண்டும்.
பி.எம்.ஐ., 22.9ஐ தாண்டக் கூடாது. அதிக பட்சம் 30க்கு இப்படி, அப்படி என்று இருந்தால், டாக்டரிடம் காட்டி விடுவது தான் நல்லது. இதய பாதிப்பு, சர்க்கரை நோய் என்ற பலவற்றுக்கும் இது தான் அடித்தளம்.
ஐ.ஜி.ஐ., உணவு: பச்சைக்காய்கறிகள், பழங்கள், நார்ச்சத்துள்ள உணவு பொருட்கள் தான் ஆரோக்கியமான உணவு வகைகள்.”லோ கிளிசமிக் இன்டெக்ஸ்’ (ஐ.ஜி.ஐ.,) உணவுகள் தான் மிக நல்லது. பார்லி, சப்பாத்தி, சேமியா, மக்காச்சோளம், கோதுமை பிரட், கொழுப்பு நீக்கப்பட்ட பால், தக்காளி, பட்டாணி போன்ற தானியங்கள் ஆகியவை நல்லது.
“ஹை கிளிசமிக் இன்டெக்ஸ்’ (எச்.ஐ.ஜி.,) எனப்படும், பைனாப் பிள், உலர்ந்த திராட்சை, உருளை, பரங்கி, சக்கரை வள்ளிக்கிழங்கு ஆகியவை தவிர்க்க வேண்டும். ரீபைண்ட் ஆயிலை தவிர்க்க வேண் டும்; சனோலா ஓகே.
மொடாக்குடியரா: என்னவோ கற்பனை செய்யாதீங்க, காபியில் மொடாக் குடியரா? அதை குறைத்துக் கொள்ளுங்களேன். எல்.டி.எல்., கொழுப்பு அதிகமாகும்; கால்சியம் குறையும். மிதமான காபி குடியர்களுக்கு பிரச்னை இல்லை. ஆன்டி ஆக்சிடென்ட் கிடைக்கிறது. அது மிகவும் நல்லது.
காபி பற்றி நல்ல செய்தியே இல்லையா? இருக்கிறது; நரம்பு தளர்ச்சி பிரச்னை வராது; பர்கின்சன் நோய் எட்டிப்பார்க்காது. டயபடிக்ஸ் உள்ளவர்கள் கூட காபி குடிக்கலாம், டாக்டர் ஆலோசனைப்படி.
எவ்ளோ குடிக்கலாம்: உடலில் 60 சதவீதம் தண்ணீரால் நிரம்பியிருக்கிறது. உடலில் தண்ணீர் வற்றிப்போனால் ஆபத்து தான். ஒரு நாளைக்கு ஒன்றரை லிட்டர் சிறுநீர் வெளியேறுகிறது. வியர்வை, மூச்சு வழியாக ஒரு லிட்டர் தண்ணீர் வெளியேறுகிறது. நாம் சாப்பிடும் உணவு மூலம் 20 சதவீதம் தண்ணீர் கிடைக்கிறது. பொதுவாக ஒருவர் ஒரு நாளைக்கு இரண்டரை முதல் மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். அதாவது, ஆண்கள் 13 கப், பெண்கள் ஒன்பது கப் குடிக்க வேண்டும்.
தூக்கம் வரலியா: பல விஷயங்களால் தூக்கம் வராமல் சிலர் தவிப்பர். அவர்கள் தூக்கம் வராமல் படுக்கையில் புரளக்கூடாது. வெளியில் வந்து, புத்தகம் படிக்கலாம். தானாக தூக்கம் வந்துவிடும். ஐந்து, பத்து நிமிடம், மூச்சுபயிற்சி செய்யலாம். இதிலும் தூக்கம் வராவிட்டால், சாதிக்காய் பவுடரை வெதுவெதுப்பான பாலில் போட்டு குடிக்கலாம்.
“ஏசி’யே கதியா: எப்போதும் “ஏசி’ அறையிலேயே முடங்கி இருப்பவரா? பகலில் நல்ல வெயிலில் கொஞ்சமாவது நடமாடினால் தான் இரவில் சூப்பர் தூக்கம் வரும். சூரிய வெளிச்சம் படும் போது தான் உடலில் வைட்டமின் “டி’ சேர்கிறது. இது தான் தூக்கம் தடைபடாமல் வருவதற்கு மிகவும் முக்கியம். இது போல, தூங்கப் போகும் முன் “டிவி’ பார்க்கக்கூடாது; தூக்கம் வரவில்லையெனில் ஏதாவது படிக் கலாம்; கண்டிப்பாக தூக்கம் வரும். படுக்கை அறையில் முடிந்தவரை காற்றோட்டம் இருப்பது நல்லது.
சின்ன சின்ன யோகா: சிறிய வயதில் ஆரம்பித்தால் தான் நல்லது; இல்லாவிட்டால், யோகா செய்து பலனில்லை என்று சிலர் நினைக் கின்றனர். ஆனால், அடிப்படை யோகா பயிற்சியை கற்றுக் கொண்டாலே போதும், உடலும், உள்ளமும் சுறுசுறு தான். எலும்புகள் வலுவடையும், தசைகள் இறுக்கம் குறையும். தலைவலிக்கு மாத்திரையை தேடவே மாட்டீர்கள்.முதுகு வலி, முழங்கால் வலி, தசை பிடிப்பு என்பதற்கு இடமே இருக்காது.
என்ன…? எப்படி…? ஏன்?
கால் வீங்குவது ஏன்? : அறுவை சிகிச்சைக்கு பின், சிலருக்கு கால் வீங்கி விடும். தொடர்ந்து படுக்கையில் படுத்தபடியே இருப்பவர்களுக்கும் இப்படி பிரச்னை ஏற்படும். இதற்கு பெயர், டீப் வெய்ன் த்ரோம்போசிஸ். கால் நரம்புகளில் ஓடும் ரத்தம் ஒரே இடத்தில் கட்டிவிடுவதால் ஏற்படும் கோளாறு தான் இது. காலில் இப்படி ரத்தம் கட்டிவிடுவதால், மற்ற விரல் பகுதிகளிலும் ஒரு வித இறுக்கம் காணப்படும்; ரத்தம் செல்லாததால் அந்த பகுதிகளும் வீக்கம் காணும்.
இதற்கு, டாக்டர்கள் வலி நிவாரணி மாத்திரையையும், ரத்தம் கட்டாமல் இருப்பதற்கான மருந்தும் தருவர். காலுக்கு பொருந்தாத காலுறை அணிவதால் கூட இப்படி வீக்கம் ஏற்படும். அடிக்கடி இப்படி நேர்ந்தால், ரத்த நாளம் சம்பந்தப்பட்ட டாக்டரிடம் காட்டி சிகிச்சை செய்வது நல்லது.
மூலம் எப்போது மோசம்? : சாதாரண அளவில் மூலநோய் ஏற்படும் போது, அதற்கான அறிகுறிகள் தெரியும். அப்படி எந்த அறிகுறியும் இல்லாவிட்டால், அதற்கான சிகிச்சை பெற வேண்டாம். மூலநோயில், மூன்றாவது, நான்காவது நிலை என்று உள்ளது. அப்படிப் பட்டவர்களுக்கு தான் அறுவை சிகிச்சை தேவைப்படும். அப்போது தாமதிக்காமல், உரிய சிகிச்சை பெற வேண்டும்.
அல்சருக்கு பின்… : குடலில் உள்ள வீக்கம், தொற்றுக் கிருமி பாதிப்பு தான் அல்சர். இதை போக்க உரிய வகையில் டாக்டரிடம் பரிசோதனை செய்து கண்டுபிடித்து அதற்கேற்ப சிகிச்சை செய்து கொள்வது தான் சரியானது. சிலருக்கு அறுவை சிகிச்சைக்கு பின், மலத்தில் ரத்தம் சேர்ந்து வரும்; காஸ் பிரச்னை இருக்கும். சரியான முறையில் பரிசோதிக்காமல், அறுவை சிகிச்சை செய்து விடுவதால் இப்படி நேர்வதுண்டு. ஆசனவாயில் பைல்ஸ் பாதிப்பு இருப்பது தெரியாமல், அல்சருக்கு சிகிச்சை பெறுவோரும் உண்டு. அல்சர் உள்ளவர்களுக்கு மலச்சிக்கல் போன்றவை ஏற்பட வாய்ப்பில்லை. அதனால், சரியான டாக்டரை அணுகி, தெரிந்து கொண்டபின் அல்சரா என்றும் உறுதி செய்வதே சரி.
தையல் போட்டதில் : இதயக் கோளாறு நீங்க, பைபாஸ் ஆபரேஷன் நடந்து முடிந்தபின், அந்த இடத்தில் சிலருக்கு சீழ் ஏற்படலாம்; தையல் பிரியலாம்; இன்னும் சொல்லப்போனால், தையல் போட்ட இழைகள் கூட வெளியே தெரியலாம். இதை உடனே டாக்டரிடம் சொல்லி விட வேண்டும். சிலருக்கு ஆண்டுக்கணக்கில் கூட இப்படிப்பட்ட நிலை நீடிக்கலாம். அப்படிப்பட்டவர்களுக்கு விரிவான சோதனை தேவை. சி.டி.ஸ்கேன் எடுத்த பின், காயத்துக்கு போடப் பட்ட தையல்களை மீண்டும் சரி செய்து, புதிய தையல் போட வேண்டும். இது தொடர்பாக,இதய அறுவை சிகிச்சை நிபுணரை சந்தித்து பரிசோதனை செய்வது முக்கியம்.
மார்பகம் பெரிதாக : மூக்கின் நீளத்தை குறைப்பது மட்டுமல்ல, மார்பகத்தை பெரிதாக்கும் நவீன அறுவை சிகிச்சைகள் வந்துவிட்டன. பிரபல மருத்துவமனைகளில் இதற்காக தனிப்பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. மார்பகம் பெரிதாக்கும் அறுவை சிகிச்சைக்கு குறைந்த பட்சம் ஒரு லட்சம் ரூபாய் செலவாகிறது. இந்த அறுவை சிகிச்சையால் ஆபத்தில்லை. ஆனால், திருமணமான பின், இதை செய்துகொள்ள டாக்டரிடம் முறையாக கருத்து கேட்பது முக்கியம்.
அப்பெண்டிக்ஸ் வலி : குடல் முனையில் ஏற்படும் அழற்சி, வீக்கம் தான் அப்பெண்டிக்ஸ் என்பது. லேப்ராஸ்கோப் முறையில் சிகிச்சை உண்டு. நான்கு நாளில் மாமூல் நிலைக்கு வந்துவிடலாம். ஆனால், அதிக எடை தூக்குவதோ, செக்ஸ் உறவு வைத்துக்கொள்வதோ உடனடியாக மேற்கொள்ளக்கூடாது. ஒரு மாதம் அல்லது ஆறு வாரம் வரை பொறுமையாக இருந்து, காயம் ஆறிய பின் வழக்கமான பணிகளை முழுமையாக மேற்கொள்ளலாம்.
அடிவயிற்றில் : சிலருக்கு அடிவயிற்றில் வலி இருக்கும். சில சமயம், வலது பக்கமும், சில சமயம் இடது பக்கமும் வலி இருக்கும். டாக்டர்கள் பரிசோதனையில் உடனடியாக தெரிய வராது என்பதால், பயத்தில் அப்பெண்டிக்ஸ் டாக்டர் உட்பட சில டாக்டர்களிடம் காட்டுவது உண்டு. சிலர் அப்பெண்டிக்ஸ் என்பர். சிலர், சிறுநீரக கல் இருப்பதாக கூறுவர். ஆனால், ரத்தப் பரிசோதனை, அல்ட்ராசோனோ கிராபி, சி.டி.ஸ்கேன் எடுத்தால், என்ன என்று கண்டுபிடித்துவிட முடியும்.
கருப்பை மாற்றம் : மாற்று கருப்பை அறுவை சிகிச்சை என்பது அரிய விஷயம். தொழில்நுட்ப ரீதியாக இது சிக்கலான விஷயம் இல்லை என்றாலும், நோயாளியின் உடலுக்கு ஏற்றுக் கொள்வது என்பது அரிதானது. இப்போது தான் பிராணிகள் மூலம் இதற்கான சோதனை நடந்துவருகிறது.
வாய் திறந்தபடியே : வயதான காலத்தில் சிலருக்கு, தூங்கும் போது வாய் மூடியிருக்கும்; மற்ற சமயங்களில் வாய் திறந்தபடியே இருக்கும். எப்போது பார்த்தாலும் எச்சில் வழிந்தபடியே கூட இருக்கும். இவர்கள் தூங்கும் போது பெரிதாக தெரியாவிட்டாலும், விழித்திருக்கும் போது, வாய் வலிக்கும். அதனால் வாய் மூட முடியாது. பேஷியல் சர்ஜன் மூலம் பரிசோதனை செய்தால் என்ன காரணம் என்று தெரியும். அவரின் ஆலோசனைப்படி சிகிச்சை பெறலாம்.


