Thursday, February 24, 2011

SPECTRUM

Please read...and understand about Spectrum... and let others know too.. 

               1999 ஆண்டில் தான் தொலைதொடர்பு உரிமங்கள் வழங்க ஆரம்பிக்கபட்டது. அன்று வெறும்
பணம் படைத்தவர்கள் மட்டுமே கைபேசியை பயன்படுத்தினர். எனவே நுகர்வோரின்
எண்ணிக்கை மிக குறைவு. சில பல லட்சங்கள் மட்டுமே. தொழில் நுட்பவளமான 1G அல்லது
2G அலைக்கற்றைகள் மிக அதிக அளவில் அரசிடம் கையிருப்பு இருந்துள்ளது. ஆனால்
உரிமம் வாங்க உலக அளவிலோ இந்திய அளவிலோ போட்டிகள் இல்லை. விலை கொடுத்து உரிமம்
வாங்கியவர்கள் லாபம் பெற நுகர்வோரிடம் நிமிடத்திற்கு அதிக கட்டணம்(In coming
and out going ) வசூல் செய்ய கட்டாயம் ஏற்பட்டது. இதில் கவனிக்க வேண்டிய
இன்னொரு விஷயம் என்னவென்றால் நாம் தான் வாதி படைத்தவர்களாச்சே என்று
இஷ்டத்திற்கு பேசி நேரத்தையோ பணத்தையோ அன்றைய வசதி படைத்தவர்கள் விரையம்
செய்யவில்லை. குறைவான நேரத்துக்குதான் கைபேசியை பயன்படுத்தினர்.

நுகர்வோரின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால்தான் அன்று அலைகற்றை உரிமம் பெற அதிக
நிறுவனங்கள் முன்வரவில்லை. இதை சரி செய்ய அன்றைய அரசு ஒரு தொலை தொடர்பு
புரட்சியை உருவாக்க முயன்றது. விளைவு நாளுக்கு நாள் நுகர்வோரின் எண்ணிக்கை
அதிகமானது. இன்றும் அதிகமாகி கொண்டே இருக்கிறது. 2010 நுகர்வோரின் எண்ணிக்கை
சுமார் 60 கோடிக்கும் மேல். 2008 இல் 50 கோடிக்கும் மேல். இதற்கும் அதிகமான
மக்கள் பயன்படுத்தும் அளவுக்கு போதிய அலைகற்றைகள் அரசிடம் இன்றும் உள்ளனர்.
ஆனால் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை வெறும் 60 கோடிதான். 122 தகுதி இல்லாத
நிறுவனங்களுக்கு உரிமம் வழங்க பட்டுள்ளது. தகுதி என்றால் என்ன? போதிய அனுபவம்,
வங்கி காசோலை, வங்கி செக்யூரிட்டி டெபொசிட் அது மட்டும் இல்லை வாங்கியவுடன்
குறிப்பிட்ட காலத்திற்குள் சேவையை தொடங்க வேண்டும். இந்த குறிப்பை நினைவில்
வைத்து கொள்ளுங்கள். பின்னால் உதவும். டாட்டா, ரிலையன்ஸ் போன்ற பெரிய
நிறுவனங்களும் உரிமம் வாங்கியுள்ளனர். இதோடு அந்த 122 தகுதி இல்லாத
நிறுவனங்களையும் சேர்த்து கொள்ளுங்கள்.

நியாய கணக்கு:

இந்தியாவில் 60 கோடி மக்கள் கைபேசி சேவையை பயன்படுத்துவதாக உண்மை தகவல் உள்ளது.
எல்லோருக்கும் தெரியும் என்று நினைக்கிறேன். ஒரு நபர் தனது கைபேசியை ஒரு
நாளைக்கு சராசரியாக வெறும் 15 நிமிடங்கள் (LOCAL CALLS ONLY) பயன்படுத்துவதாக
வைத்துக்கொள்வோம். ஒரு நிமிடத்திற்கு 40 பைசா கட்டணம். அப்போ 15x0.40 =6.0
ரூபாய் ஒரு கைபேசியின் மூலம் செலவாகிறது. 60 கோடி கைபேசிகள். 60x6.0 = 360
கோடிகள் ஒரு நாளைக்கு செலவாகிறது. ஒரு மாதத்திற்கு 30x360 = 10,800 கோடிகள்.
ஒரு வருடத்திற்கு 12x10,800 = 1,29,600 கோடிகள். 2008 இல் 2G ஏலம் விடப்பட்டது.
இன்று வரை இரண்டு வருடங்கள் ஆகிறது. அப்போ குறைந்தபட்ச வருமானம் இன்றுவரை
2,59,200 கோடிகள். இது ஒரு நாளைக்கு வெறும் 15 நிமிடங்கள் கைபேசியை
பயன்படுத்தினால் இரண்டு வருடத்திற்கு கிடைத்திருக்கும் வருமானம். இதோடு SMS,
MMS, STD, ISD, சேவை கட்டணம், இணைப்பு கட்டணம்.......இன்னும் என்ன என்னவோ
கட்டணங்கள் உள்ளது என்று சொல்கிறார்கள் மற்றும் 15 நிமிடத்திற்கு அதிகமாக
பயன்படுத்துவோரின் செலவையும் சேர்த்தால் எத்தனை கோடி கோடிகள் வருமானமாக
கிடைக்கும் என்பதை நீங்களே கணக்கிட்டு கொள்ளுங்கள். என்னால் கணக்கிடவே
முடியவில்லை. என்னிடம் உள்ள கால்குலேட்டர் மற்றும் கணினி காண்பிப்பது
"INFINITIVE". நான் தற்போது இந்தியாவில் இல்லை. இருந்திருந்தால் அனைத்தையும்
அலசி ஆராய்ந்து இதைவிட இன்னும் துல்லியமாக நடந்த ஊழலின் அளவை குறிப்பிட்டு
இருப்பேன். இந்த வருமானம் அனைத்தும் அரசுக்கு கிடைத்திருக்க வேண்டும். அது
மக்களை சென்று அடைந்து இருக்கவேண்டும். கிடைத்ததா? மக்களை சென்றடைந்ததா?
நிச்சயம் இல்லை என்றுதான் ஒவ்வொரு மக்களும் கூறவேண்டும். அப்படி என்றால் இந்த
மக்கள் பணம் சட்டத்திற்கு புறம்பாக யாரிடமோ சென்று அடைந்துள்ளது. இந்த ஊழல்
பணம் அடுத்த சில ஆண்டுகளில் தனது சொந்தநாட்டு மக்களையே தாக்கப்போகிறது.
விலைவாசி உயரும். பொருளாதாரம் நாசாகும். "Above middle Class" மக்கள் நடுத்தர
மக்களாகவும், நடுத்தர மக்கள் ஏழைகளாகவும், ஏழை மக்கள் மேலும் பரம ஏழைகளாகவும்
மாறுவார்கள். ஜனநாயகம் வேரோடு அழியும். மனிதாபிமானம், மனிதநேயம் மண்ணோடு
மண்ணாகும். ரௌடிசம்,குற்றசம்பவங்கள் தலைவிரித்து ஆடும். கடந்த ஐந்தாண்டுகளாக
ஆயுள் கைதியாக உள்ள நடுநிலை பத்திரிகைகள் இனி மரண தண்டனை கைதிகளாக மாற்றப்பட்டு
தூக்கில் போடப்படும்.

துரோகம்-1: உரிமம் வாங்கிய அனைத்து நிறுவனங்களும் சுமார் 13000 கோடிக்கும்
அதிகம் பொறுமானம் உள்ள(உதாரணம் S .TEL நிறுவனம்13000 கோடிக்கு வாங்க
முன்வந்தது) அலைகற்றைகள் உரிமத்தை அடிமாட்டு விலைக்கு அதாவது 1200 , 1300 ,1650
கோடிகளுக்கு திட்டமிட்டு விற்கப்பட்டுள்ளது. அரசுக்கு சேரவேண்டிய, மக்களுக்கு
சேர வேண்டிய வருவாய் சில சுய நலவாதிகளை சென்றடைந்துள்ளது.

துரோகம்-2: பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் உரிமத்தின் பங்குகளை வெளி நாட்டு
நிறுவனங்களுக்கு விற்று கொள்ளை லாபம் பார்த்துள்ளனர். இதனால் அரசுக்கு அதாவது
பல கோடி மக்களுக்கு கிடைக்க வேண்டிய அரசின் வருவாய் சில சுய நல தனி மனிதர்களை
சென்று அடைந்துள்ளது.