வெயிலில் தலைகாட்டாமல் “ஏசி”யிலேயே இருப்பவரா?


எப்போதும் “ஏசி’ அறையில் அமர்ந்திருப் பது, வெயிலில் தலைகாட்டாமல் இருப்பது போன் றவை வைட்டமின் – டி சத்துக்குறைவில் கொண்டுபோய் விட்டு விடும். வைட்டமின் – டி குறைபாட்டால், எலும்பு பாதிப்பு அதிகமாக ஏற்படும்.
ஏன் வருது?
* எப்போதும் அறைக்குள் முடங்கியிருப்பது.
* அடிக்கடி சன் ஸ்கிரீன் பயன்படுத்துவது.
* கால்சியம் சத்து குறைவாக எடுத்துக்கொள்வது.
* வைட்டமின் சத்தில்லா காய்கறி உணவு அதிகம் சாப்பிடுவது.
* அதிக பனி உள்ள பகுதியில் வசிப்பது.
தடுப்பு வழி
* ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 30 நிமிடமாவது வெயிலில் உடல் பட வேண்டும்.
* ஒரு லிட்டர் பாலுக்கு இணையான கால்சியம் உணவு தேவை.
* மாமிச உணவுகளில் கால்சியம் சத்து அதிகம்.
எப்போதும் “ஏசி’ அறையில் இருப்பது இப்போது அதிகமாகி வருகிறது. சாப்ட்வேர் நிறுவனங்களில் பணியாற்றும் இளம் தலைமுறையினருக்கு வெயில் என்றாலே தெரியாத நிலை ஏற்படுகிறது. இதனால், அவர்களுக்கு வைட்டமின் – டி சத்து குறைவாக வாய்ப்பு அதிகம் என்பதால் எலும்பு பாதிப்பு அதிகமாக வரும்.
சர்வே சொல்லுது: இது போல, சமீபத்தில் வட மாநிலங்களில் எடுத்த சர்வேயில், 75 சதவீத மக்களுக்கு, குறிப்பாக குழந்தைகளுக்கு வைட்டமின் – டி சத்து குறைபாடு உள்ளதும் தெரியவந்தது. இதனால், வைட்டமின் – டி சத்துக்குறைபாட்டை நீக்க மத்திய அரசின் சுகாதார அமைச்சகம் தனி திட்டத்தை தீட்டி வருகிறது. கிராமங்களில் சூரிய ஒளி படுவது அதிகம்; ஆனால், உணவில் கால்சியம் சத்து குறைவு. ஆனால், நகர்ப்புறங்களில், சூரிய வெளிச்சம் படுவது குறைவு; ஆனால், உணவில் கால்சியம் சத்து அதிகம் கிடைக்கிறது.
புற்றுநோயும் வரும்: வைட்டமின் -டி சத்துக் குறைபாட்டால், சுவாசகோளாறு முதல் புற்றுநோய் வரை கூட வர வாய்ப்பு அதிகம். காசநோய்க்கும் இது காரணமாக அமைகிறது. வயது, கல்வி, பொருளாதார நிலை போன்றவற்றை தாண்டி பல தரப்பினரிலும் வைட்டமின் – டி சத்துக் குறைபாடு உள்ளது தெரியவந்துள்ளது. வைட்டமின் “டி’ இருந்தால் தான் கால்சியம் சத்தை கட்டுப்படுத்தும்; அதை கட்டுப்படுத்தாமல் போனால் பல பாதிப்புகள் வர வாய்ப்புள்ளது.

எந்த உணவில் எவ்வளவு சர்க்கரை?



சாப்பிடும் உணவுப் பொருளுக்கு ஏற்ப ரத்தத்தில் சர்க்கரை அளவு உயரும் என்பதால், அன்றாடம் சாப்பிடும் உணவில் சர்க்கரை நோயாளிகள் கவனமாக இருக்க வேண்டும். சர்க்கரை நோயாளிகளுக்கு உதவுவதற்காகவே கிளைசிமிக் இண்டெக்ஸ் (Glycemic Index) என்ற உணவு ஒப்பீட்டு அட்டவணை உள்ளது. அதாவது ஏற்கெனவே ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவோடு நாம் சாப்பிடும் உணவுப் பொருள்களால் கூடுதலாகும் சர்க்கரை அளவை 100 கிராம் குளுக்கோஸýடன் ஒப்பிடுவதே கிளைசிமிக் இண்டெக்ஸ் ஆகும்.
உதாரணமாக ஒருவருக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு 100 மி.கி. இருப்பதாகக் கொள்வோம். அவர் 100 கிராம் குளுக்கோஸ் சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு மேலும் 100 மி.கி. கூடுதலாகி மொத்தம் 200 மி.கிராமாக அதிகரிக்கும்.
அவர் ஒரு குளோப் ஜாமூன் சாப்பிடுகிறார் என்று வைத்துக்கொள்வோம், சர்க்கரையின் அளவு ரத்தத்தில் 300 மி.கிராமாக உயரும். ஆனால் அவரே குளோப் ஜாமூனுக்குப் பதில் 100 கிராம் கொண்டைக் கடலை சுண்டல் சாப்பிட்டால் 40 மி.கி. தான் ரத்தத்தில் சர்க்கரை அளவு உயரும்.
சாப்பிடும் உணவுக்கு ஏற்ப ரத்தத்தில் அதிகரிக்கும் சர்க்கரையின் அளவு கீழே தரப்பட்டுள்ளது.
பானங்கள் (200 மி.லி அளவு):
* தண்ணீர் குடித்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவில் எந்த மாற்றமும் இருக்காது.
* நீர்த்த மோர் குடித்தால் 10 மி.கி. அதிகமாகும்.ஏ சர்க்கரை இல்லாத பால் அல்லது காபி சாப்பிட்டால் 40 மி.கி. .ஏ சர்க்கரை போட்ட காபி குடித்தால் 140 மி.கி..
* உப்புப் போட்ட எலுமிச்சை பழச்சாறு அல்லது தக்காளி பழச்சாறு குடித்தால் 30 மி.கி..ஏ இளநீர் குடித்தால் 40 மி.கி..
* கஞ்சி குடித்தால் (சத்துமாவு கஞ்சி) 100 மி.கி.
* இனிப்பான குளிர்பானங்கள் குடித்தால் 150 மி.கி.
* பழச்சாறு குடித்தால் 150 மி.கி. உடன் சர்க்கரை சேர்த்தால் 250 மி.கி.
* மில்க் ஷேக் குடித்தால் 300 மி.கி.
எனவே 50 மி.கி.-க்கும் குறைவாக ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கும் பானங்களைக் குடிக்கலாம்.
உணவு வகைகள்
உணவு வகைகள் (100 கிராம் சாப்பிட்டால் அதிகரிக்கும் சர்க்கரை அளவு):
* கீரைத் தண்டு, வாழைத் தண்டு சாப்பிட்டால் 10 மி.கி.
* வாழைக்காய் தவிர பிற காய்கறிகள் 20 முதல் 30 மி.கி. அதிகமாகும்.
* பயறு மற்றும் பருப்பு சாப்பிட்டால் 30 முதல் 40 மி.கி.
* கேழ்வரகு அல்லது கோதுமை சாப்பிட்டால் 50 முதல் 55 மி.கி.
* அரிசி சாப்பிட்டால் 55 முதல் 60 மி.கி..
* கம்பு சாப்பிட்டால் 60 முதல் 70 மி.கி.
* உருளைக் கிழங்கு, வள்ளிக்கிழங்கு சாப்பிட்டால் 100 முதல் 150 மி.கி.
* இனிப்பு வகைகள் சாப்பிட்டால் 150 முதல் 300 மி.கி.
* எனவே ரத்தத்தில் சர்க்கரையின் அளவை 10 முதல் 30 மி.கி. வரை அதிகரிக்கும் உணவுகளை அதிகம் சாப்பிடலாம்.
* 30 முதல் 60 மி.கி. வரை சர்க்கரையை அதிகரிக்கும் உணவு வகைகளைத் திட்டமாகச் சாப்பிடலாம்.
* 60 மி.கி.க்கு மேல் சர்க்கரையை அதிகரிக்கும் உணவுகளை முடிந்த அளவு தவிர்க்கவேண்டும். 150 மி.கி. மேல் அதிகமாக்கும் உணவுகளைக் கண்டிப்பாகச் சாப்பிடக் கூடாது. இவ் வகை உணவுகளைச் சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வராது. மேலும் சர்க்கரை நோய் நாளுக்கு நாள் மோசமடையும். எவ்வித சிகிச்சையும் பலன் தராது. இந் நோயின் பின் விளைவுகள் விரைவில் வரும்.
பழங்கள் (100 கிராம்)
* தக்காளி, எலுமிச்சை 20 முதல் 30 மி.கி..
* வெள்ளெரி, கிர்ணி, பப்பாளி – 30 முதல் 40 மி.கி.
* கொய்யா, ஆப்பிள், சாத்துக்குடி, கமலா ஆரஞ்சு – 40 முதல் 60 மி.கி..
* மா, பலா, வாழை – 100 முதல் 150 மி.கி.
* பேரீச்சை, திராட்சை, சப்போட்டா – 150 முதல் 250 மி.கி.
* ரத்தத்தில் சர்க்கரை அளவை 60 மி.கி. வரை அதிகரிக்கும் பழங்களை மட்டும் சாப்பிடலாம். மற்றவற்றைச் சாப்பிட்டால் சர்க்கரை நோயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியாது.
ரத்தத்தில் சர்க்கரை அளவு
உடல் ஆரோக்கியமாக உள்ளவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு
எதுவும் சாப்பிடாமல் (வெறும் வயிற்றில்) – 60 முதல் 110 மி.கிராம் சதவீதத்துக்குக் குறைவாக
சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்து… 80 முதல் 140 மி. கிராம் சதவீதத்துக்குக் குறைவாக
கட்டுப்பாட்டில் உள்ள சர்க்கரை நோயாளிக்கு…
எதுவும் சாப்பிடாமல்….80 முதல் 120 மி.கிராமுக்குள் இருக்கவேண்டும்.
சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்து…140 முதல் 160 மி.கிராமுக்குள் இருக்கவேண்டும்.
முக்கியம்: காலையில் வெறும் வயிற்றில் ரத்தத்தைப் பரிசோதனைக்குக் கொடுக்க வரும்போது தண்ணீர் மட்டுமே குடிக்கலாம். காபி, டீ, பால், சிகரெட், மது மற்றும் மருந்துகளை எடுத்துக் கொள்ளக்கூடாது.
சர்க்கரை நோயாளிகளாக இருக்கும் நிலையில்சாப்பிட்ட பின் வழக்கமான மாத்திரை அல்லது இன்சுலின் ஊசி மருந்து போட்டுக் கொண்டு இரண்டு மணி நேரம் கழித்தே ரத்தத்தைப் பரிசோதனைக்குக் கொடுக்க வேண்டும்.

சர்க்கரை’: தினம் பாத பூஜை செய்ய மறந்துடாதீங்க

இந்தியாவில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது நாடு முழுவதும் உள்ள சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை 2 கோடி. உலக சுகாதார நிறுவனத்தின் கணிப்புப்படி இந்த எண்ணிக்கை 2025-ல் 5.7 கோடியாக உயரும்.
சர்க்கரை நோய் காரணமாக இதயம், சிறுநீரகங்கள், கண்கள் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதனால் மருத்துவச் செலவும் அதிகமாகிறது. எனினும் சர்க்கரை நோய் காரணமாக கால்கள் பாதிக்கப்படுவோர் அதிகம். எங்கும் நகர விடாமல் ஆளை முடக்கி விடும் சக்தி சர்க்கரை நோய்க்கு உண்டு. சர்க்கரை நோய் காரணமாகவே 40 முதல் 72 சதவீதம் பேர் கால்களை இழக்கின்றனர். எனவே “சர்க்கரை நோயும் கால்களும்’ என்பதைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது.
55 வயது ஆகும்போது…: உடலில் கால்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஒவ்வொரு காலிலும் 26 எலும்புகள், 19 தசைகள், 32 இணைப்பு மூட்டுகள் (Joints) உள்ளன. ஒருவர் 55 வயதை எட்டும் நிலையில், தனது வாழ்நாளில் 70 ஆயிரம் மைல்கள் நடந்திருப்பார். அதாவது உலகை இரண்டு முறை சுற்றிவருவதற்கு இத் தொலைவு சமம்.
முக்கிய அறிகுறிகள்: ரத்தத்தில் சர்க்கரை அளவு இயல்பான அளவை (சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்து 120-140 மி.கி.) தாண்டும்போது உடலில் கோளாறுகள் தெரிய ஆரம்பிக்கும். அதிக தாகம், அடிக்கடி சிறுநீர் கழித்தல், காயம் ஏற்பட்டால் ஆறாமல் இருத்தல் ஆகிய அறிகுறிகள் ஏற்பட்டால் ரத்த சர்க்கரை அளவை உடனடியாகப் பரிசோதனை செய்துகொள்வது அவசியம்.
உணர்ச்சி குறைதல்: ரத்தத்தில் சர்க்கரை (குளுக்கோஸ்) அளவு அதிகரிக்கும் நிலையில், கூடுதல் குளுக்கோஸ் ஆற்றலாக மாறாது; அது “சார்பிடால்’ என்ற வேதிப்பொருளாக மாறும். இந்த வேதிப் பொருள் கால்களில் உள்ள சிறு சிறு நரம்புகளைப் பாதிக்கத் தொடங்கும்.
இதனால் காலில் உணர்ச்சி குறையத் தொடங்கும். உணர்ச்சி குறைவதால் காலில் ஏதாவது குத்தினால்கூடத் தெரியாது. இரவில் படுத்தவுடன் பாதத்தில் எரிச்சல் ஏற்படும். ஊசியால் குத்துவதுபோல் வலி இருக்கும். பகலில் நடக்கும்போது பஞ்சு மெத்தையில் நடப்பதுபோல் இருக்கும்.
ஆடு சதையில் குடைச்சல்: ஒரு சில சர்க்கரை நோயாளிகளுக்கு ஆடு சதையில் குடைச்சல் ஏற்படும். கால் நரம்புகளின் பாதிப்பு காரணமாக ரத்த ஓட்டம் குறைந்து ஆடு சதையில் வலி உருவாகும். இவையெல்லாம் “சார்பிடால்’ வேதிப்பொருள் ஏற்படுத்தும் விளைவுகள். இவ்வாறு அதிக சர்க்கரை காரணமாக கால் நரம்புகள் பாதிக்கப்படுவதற்கு “டயபட்டிக் நியுரோபதி’ என்று பெயர். எனவே பாதத்தில் எரிச்சல் உள்பட அறிகுறிகள் தெரியத் தொடங்கிய உடனேயே மருத்துவரைச் சந்திப்பது அவசியம்.
சேற்றுப் புண்: தண்ணீரில் அதிகம் வேலை செய்வதால் பெண்களுக்கு கால் விரல் இடுக்குகளில் சேற்றுப் புண் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். ரத்தத்தில் அதிக சர்க்கரை இருந்தால், கிருமிகள் புண்ணை ஆறவிடாமல் செய்துவிடும். எனவே சர்க்கரை நோய் உள்ள பெண்கள், விரல் இடுக்குகளில் புண் ஏற்படாமல் பார்த்துக்கொள்வது அவசியம். விரல் இடுக்குகளை அவ்வப்போது துடைத்து உலர்ந்த தன்மையோடு பராமரிப்பது அவசியம்.
அலட்சியம் வேண்டாம்: பலவீனம் காரணமாகவே காலில் எரிச்சல், குடைச்சல், வலி ஏற்படுகிறது என அலட்சியமாக இருந்து விடாதீர்கள். ஏனெனில் மேற்சொன்ன அறிகுறிகளை “அறிவித்த’ பிறகு, ரத்தத்தில் உள்ள அதிக சர்க்கரை அளவு ஒரு காயத்துக்காகக் காத்திருக்கும்.
பிரச்சினை ஏதுமில்லாமல் உடல் ஆரோக்கியமாக உள்ளவர்களுக்கு காயம் ஏற்படும்போது, ரத்த வெள்ளை அணுக்கள் காயத்தைச் சூழ்ந்து போர் வீரர்களாகச் செயல்படும்; அதாவது வெளியிலிருந்து எக்கிருமியையும் காயத்துக்குள் அவை அனுமதிக்காது.
ஆனால் அதிக சர்க்கரை அளவு காரணமாக காலில் காயம் ஏற்படும் நிலையில், ரத்த வெள்ளை அணுக்களின் போர்க் குணம் செயலிழந்த தன்மைக்குச் சென்று விடும். ஆக, வெளியில் உள்ள கிருமிகளுக்குக் கொண்டாட்டம்தான். சிறிய கீறல், சீழ் கொண்ட ஆறாத புண்ணாக மாறும்.
நடக்க முடியாது: சிறிய கீறல், புண்ணாக மாறிய பிறகும் உரிய மருத்துவ சிகிச்சை செய்து கொள்ளாவிட்டால், காயம் ஏற்பட்ட பகுதி வீங்கத் தொடங்கும். நடக்க முடியாத கடும் வலி இருக்கும். தோலில் சிவப்புப் புள்ளிகளும் ஏற்பட வாய்ப்பு உண்டு.
அப்போதும் கவனிக்காத நிலையில், சீழுடன் கூடிய புண் உள்ள செல்கள் போரில் தோற்று மடியத் தொடங்கும். புண் ஏற்பட்ட இடம் மெதுவாக கருகி அழுகத் தொடங்கும். இவ்வாறு படிப்படியாக காயம் ஏற்பட்ட பகுதி அழுகும் நிலைக்கு “காங்கிரின்’ (Gangrene) என்று பெயர். அந்த இடத்தைத் தொட்டால் “ஜில்’லென்று இருக்கும்.
இரண்டே நாளில்…: இவ்வாறு சிறு காயம், புண்ணாகி அழுகுவதற்கு இரண்டு நாள் அலட்சியம் போதும். காயம் ஏற்பட்ட பகுதியில் செல்கள் முழுவதும் அழுகி மடிந்துவிட்ட நிலையில், நோய்த் தொற்று மற்ற பகுதிகளுக்குப் பரவாமல் தடுக்க கால் விரலை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்ற வேண்டியிருக்கும். பாதம் முழுவதும் அழுகும் நிலையில் முழங்கால் வரை காலை அகற்ற வேண்டியிருக்கும்.
காலைக் காக்க சிகிச்சை என்ன? ஆறாத காயத்துடன் நோயாளி வந்தவுடன், ரத்தத்தில் சர்க்கரை அளவைப் பரிசோதனை செய்ய வேண்டும். ரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால் முதலில் இன்சுலின் ஊசி மருந்து செலுத்தி ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும். இன்சுலின் ஊசி மருந்து போட்டால்தான் காயம் விரைவாக ஆற ஆரம்பிக்கும்.
காயம் ஆறுவதன் அறிகுறி என்ன? தோலுக்குள் உள்ள சீழின் அளவு குறைவாக இருந்தால் மாத்திரைகள் மூலமே கரைத்துவிட முடியும். மாறாக, சீழின் அளவு அதிகமாக இருந்தால், அறுவைச் சிகிச்சை மூலம் அந்த இடத்தைக் கீறி சீழை அகற்ற வேண்டியிருக்கும். காயம் நன்றாக ஆறும் வரை மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சை பெற வேண்டும்.
வீட்டுக்குத் திரும்பியவுடன் காயம் முற்றிலுமாக ஆறும் வரை அந்த இடத்தில் தண்ணீர் படாமல் பார்த்துக்கொள்வது அவசியம். தினமும் காயக் கட்டை மாற்றிக் கொள்ள வேண்டும். அறுவைச் சிகிச்சை செய்ய கீறிய இடத்தில் சிகப்பு நிறம் தெரிய ஆரம்பித்தால் காயம் ஆறிவருவதாகக் கொள்ளலாம். மஞ்சள் நிறம் இருந்தால் ஆறாமல் சீழ் இருப்பதாகக் கொள்ளலாம்.
உயர்வான நிலையில்…: காயம் முழுவதும் ஆறும் வரை காலை உயர்வான நிலையில் தூக்கி வைத்துக் கொள்வது நல்லது. இப்படி வைத்துக்கொண்டால் வலி இருக்காது.
அதிக செலவு தேவையா? மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் 100 சர்க்கரை நோயாளிகளில் 20 பேருக்கு கால் தொடர்பான பாதிப்புகள் இருப்பதைப் பார்க்க முடிகிறது. மேலும் ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளாமல் கால்கள் பாதிக்கப்படும் நிலையில் குறைந்தபட்சம் 12 தினங்கள் மருத்துவமனையில் உள் நோயாளியாக இருக்க வேண்டியிருக்கும். இதனால் ரூ.20 ஆயிரம் வரை செலவாகும். எனவே கால்களைச் சர்க்கரை நோயாளிகள் பாதுகாப்பதே சிறந்த வழியாகும்.
சிறுநீரகங்கள்: ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக உள்ள நிலையில் ஓசையின்றி சிறுநீரகங்களையும் தாக்கத் தொடங்கும். சிறுநீர்ப் பரிசோதனை செய்துகொள்ளாத நிலையில் சர்க்கரை நோயாளிக்கு ஐந்து ஆண்டுகள் கழித்தே சிறுநீரகப் பாதிப்பு தெரியும். சிறுநீரக செயலிழப்பு (Kidney failure) ஏற்படும் நோயாளிகளில் 30 சதவீதம் பேர் பாதிக்கப்படுவதற்கு சர்க்கரை நோயே காரணம்.
எனவே சர்க்கரை நோயாளிகள் முன்னெச்சரிக் கையாக இருப்பதன் மூலம் சிறுநீரக செயலிழப்பை எளிதாகத் தடுத்துக் கொள்ள முடியும். அதாவது, சர்க்கரை நோய் இருப்பது தெரிந்த உடனேயே சிறுநீரகங்களின் செயல்பாட்டைக் கண்டறிய சிறுநீர்ப் பரிசோதனையும் செய்துகொள்வது அவசியம்.
சோதனை என்ன? காலையில் எழுந்தவுடன் முதலில் வெளியேற்றும் சிறுநீரைப் பரிசோதனைக்குக் கொடுக்க வேண்டும். சிறுநீர்ப் பரிசோதனையில் “மைக்ரோ ஆல்புமின்’ என்ற புரதத்தின் வெளியேற்ற அளவு 30 மைக்ரோகிராம் வரை இருந்தால் ஆபத்தில்லை.
இந்த அளவைத் தாண்டியிருந்தால் சர்க்கரை நோய் மருத்துவ நிபுணரின் ஆலோசனைப்படி சிறுநீரகம் பாதிக்கப்படாமல் இருக்க சிகிச்சை எடுத்துக் கொள்வது அவசியம். இதேபோன்று ரத்தப் பரிசோதனையில் யுரியாவின் அளவு 40 மில்லி கிராமுக்கு அதிகமாக இருந்தாலும் சிறுநீரகங்களைக் காத்துக்கொள்ள சிகிச்சை அவசியம்.
உயர் ரத்த அழுத்தமும் சிறுநீரகப் பாதிப்பும்: உயர் ரத்த அழுத்த நோய்க்கும் சிறுநீரகப் பாதிப்புக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. குறிப்பாக சர்க்கரை நோயாளிகள் ரத்த அழுத்த அளவை உயர் நிலையில் 140 எம்எம்எச்ஜி என்ற அளவிலும் கீழ் நிலையில் 90 எம்எம்எச்ஜி என்ற அளவிலும் பராமரிக்க வேண்டும். இந்த அளவில் 1 எம்எம் கூடினால்கூட உஷார் அடைவது நல்லது. ரத்த அழுத்தம் அதிகரிக்கும் நிலையில், அதைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து சிறுநீரகங்கள் பாதிக்கப்படாமல் தடுக்க “ராம்பிரில்’ என்ற சிறந்த மாத்திரை உள்ளது.
மட்டன் வேண்டாம்: உயர் ரத்த அழுத்தப் பிரச்சினை உள்ள சர்க்கரை நோயாளிகள் மட்டனைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அதில் புரதச் சத்து உள்ளது. வாரத்துக்கு இரண்டு நாள்கள் மீன் சாப்பிடலாம். வாரத்துக்கு ஒரு நாள் சிக்கன் சாப்பிடலாம்.
புகை வேண்டாம்: புகை பிடிக்கும் பழக்கம் காரணமாக சிறுநீரகங்களின் ரத்தக் குழாய்களில் பாதிப்பு ஏற்படும். மேலும் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளாமல், சிறுநீரில் ஆல்புமின் (புரதம்) அதிகமாக வெளியேறும் நிலையில் மாரடைப்பு ஏற்படுவதற்கும் வாய்ப்பு உண்டு.
மூன்று தடவை…: சர்க்கரை நோய் இருப்பது தெரிந்தவுடன் ஆறு மாதத்துக்குள் மருத்துவரின் பரிந்துரைப்படி இரண்டு அல்லது மூன்று தடவை சிறுநீரில் மைக்ரோ ஆல்புமின் பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும். அப்பாதுதான் சிறுநீரகங்கள் பாதிக்கப்படாமல் எளிதாகத் தடுத்துக் கொள்ள முடியும்.

சர்க்கரை நோயாளிகளுக்கான கால் பயிற்சிகள்
கெண்டைக்கால் சதையை நீட்டுதல்: முழங்கை மடங்காமல் கைகளை நீட்டி, உள்ளங்கைகளை சுவரில் பதிக்க வேண்டும். கால்கள் சுவரிலிருந்து சிறிது தூரத்தில் இருக்கும் நிலையில் உள்ளங்கால்களால் தரையைக் கெட்டியாக அழுத்தியபடி நிற்கவேண்டும். பின்னர் கைகளை மடித்து, நீட்ட வேண்டும். அதேசமயம் உடல், கால்கள், பாதங்கள் நேராக இருக்கும்படியும் வைத்து முன்னும் பின்னும் அசையவேண்டும். இப் பயிற்சியை 10 முறை செய்யவும். இப் பயிற்சியால் கெண்டைக்கால் பிடிப்பு நீங்கும். கால் மரத்துப் போகாது.
குதிகாலை உயர்த்துதல்: பாதத்தின் முன்பகுதியை அழுத்தி குதிகாலை உயர்த்தி, தாழ்த்த வேண்டும். இதுபோல் 20 முறை செய்யவேண்டும். உங்கள் உடலின் முழு எடையையும் ஒரு காலில் தாங்கிக்கொண்டு நிற்க வேண்டும். இன்னொரு காலுக்கும் அதே போல் செய்யவும்.
நாற்காலி பயிற்சி: ஒரு நாற்காலியில் உட்காரவேண்டும். கைகளைக் குறுக்காகக் கட்டிக்கொண்டு நாற்காலியில் இருந்து எழுந்து உட்காரவேண்டும். இவ்வாறு 10 முறை செய்யவேண்டும்.
கால் வீசுதல்: ஒரு ஸ்டூலில் ஏறி நின்று அருகில் உள்ள மேஜை அல்லது ஏதாவது ஒன்றைப் பிடித்துக்கொண்டு ஒரு காலை ஸ்டூலில் இருந்து எடுத்து முன்னும் பின்னுமாக வேகமாக ஆட்ட வேண்டும். இதுபோன்று 10 முறை செய்ய வேண்டும். இன்னொரு காலுக்கும் இதே போல் பயிற்சி செய்யவேண்டும்.
நடத்தல்: தினமும் 30 நிமிஷங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை சற்று வேகமாக நடக்கவேண்டும். நடக்கும் தூரத்தைப் படிப்படியாக அதிகரிக்க முயற்சிக்க வேண்டும்.
மாடிப்படி பயிற்சி: பாதத்தின் முன்பகுதியை மட்டும் ஊன்றியபடி மாடிப்படிகளில் வேகமாக ஏறவேண்டும்.
நுனி விரல்கள் பயிற்சி: ஒரு நாற்காலியின் பின்புறமாக நின்று பிடித்துக்கொள்ளவேண்டும். நின்ற இடத்திலேயே கால் விரல்களை உயர்த்தி, தாழ்த்தவேண்டும்.
முழங்கால் வளைத்தல்: ஒரு நாற்காலியைக் கையால் பிடித்துக் கொள்ள வேண்டும். முதுகை வளைக்காமல் (நேராக வைத்துக்கொண்டு) முழங்காலை 10 முறை மடக்க வேண்டும்.
கால்களை நீட்டி தரையில் உட்காரவேண்டும். பின்னர் உள்ளங்கைகளைத் தரையில் பதித்து, சிறிது பின்னால் சாய்ந்தபடி உட்காரவேண்டும். காலை உயர்த்தி முன்னும், பின்னும், பக்கவாட்டிலும் அசைக்க வேண்டும். கால் பிடிப்பு நீங்கும் வரை இவ்வாறு செய்யவேண்டும்.

காலணி இல்லாமல் நடக்காதீர்கள்
சர்க்கரை நோய் இருப்பது தெரிந்தவுடன் கால்களைக் காப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். வீட்டுக்குள் நடமாடும்போதுகூட வெறுங்காலோடு நடக்காதீர்கள். காலணி அணிவது நல்லது. ஏனெனில் பாதங்களில் உணர்ச்சி குறைந்தாலோ எங்காவது இடறி காயம் பட்டாலோ உணர முடியாது.
பாதங்களில் ஏதேனும் கொப்புளங்கள், வெடிப்புகள், கீறல்கள், தோலுரிவது, நிறம் மாறுவது ஏற்பட்டிருக்கிறதா என்று தினமும் சோதனை செய்து பாருங்கள். குறிப்பாக விரல் இடுக்குகளைக் கவனியுங்கள்.
தினமும் வெதுவெதுப்பான நீரில் பாதங்களை 10 நிமிஷங்கள் பதிய வையுங்கள். நீரின் வெதுவெதுப்பை முழுங்கையால் உணர்ந்து பாருங்கள். ப்யூமிக் ஸ்டோன் கொண்டு கடினமான பாதங்களை மெல்ல தேயுங்கள். பின் இரு பாதங்களையும் சோப் கொண்டு கழுவுங்கள். நன்றாக உலர்த்திய பின் குதிகாலைச் சுற்றி எண்ணெய்ப் பசை கொண்ட நல்ல கிரீமைத்தடவுங்கள்.
உடல் முழுவதையும் கால் தாங்குகிறது. எனவே காலில் அழுத்தம் அதிகம். வாகனங்களுக்கு “ஷாக் அப்சார்ஃபர்’ உள்ளதுபோல் அழுத்தத்தைத் தாங்க பாதங்களுக்கு உதவ சிறப்புக் காலணிகளை (எம்சிஆர் காலணிகள்) அணியுங்கள். ஈரமான காலணிகளை அணியாதீர்கள்.
காலில் ஆணியோ தடிப்பான தோலோ வளர்ந்தால் நீங்களே அதை வெட்டியெறிய முயற்சிக்காதீர்கள். மருத்துவரிடம் செல்லுங்கள். பாதங்களின் மேல் ஒத்தடம் தருவதற்காக சுடுநீர் பாட்டில்களையோ உஷ்ணப் பைகளையோ வைக்காதீர்கள்.
புகை பிடிப்பதை விட்டு விடுங்கள். புகையிலை காரணமாக ரத்த நாளங்கள் சுருங்கி கால்களுக்குப் போகும் ரத்த ஓட்டம் குறைகிறது. இதனால் இறுதியில் காலையே இழந்துவிடக் கூடிய அபாயம் ஏற்படக்கூடும்.
நகம் வெட்ட கத்தரிக்கோல், பிளேடு, நகம் வெட்டி, கத்தி போன்றவற்றை அறவே பயன்படுத்தக் கூடாது. நகத்தை வெட்டாமல் “அரம்’ கொண்டு தேய்த்துக் குறைப்பது நல்லது.
தரையில் படுத்து உறங்காதீர்கள். பூச்சிகளும் எலி போன்றவைகளும் காலைக் கடிக்கும் ஆபத்து உண்டு. தரையில் அமரும்போது கால்களைக் குறுக்குவாட்டாக வைத்துக் கொள்ள வேண்டாம். ஏனெனில் இப்படி அமர்வதின் காரணமாக நரம்புகள் மற்றும் ரத்தக் குழாய்களின் மீது அழுத்தம் ஏற்படலாம். எப்போதும் நாற்காலியில் உட்காரப் பழகுங்கள்.
வீட்டில் வெறுங்காலில் இருட்டில் நடக்காதீர்கள். வெளிச்சத்தில் நடக்கலாம். அதிக சூடு அல்லது கடும் குளிர்ச்சி இரண்டையும் தவிர்க்கவும். சூடான இடங்களில் கால் வைக்காதீர்கள். இரவில் பாதங்கள் குளிரால் ஜில்லென்று ஆகிவிட்டால் பருத்தி அல்லது கம்பளி காலுறைகளை அணிந்து கொள்ளுங்கள்.
ஷு போடும் போது நூறு சதவீதம் பருத்தியிலான காலுறைகளை அணிவதே நல்லது. அவை பாதங்களுக்குக் கச்சிதமாகப் பொருந்தவேண்டும். எப்போதும் தோல் ஷுக்களையே அணியுங்கள். காலணிகள் சரியான அளவில் இருப்பது அவசியம். கூரான முனையுள்ள ஷுக்களைத் தவிர்த்துவிடுங்கள்.
தினமும் காலணிகளைப் பயன்படுத்துவதற்கு முன்பு ஷுகள், காலுறைகளைச் சோதித்துப் பாருங்கள். உள்ளே தேவையற்ற பொருள்கள் ஏதேனும் இருக்கக் கூடும். அவற்றை அகற்றிவிடுங்கள். அதேபோல கழற்றும் போதும் ஒரு முறை பாதங்களைக் கவனித்துப் பாருங்கள். கால் தோலின் நிறம் மாறுதல், வலி எடுத்தல், எரிச்சல், ஊசி குத்துவது போன்ற உணர்வு, மதமதப்பு போன்றவை இருந்தால் உடனே மருத்துவரிடம் செல்லவும்.

சர்க்கரை’ காலுக்கு இணைய தளம்

சர்க்கரை நோயாளிகள் கால்கள் இழப்பதைத் தடுக்கும் வகையில் Save the Diabetic Foot Project என்ற புதிய திட்டத்தை சென்னை ராயபுரம் எம்.வி. சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவமனை தொடங்கியுள்ளது.
சர்க்கரை நோயாளிகளின் கால் பாதிப்புக்கு சிகிச்சை அளிப்பதில் ஏற்கெனவே இம் மருத்துவமனை முன்னோடியாக விளங்கி வருகிறது. சர்க்கரை நோயாளிகளின் கால்களைக் காப்பதற்கென்றே பிரத்தியேக சிகிச்சைப் பிரிவு (Diabetic Foot Clinic) இம் மருத்துவமனையில் உள்ளது.
இதற்காக ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் உள்ள இதே பிரிவுகளுடன் இம் மருத்துவமனைக்கு நெருங்கிய தொடர்பு உள்ளது. சென்னை மத்திய தோல் ஆராய்ச்சி மையத்துடன் (சிஎல்ஆர்ஐ) இணைந்து சர்க்கரை நோயாளிகளுக்கான காலணி வடிமைப்பிலும் இது ஈடுபட்டுள்ளது. இத்தகைய தொடர்புகள் காரணமாக சர்க்கரை நோயாளிகளுக்குக் கால்கள் பாதிக்கப்படாமல் தடுப்பதில் இது முனைப்புக் காண்பித்து வருகிறது.
கால் இழப்பைத் தடுக்கும் புதிய திட்டப்படி எம்.வி. மருத்துவமனைக்கு வரும் சர்க்கரை நோயாளிகளுக்கு பாத பாதுகாப்பை வலியுறுத்தும் “ஸ்டிக்கர்’களை வழங்குகிறது. இந்த ஸ்டிக்கரை குளியல் அறையில் நோயாளிகள் ஒட்டி வைத்துத் தினமும் பார்க்கும் நிலையில், தூண்டுதல் ஏற்பட்டு கால் பராமரிப்பு எளிதாகி விடும்.
கால் பாதுகாப்பு குறித்து சர்க்கரை நோயாளிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த www.mvdiabeticfoot.com என்ற வெப் தளத்தையும் இம் மருத்துவமனை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் அழியப் போகிறதா ?

 


கல்யாணம் செய்துகொள்ள ஆசைப்படுகிறீர்களா? ஜாதகம், பெயர்ராசி எல்லாம் பார்க்காமல், வத்தலோ தொத்தலோ கிடைத்த பெண்ணை மணந்து கொள்ளுங்கள்.

யார் வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும் ஆசைப்படுங்கள். ஆசைகளைத் தீர்த்துக் கொள்ளுங்கள். ஸ்டாக் மார்க்கெட், பொருளாதார மந்தம், வேலை இழப்பு, இடைத்தேர்தல், மின்னணு இயந்திரம் குளறுபடி, ஜெயலலிதா, கொடைநாடு, கலைஞர் கடிதம், பெட்ரோல் விலை உயர்வு, துவரம்பருப்பு விலை உயர்வு, தீவிரவாதிகள், குண்டுவெடிப்பு, எண்கவுண்டர், ஈழம், அல்குவைதா, அமெரிக்கா, கியூபா, எதிர்வீட்டு பிகர், பக்கத்து வீட்டு நாய்க்குட்டி, தெருமுனை பிள்ளையார் கோயில், 23சி பஸ், லேடீஸ் காலேஜ், பார்க், பீச், இத்யாதி.. இத்யாதி பிரச்சினைகள், மகிழ்ச்சிகள், கோபங்கள் எல்லா கருமத்தையும், கந்தாயத்தையும் மறந்துடுங்க. வாழும் காலத்தை மகிழ்ச்சியோடு எதிர்கொள்ளுங்கள்.

ஏனெனில், உங்களுக்கு இன்னமும் இருப்பது இரண்டேகால் வருடம் மட்டுமே. 2012 டிசம்பர் 21 அன்று உலகம் அழியப்போகிறது. இப்படித்தான் பீதியைக் கிளப்பி, எல்லோருக்கும் பேதியை வரவழைத்துக் கொண்டிருக்கிறார்கள் இண்டர்நெட் சைட்களில்.

மாயா என்றால் நமீதா நடிக்கும் கிளுகிளு படம் மட்டுமல்ல. மாயா என்றொரு இனம் தென்னமெரிக்காவில் முன்பு இருந்ததாம். கிறிஸ்து பிறப்பதற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்நாகரிகம் தோன்றி சமீபத்தில் பதினைந்தாவது நூற்றாண்டு வரை இருந்து வந்ததாக ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். கிட்டத்தட்ட மூவாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு உலகில் கோலோச்சிய இந்த இனம் குறித்த தகவல்கள் இன்றும் கூட விரிவான ஆராய்ச்சிகள் இல்லாமல், மர்மமாகவே இருப்பது ஆச்சரியகரமானது.

மாயர்கள் கட்டிடக்கலை, வானவியல் சாஸ்திரங்கள் மற்றும் கணித சூத்திரங்களிலும் கைதேர்ந்தவர்களாக இருந்திருக்கக் கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். இதற்கு அவர்கள் உதாரணம் காட்டுவது மாயர்களின் காலண்டர். மிக நுட்பமாக கணிதவியல் பரிமாணங்கள் துணை கொண்டு மாயர்களின் காலண்டர் உருவாக்கப்பட்டிருப்பதாக கூறுகிறார்கள். மாயர்களின் காலண்டர் கி.மு. 3113ல் தொடங்கி, கி.பி. 2012-ல் நிறைவடைவது தான் இப்போது பலருக்கும் பீதியைக் கிளப்பியிருக்கிறது.

மாயமந்திரங்களிலும், வானவியல் சாஸ்திரங்களிலும் கைதேர்ந்த கில்லாடிகளான மாயர்கள் ஏன் 2012-ல் காலண்டரை முடித்துவிட்டிருக்கிறார்கள். அன்று உலகம் அழியப் போவதை பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே தங்கள் ஞானதிருஷ்டியால் கண்டுவிட்டார்கள் என்று கொலைவெறியோடு வதந்திகளை கிளப்பி வருகிறார்கள் பலர். ஆரம்பத்தில் தென்னமெரிக்காவிலும், பின்னர் ஐரோப்பாவிலும் சூடாக விவாதிக்கப்பட்ட ‘உலகின் கடைசி நாள்’ விவாதம், இப்போது மூடநம்பிக்கைகளில் புரையோடிப் போன ஆசிய நாடுகளுக்கும் ஒரு ரவுண்டு வந்திருக்கிறது.

சரி. மாயன் காலண்டர் என்னதான் சொல்ல வருகிறது, பார்ப்போமா?

சூரியக் குடும்பத்தில் அங்கம் வகிக்கும் பூமி 2012ஆம் ஆண்டு, சூரிய மண்டலத்தின் நேர்க்கோட்டுக்கு வருமாம். இதையடுத்து நேர்க்கோட்டிலிருந்து முன்பு பயணித்த திசையிலிருந்து நேரெதிராக விலகி பயணிக்கும்போது புவியின் காந்தப்புலங்கள் திசைமாறி, துருவங்கள் இடமாற்றம் ஏற்படும் என்பதாக மாயன் காலண்டர் கணிக்கிறது. ‘துருவங்களின் இடமாற்றம்’ என்பது ஏற்கனவே விஞ்ஞானிகளால பல ஆண்டுகளாக விவாதிக்கப்பட்டு ஓரளவுக்கு ஒத்துக்கொள்ளப்பட்ட ஒரு விஷயம். ஆனால் அது 2012ஆம் ஆண்டு தான் ஏற்படுமா என்பதை எந்த விஞ்ஞானியாலும் உறுதியாக சொல்ல இயலவில்லை.

துருவங்கள் இடம் மாறினால் நமக்கென்ன நஷ்டம் வந்தது என்கிறீர்களா?

ஒன்றுமில்லை. மலை உயரத்துக்கு சுனாமி வரும், தினம் தினம் பூம் பூம் பூகம்பம், பனிமலைகள் எரிமலைகளாக மாறிச்சீறும். ஒட்டுமொத்தமாக இயற்கைப் பேரழிவுகள் மனிதகுலத்தை ஆங்காரப் பசியோடு கபளீகரம் செய்யும். இப்படியெல்லாம் பயமுறுத்திக் கொண்டே போகிறார்கள். மாயன் காலண்டரும் இந்த ஊழிப்பெருந்தீ, மற்றும் ஊழிப்பெருநீர் வகையறாக்களை உறுதி செய்கிறது.

சூரிய மண்டலத்துக்கு ஒருநாள் என்பது, நம் பூமியின் கணக்கில் பார்த்தோமானால் 25,625 வருடங்களாம். இதை மாயர்களின் காலண்டர் ஐந்து காலக்கட்டங்களாக பிரிக்கிறது. ஒவ்வொரு காலக்கட்டமும் 5125 வருடங்களைக் கொண்டது. நான்கு காலக்கட்டங்கள் ஏற்கனவே முடிந்துவிட்டதாம். இப்போது நடைபெறுவது ஐந்தாவது காலக்கட்டமாம். கடைசிக் காலக்கட்டம். அதுவும் கூட 2012, டிசம்பர் 12ல் முடிவடைகிறதாம். எனவேதான் இதை ‘ஜட்ஜ்மெண்ட் டே’ என்று பலரும் அஞ்சுகிறார்கள்.

அதாவது இப்போது உலகில் வசித்து வரும் நீங்களும், நானும் ஐந்தாவது காலக்கட்ட மனிதர்கள். நான்காவது காலக்கட்டத்தில் வசித்தவர்கள் 5125 வருடங்களுக்கு முன்பாக (கி.மு. 3113ல்) நடந்த ஏதோ ஒரு இயற்கைப் பேரழிவில் மண்டையைப் போட்டிருப்பார்களாம். நிலத்தை மூழ்கடித்த நீரால் அவர்கள் அழிந்திருப்பார்கள் என்று மாயன் கணிப்பு கூறுகிறது. மனிதக்குலம் ஒட்டுமொத்தமாக அழிந்து, மீண்டும் பிறந்துதான் இன்று பூமியின் கடைசிக் காலக்கட்டத்தைச் சேர்ந்த பெருமை பெற்ற நீங்கள் குமுதம் ரிப்போர்ட்டரில் இந்த கட்டுரையை வாசிக்கும் அளவுக்கு பரிணாம வளர்ச்சி பெற்றிருக்கிறீர்கள் என்று நாம் சொல்லவில்லை. எப்போதோ செத்துப்போன மாயர்கள் சொல்லிவிட்டு சென்றிருக்கிறார்கள்.

மாயர்களைப் போலவே உலகில் வாழ்ந்த பல இனத்தவர்களுக்கும் பிரத்யேக காலண்டர்கள் இருக்கிறது. அந்த காலண்டர்களும் கூட உலகம் அழியப்போவதாகவே பயமுறுத்துகிறது. என்ன ஆண்டுதான் கொஞ்சம் முன்னே, பின்னே 2011, 2013 என்று மாறியிருக்கிறது.

உண்மையில் 2012ல் என்னதான் நடக்கப் போகிறது?

எதிர்காலம் குறித்து சீட்டுக்கட்டிலிருந்து கிளி எடுத்துப்போடும் சீட்டை வைத்து சொல்லப்படும் பலன்களை நீங்கள் நம்புகிறீர்களா? இரத்தமும், சதையும், எலும்பும், மூளையும், சிந்தனைகளுமாய் வளர்ந்த உங்களின் எதிர்காலம் ஒரே ஒரு நெல்லுக்காக கிளி அவசரமாக எடுத்துப்போடும் சீட்டில்தான் இருக்கிறதா என்ன? கிளிஜோசியரின் கிளி மாதிரி தான் ஆளாளுக்கு புரூடா விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படித்தான் 1999ஆம் ஆண்டு முடிந்ததுமே உலகம் அழிந்துவிடும் என்று பலரும் டுமீல் விட்டுத் திரிந்தார்கள். நாஸ்ட்ரடாமஸ் கணித்திருக்கிறார், அவரின் கணிப்பு பொய்யானதில்லை என்று அடித்துப் பேசினார்கள். படித்தவர்கள், படிக்காதவர்கள் பாகுபாடின்றி நடுநடுங்கி செத்தது உலகம். உலகம் தான் அழியப் போகிறதே என்ற எண்ணத்தில் பல்வேறு சமூகக் குற்றங்கள் நடந்தது. நம்மூர் கிராமப்புறங்களில் கூட இந்த பீதியைப் பயன்படுத்தி தென்னந்தோப்புகளிலும், கம்மாய்க்கரைகளிலும் பல பாலியல் குற்றங்கள் நடந்ததாக பத்திரிகைகளில் வாசித்திருக்கிறோம். 1999 முடிந்து சரியாக பத்து வருடங்கள் கடந்துவிட்டது. நாமெல்லாம் செத்தா போய் விட்டோம்?

உலகம் தோன்றியதிலிருந்தே உலகின் கடைசிநாளான ஜட்ஜ்மெண்ட் டே பற்றி பேசிக்கொண்டே தானிருக்கிறார்கள். உண்மையில் இன்று நம் பூமிக்கு அச்சுறுத்தலாக இருப்பது புவி வெப்பமடைதல் (குளோபல் வார்மிங்). மனிதர்களுக்கு மூளை வீங்கிப்போய் அறிவியலில் அக்குவேறு, ஆணிவேறாக அலசி, எக்குத்தப்பாக கண்டுபிடித்து தொலைத்த கண்டுபிடிப்புகள், நவீன வசதிகள் தான் (குறிப்பாக வாயுமண்டலம் மாசடைவதற்கு காரணமான தொழிற்சாலைகள், ஏசி இயந்திரங்கள்) மனிதகுலத்துக்கு வினையாக தோன்றியிருக்கிறது.

நாம் எப்போது அழிவோம், எப்படி அழிவோம் என்று யாருக்கும் தெரியாது. ஆனால் அழியவேண்டிய நேரத்தில் நிச்சயமாக அழிவோம். அது நிச்சயமாக இப்போது அல்ல. ஆகையால் இப்போதைக்கு உலகம் அழிவதைப் பற்றிய பழைய கணிப்புகளை வாசிக்காமல், ப்ரீயாக விடுவதே நம் மனநிம்மதிக்கு உத்தரவாதம் தரும் செயலாக இருக்க முடியும்.

2012 டிசம்பர் மாதம் ஒக்கேனக்கல் கூட்டுக் குடிநீர்த்திட்டம் முடிவடையும் என்று ஒக்கேனக்கல் செயல்பாட்டு கால அட்டவணைக் குறிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. திட்டம் முடிவடைந்தாலும் சரி, முடிவடையா விட்டாலும் சரி. ஒக்கேனக்கல் கூட்டுக் குடிநீர்த்திட்டம் குறித்த புலனாய்வுக் கட்டுரை ஒன்றினை 2013 ஜனவரி மாத குமுதம் ரிப்போர்ட்டரில் நீங்களும், நானும் படித்துக் கொண்டிருக்கப்போவது மட்டும் உறுதி.

Wednesday, March 2, 2011

bluetooth technology

புளூடூத் பயன்பாடும் பாதுகாப்பும்

வயர்கள் எதுவுமில்லாமலும், தானாகவும் இணைப்பினை ஏற்படுத்திக் கொள்வதுதான் புளுடூத். நம் அன்றாட வாழ்க்கையின் பல அம்சங்களை எளிமைப்படுத்தும் விஷயங்கள் இதில் உள்ளன.

நாம் கம்ப்யூட்டர்கள், பொழுது போக்கு சாதனங்கள், டெலிபோன் ஆகியவற்றைப் பயன்படுத்தும்போது அவை தங்களுக்குள் பல வகைகளில் இணைத்துக் கொள்கின்றன. பலவித வயர்கள், கேபிள்கள், ரேடியோ சிக்னல்கள், இன்ப்ரா ரெட் கதிர்கள் எனப் பல வகைகளில் ணைப்பு ஏற்படுத்தப்படுகிறது.


ஆனால் புளுடூத் சாதனங்களை இணைப்பதில் தனி வழி கொண்டுள்ளது. குறைந்த மின் சக்தி பயன்பாடு, ஒரே நேரத்தில் எட்டு சாதனங்களுடன் தொடர்பு, எந்த வகையிலும் ஒன்றுக்கொன்று குறுக்கிட்டு செயல் இழக்காத நிலை, இணைந்திடும் சாதனங்கள் நேராக இருந்திடத் தேவையற்ற நிலை, 32 அடி வட்டத்தில் புளுடூத் தொழில் நுட்பம் கொண்ட எந்த சாதனத்தையும் கண்டு இணையும் லாகவம் எனப் பல ப்ளஸ் பாய்ண்ட்களை அடுக்கிக் கொண்டு செல்லலாம்.

புளுடூத் இயக்கப்பட்ட சாதனங்கள் அவற்றின் எல்லைகளுக்குள் இருக்கையில் யாரும் யக்காமலேயே ஒன்றையொன்று புரிந்து கொள்கின்றன. முகத்தை மூடிய நிலையிலும் கண்களை மட்டுமே கண்டு ரோமியோவை ஜூலியட் அடையாளம் கண்டது போல புளுடூத் உள்ள சாதனங்கள் ஒன்றையொன்று கண்டு கொள்கின்றன.

ஒரு எலக்ட்ரானிக் உரையாடல் அவற்றுக்குள் ஏற்படுகிறது. இந்த சாதனங்களைப் பயன்படுத்துபவர் எந்த பட்டனையும் இதற்கென அழுத்த வேண்டியதில்லை. இந்த எலக்ட்ரானிக் உரையாடல் இரண்டு அல்லது மூன்று சாதனங்களுக்கிடையே ஏற்பட்டவுடன் (அவை கம்ப்யூட்டர் சிஸ்டமாகவோ, மொபைல் போனாகவோ, ஹெட்செட் ஆகவோ, பிரிண்டராகவோ இருக்கலாம்) அந்த சாதனங்கள் தங்களுக்குள் ஒரு நெட்வொர்க்கினை ஏற்படுத்திக் கொள்கின்றன. இதை பெர்சனல் ஏரியா நெட்வொர்க் எனக் கூறலாம். ஆங்கிலத்தில் இந்த நெட்வொர்க்கை PAN 0r piconet என அழைக்கின்றனர். இரண்டிற்கு இடையே ஏற்படும் இந்த நெட்வொர்க் அதே அறையில் மற்ற இரண்டிற்கு இடையே ஏற்படும் நெட்வொர்க்கால் பாதிக்கப்படுவதில்லை. இணைப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் இந்த இரண்டு சாதனங்களுக்கிடையே தகவல் பரிமாற்றம் ஏற்படுகிறது. இது ஒலி, போட்டோ, வீடியோ, பைல் என எதுவாகவும் இருக்கலாம்.

புளுடூத் பயன்படுத்தப்படும் சாதனங்கள்:

அன்றாட வாழ்வின் நடைமுறையை இந்த புளுடூத் இணைப்பு சந்தோஷப்படுத்துகிறது. எடுத்துக் காட்டாக புளுடூத் ஹெட்செட்கள் உங்களுடைய மொபைல் போன், ரேடியோ ஆகியவற்றுடன் வயர் எதுவுமின்றி இணைப்பு கொடுத்து செயல்பட வைக்கின்றன. மொபைல் போனில் இந்த வசதியைப் பெற A2DP (Advanced Audio Distribution Profile) என்ற தொழில் நுட்பம் இருக்க வேண்டும். ஹெட்செட்டும் அதே தொழில் நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டிருக்க வேண்டும். பாடல்களை மட்டுமல்ல போனுக்கு வரும் அழைப்புகளையும் இதில் மேற்கொள்ளலாம்.

பிரிண்டர்களும் புளுடூத் தொழில் நுட்பத்தில் இயங்கும் வகையில் இப்போது வடிவமைக்கப்படுகின்றன. உங்கள் மொபைல் போனில் போட்டோ ஒன்று எடுத்த பின்னர் அதனை அச்செடுக்க பிரிண்டருடன் இணைக்க வேண்டியதில்லை. பிரிண்டரையும் மொபைல் போனையும் புளுடூத் மூலம் இணைப்பை ஏற்படுத்தினால் போதும். கார்களை ஓட்டிச் செல்கையில் நம் மொபைல் போனுக்கு அழைப்பு வந்தால் யாரிடமிருந்து அழைப்பு வருகிறது என்பதனை எடுத்துக் காட்டி போனை எடுக்காமலேயே பேசச் செய்திடும் தொழில் நுட்பம் கொண்ட சாதனங்கள் வந்துள்ளன.

உள்ளே பயணம் செய்திடும் ஐந்து நபர்களின் போன்களை இவ்வாறு இணைத்து இயக்கலாம். அதே போல மொபைல் போனில் ஜி.பி.எஸ். ரிசீவர் இருந்தால் எக்ஸ்டெர்னல் ஜி.பி.எஸ். சாதனம் ஒன்றை புளுடூத் மூலம் இணைத்து தகவல்களைப் பெறலாம். இறுதியாக கம்ப்யூட்டர் இணைப்பைக் கூறலாம். உங்களுடைய மொபைல் போனை புளுடூத் மூலம் கம்ப்யூட்டருடன் இணைத்து பைல்களை அப்டேட் செய்திடலாம். புளுடூத் வசதி கொண்ட கீ போர்டுகளும் இப்போது வந்துவிட்டன. இவற்றையும் கம்ப்யூட்டர் மற்றும் செயல்பாட்டிற்கு ஏற்ப மொபைல் போனுடனும் இணைக்கலாம்.

புளுடூத் செக்யூரிட்டி:

எந்த நெட்வொர்க் இணைப்பு ஏற்படுத்தினாலும் அங்கே பாதுகாப்பு பிரச்னை ஏற்படுகிறது. இங்கும் அதே கதை தான். உங்கள் மொபைல் போனில் புளுடூத்தை இயக்கிவிட்டு சிறிது தூரம் காரிலோ ஸ்கூட்டரிலோ செல்லுங்கள். ஏதாவது இன்னொரு புளுடூத் சாதனம் குறுக்கிட்டு இணைப்பை ஏற்படுத்தும்.

உங்கள் போன் திரையில் இது போல ஒரு சாதனம் இந்த பைலை அனுப்பவா என்று கேட்கிறது? ஏற்றுக் கொள்கிறாயா? என்ற கேள்வி இருக்கும். உடனே இணைப்பைக் கட் செய்வதே நல்லது. ஏனென்றால் இது போல வரும் பைல்களில் வைரஸ் இருக்கும். எனவே தான் இணைப்பு இருந்தாலும் பைலை ஏற்றுக் கொள்ளும் அனுமதியை நாம் தரும்படி மொபைல் போனின் புளுடூத் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு புளுடூத் மூலம் அடுத்த சாதனங்களைக் கைப்பற்றி கெடுப்பதை “bluejacking,” “bluebugging” மற்றும் Car Whisperer” என அழைக்கின்றனர். எனவே நம்பிக்கையான நபர் அல்லது மொபைல் போன் அல்லது சாதனம் என்று உறுதியாகத் தெரிந்தாலொழிய இத்தகைய இணைப்பை அனுமதிக்கக் கூடாது.

Wi-Fi technology

Wi-Fi தொழில்நுட்பம் ஏற்படுத்தியுள்ள அச்சுறுத்தல்கள்!

"ஒயர்லெஸ் ஃபிடெலிடி" என்ற தொழில் நுட்பம்தான் Wi-Fi தொழில் நுட்பம் என்றுஅழைக்கப்படுகிறது. லோக்கல் ஏரியா நெட்வொர்க் (LAN)) என்று அழைக்கப்படும்நெட்வொர்க்குகளின் ஒரு சில வகைகள் Wi-Fi தொழில் நுட்பம் என்றுஅழைக்கப்படுகிறது. அதாவது நெட்வொர்க்குகளுக்கும், கணினி, இணையதளஇணைப்புகளுக்குமான கம்பிவட தொழில் நுட்பத்திற்கு அடுத்தகட்டமாக இந்தகம்பியற்ற இணைப்புத் தொழில்நுட்பம் தற்போது வெகு வேகமாகபரவலாகிவருகிறது.

முறையான பாதுகாப்பு, தடுப்பு ஏற்பாடுகள் இல்லையெனில், Wi-Fi நெட்வொர்க்கை யார் வேண்டுமானாலும் அனுமதியின்றி பயன்படுத்தி எந்தவிதமான நாசவேளைகளிலும் ஈடுபடலாம் என்பதே தற்போது எழுந்துள்ள அச்சம்.

இந்தியா தற்போது
தகவல் தொடர்பியலில் புரட்சியை எதிகொண்டு வருகிறது. மிகப்பெரிய செல்பேசி சந்தையாக இந்தியா வளர்ந்து வரும் நிலையில் இந்ததொழில் நுட்பமும் இந்தியாவில் அதிக வளர்ச்சியை பெறும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய வர்த்தகத் துறைகளில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள், இதனால் மக்கள்வாழ்முறைகளில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவற்றால் கணினிகள், லேப்டாப்கள், அடுத்த தலைமுறை அதி தொழில் நுட்ப ஸ்மார்ட் ஃபோன்கள் மற்றும்பிற கைவழி பயன்பாட்டு மின்னணுக் கருவிகளின் தேவை கணிசமாக பெருகிவருகிறது. இதனுடன் சேர்ந்து 24 மணி நேர இணைப்புச் சேவை, பரவலானவிரிவலை (பேண்ட்வித்) ஆகியவற்றிற்குமான தேவைகளும் கூடி வருகிறது.

இந்த மாற்றங்களுக்கு ஈடுகொடுக்ககூடிய ஒரு தொழில் நுட்பமான Wi-Fi தொழில்நுட்பம் தற்போது இந்திய கார்ப்பரேட் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், வீ
டுகள் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்கள் ஆகியவற்றில்விரும்பத்தகுந் ஒரு இணைப்புத் தொழில்நுட்பமாக அசுர வளர்ச்சி கண்டுள்ளது.
இந்த தொழில் நுட்பத்தை உருவாக்கிய Wi-Fi அலையன்ஸ் நிறுவனத்தின்கணிப்பின்படி தற்போது Wi-Fi தொழில் நுட்பத்திற்கான இந்திய சந்தை 270 மில்லியன் டாலர்கள். 2011-12ஆம் ண்டுவாக்கில் இது 900 மில்லியன் டாலர்கள்சந்தையாக வளர்ச்சியடையும்.

ஆனால்... இந்த தொழில் நுட்பம் பல பாதுகாப்பு கவலைகளையும், அச்சுறுத்தல்களையும் அளிக் துவங்கியுள்ளது. சமீபத்தில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு குறித்து விசாரணை மேற்கொள்கையில், பாதுகாப்பு நிறுவனங்கள், இதற்கு காரணமா ரு மின்னஞ்சலை கண்டுபிடித்துள்ளது. அதனை பின்பற்றிச்செல்கையில் கென் ஹேவுட் என்ற அமெரிக்க குடிமகனின் கணினிக்குஇட்டுச் சென்றுள்ளது.

அதாவது அந்த அமெரிக்கக் குடிமகனின் கணினி ஹேக் செய்யப்பட்டு அதன்வழியாக இந்த மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வந்தாலும், இந்த தொழில் நுட்பம்நம்மிடையே சில கேள்விகளையும் சந்தேகங்களையும் ஏற்படுத்தியுள்ளது.


அதாவது சரியாக கண்காணிக்கவில்லையெனில், Wi-Fi நெட்வொர்க்கில் உள்ளகுறைபாடுகளினால் ஹேக்கர்கள் எந்த ஒரு கணினி நெட்வொர்க்கிலும் புகுந்துநாச வேலைகளில் ஈடுபடமுடியும். இதனால் இதன் பயனாளர்களுக்குவிழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டிய கட்டாயம் பிறந்துள்ளது .


இதற்காக, வெள்ளை அறிக்கை ஒன்றையும் மஹிந்திரா ஸ்பெசல் சர்வீசஸ்குழுமம் (MSSG) வெளியிட்டுள்ளது. அதன் முக்கிய அம்சங்களைப் பார்ப்போம்: "சிறப்பான பாதுகாப்பு செயல்முறைகள் - Wi-Fi -யின் அபாயங்கள் என்று அந்தவெள்ளை அறிக்கை தலைப்பிடப்பட்டுள்ளது.

Wi-Fi தொழில் நுட்பத்தினால் இணையதளம் உள்ளிட்ட இணைப்புகளில்நடந்துள்ள புரட்சிகள் கார்ப்பரேட் நிறுவனங்கள் முதல் வீடுகள் வரை அதன் மீது ஈர்ப்பை அதிகரித்துள்ளது. அதன் பயனும், திறனும் மற்ற கம்பிவட இணைப்பு நெட்வொர்க்குகளை விட அதிகமானது. ஆனால் இது எவ்வளவு பயனுள்ளதோந்த அளவிற்கு பாதுகாப்பு அபாயங்கள் நிறைந்தது. எனவே இந்த குறிப்புகள் சிறந்த தடுப்பு உத்திகளை மேற்கொள்ள பயனுள்ளதாக அமையும்.

கம்பியற்ற இணைப்பு ங்கள் நெட்வொர்க்கை அடைய ஒரு பின்வாசல் வழி!

ஒயர்லெஸ் ஆக்சஸ் கார்டுகளின் மூலம் இயங்கும் லேப் டாப்கள், தானியங்கி இணைப்பு அமைப்புகள் கியவை தற்போது பெருகி வருகிறது. அதாவது ஒயர்லெஸ் இணைப்பு பெற்றுள்ளவர்கள் தகவல்களை வான்வழியாக அனுப்புவதால், அதனை ஹேக் செய்வது சுலபம், அதாவது யார்வேன்டுமானாலும் அதனை பார்க்க முடியும். இதானல் ஹேக்கர்கள் எங்கிருந்தபடி வேண்டுமானாலும் நிறுவனங்களின் நெட்வொர்க்குகள் மட்டுமல்லாது ஒரு நாட்டின் பாதுகாப்பை தீர்மானிக்கும் ராணுவ சம்பந்தமான விஷயங்களையும் தகவல்களையும் வெளியிலிருந்தே அணுக முடியும்.


என்ன தவறு ஏற்பட முடியும்?

எதேச்சையாக அணுகுதல், அதாவது இதில் ஒரு பயனாளர் அடுத்ததாக உள்ளஒரு நிறுவனத்தின் ஊடுருவும் ஒயர்லெஸ் நெட்வொர்க் மூலம் ஒயர்லெஸ்அணுகல் புள்ளியைக் கைப்பற்றி அங்கிருந்து தகவல்களை திருடி என்னவேண்டுமானாலும் செய்யலாம்.

கெட்ட நோக்கத்துடன் அணுகுதல், இதில், ஹேக்கர்கள் ஒரு பொய்யானஅணுகல் இடங்களிலிருந்து தாங்கள் உருவாக்கிய ஒயர்லெஸ் கருவிகள் மூலம்எந்த ஒரு நெட்வொர்க்கையும் ஆட்கொண்டு, அதன் வழி செல்லும் தகவல்களைதிருடுவது.

தற்காலிக நெட்வொர்க்குகள், இதில் ஒயர்லெஸ் கணினிகளுக்கிடையே இணைப்பை ஏற்படுத்துவது, அதாவது ஒயர்லெஸ் அணுகல் இடம் என்ற ஒன்றுஇல்லாமலேயே.

உங்கள் ஒயர்லெஸ் அணுகல் புள்ளி ஒரு குறிப்பிட்ட பகுதியை பரவலாகக்கொண்டு யங்குவதால் நீங்கள் ஒயர் மூலம் அனுப்பும் செய்திகள் மற்றும்கார்ப்பரேட் தரவுகளை (datas) தொலைதூரத்திலிருந்தே அணுக முடிவது.

இதனைத் தடுக்க உடனடியாக செய்ய வேண்டியது என்ன?
  • ஒயர்லெஸ் கருவி அட்மினிஸ்ட்ரேட்டர் தான்தோன்றி கடவுச்சொல்லைஉடனடியாக மாற்றவும். உதாரணமாக ரீ செட் 123 அல்லது அது போன்ற பிறபொதுவான கடவுச்சொல் தானாகவே உங்கள் கணினியில் இருந்தால் அதனைஉடனடியாக மாற்றி வேறு கடவுச்சொல்லை வைக்கவும்.
  • உங்கள் ஒயர்லெஸ் கருவி பயன்படுத்தக்கூடிய WPA/WEP பாதுகாப்புகுறியேற்றங்களை எப்போதும் இயக்கத்தில் வைத்திருக்கவும்.

  • பயனில் இல்லாத போது Wi-Fi மீடியாவின் இயக்கத்தை நிறுத்தி வைப்பது நல்லது. அல்லது பிளக்கை பிடிங்கி வைப்பதும் சிறந்தது.

  • MAC முகவரி வடிக்கட்டி அமைப்பை ஏற்படுத்தி அதிகாரபூர்வ கருவிகளுக்குமட்டுமே இணைப்பை அனுமதிக்கவும்.

  • தானாகவே உள்ள சர்வீஸ் செட் ஐடென்டிஃபையர் (எஸ்.எஸ்..டி.) உடனடியாகமாற்றவும்.

  • தேவையில்லை என்றால் எஸ்.எஸ்..டி. ஒலிபரப்புகளை நிறுத்தி விடுங்கள்.
  • திறந்த Wi-Fi நெட்வொர்க்குகளை தானாகவே இணைக்கும் அமைப்பின்இயக்கத்தை நிறுத்தி வைக்கவேண்டும்.

  • உங்கள் ஒயர்லெஸ் பாதைகள் அனைத்திலும் ஃப்யர்வால்களை (Firewalls) உருவாக்கவும்.

  • உங்கள் வளாகத்தின் மையப்பகுதியில் உங்கள் ஒயர்லெஸ் அணுகள் இடத்தைவையுங்கள். சுவற்றிலோ மூலைகளிலோ வைத்தால் கசிவுகள் ஏற்படும்.

இந்த குறிப்புகள், தனிப்பட்ட பயனர்களுக்கு ஓரளவிற்கு பொருந்தகூடியது. நிறுவனஙளும், அமைப்புகளும் இதனை பரந்துபட்ட அளவில்மேற்கொள்ளவேண்டியிருக்கும். ஒரே படித்தான பாதுகாப்பு முறைகளை இவைகடைபிடிக்க வேண்டும்.

என்ன தொழில் நுட்பத்தை கண்டுபிடித்தாலும், அதனை உடைத்து உள் நுழையும்தொழில் நுட்பத்தை இந்த தொழில் நுட்பங்களிலிருந்தே கண்டுபிடித்துவிடமுடிகிறது என்பதே இதன் மையப் பிரச்சனை. என்று தணியும் இந்தவலைப்பின்னல் பாதுகாப்பு தாகம்?