துரோகம்-3: தகுதி இல்லாமல் உரிமம் வாங்கிய 122 நிறுவங்களில் பெரும்பாலான
நிறுவனங்கள் இன்னும் சேவையை தொடங்கவில்லை. இதில் "swan, Unitech" போன்ற லெட்டர்
பேட் நிறுவனங்களும் அடங்கும். இந்த நிறுவனகள் ஏன் இன்னும் சேவையை தொடங்கவில்லை
என்று உள்ளூர ஆராய்ந்தால் மிக தெளிவாக புரியும். பெரிய நிறுவனங்கள் போட்டி
இல்லாமல் தொலைதொடர்பு துறையில் கொள்ளை லாபம் பார்க்க அதாவது கட்டணம் என்ற
பெயரில் மக்களின் உழைப்பை சுரண்ட பெரும்பாலான தகுதி இல்லாத பினாமி லெட்டர் பேட்
நிறுவனங்கள் இன்னும் சேவையை தொடங்கவில்லை. இவைகள் சேவையை தொடங்கி இருந்தால்
சந்தையில் போட்டி அதிகமாகி கைபேசியில் பேசும் கட்டணம் இப்போது இருப்பதை விட
மேலும் குறைந்திருக்கும். ஒரு வேளை இதற்காகத்தான் திட்டமிட்டு
"S.TEL<http://s.tel/>போன்ற போட்டி நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கவில்லை
என்ற சந்தேகம் தெளிவாக
எழுகிறது.

துரோகம்-4: MTNL BSNL போன்ற அரசு நிறுவனங்களுக்கு அதிக அளவில் அலைகற்றைகளை
ஒதுக்கி போதிய ஆப்பெரடர்களை நியமித்து இருந்தால் கைபேசியில் பேசும் கட்டணம்
நிமிடத்திற்கு வெறும் ஒரு பைசாவுக்கு வந்திருக்கும். மக்கள் அரசினால் பயன்
அடைந்து இருப்பார்கள்.
துரோகம்-5: தகுதி இல்லாமல் உரிமம் வாங்கிய லெட்டர் பேட் நிறுவனங்கள் தனது
பங்குகளை பல வெளி நாட்டு நிறுவனங்களுக்கு விற்றுள்ளனர். அதில் பாகிஸ்தான் போன்ற
நாடுகளும் அடங்கும். இந்தியாவின் தொலை தொடர்பு துறையை இந்த நாடுகளும்
பயன்படுத்துகின்றனர். இது உள்நட்டு மக்களின் பாதுகாப்புக்கு மிக பெரிய
அச்சுறுத்தல்.

துரோகம்-6: நீரா ராடியா தொலைபேசி உரையாடல்கள், CAG ,தொலைதொடர்பு சம்பந்தபட்ட,
கைபற்றபட்ட ஆவணங்கள், சம்பந்தபட்ட பிரதமர் அலுவலக கடிதங்கள் புறகணிப்பு,
சட்ட,நிதி துறை கடிதங்கள் புறகணிப்பு, TRAI பரிதுரைகள் புறகணிப்பு இப்படி கோடி
கணக்கில் ஆதாரங்கள், சாட்சிகள். முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்று முந்தைய
ஆட்சியாளர்கள் வகுத்த அடிப்படை கொள்கை கூட பின்பற்றப்படவில்லை. அதிலும்
முறைகேடு.

துரோகம்-7: இவ்வளவு குற்றங்கள் செய்தும் சம்பந்தபட்ட குற்றவாளிகள் செய்த தவறை
ஒப்பு கொள்ளாமல் நாங்கள் தவறு செய்யவில்லை என்று மக்களிடம் பொய் பிரச்சாரம்
செய்வது மக்களுக்கு இழைக்கப்பட்ட ஏழாவது துரோகம். இதன் உச்சகட்டம்தான் 2G யில்
ஊழலும் இல்லை நஷ்டமும் இல்லை என்று மத்திய அமைச்சரின் பத்திரிகை பேட்டி. இந்த
உலகத்திலே தான் மட்டும்தான் புத்திசாலி வக்கீல் மற்ற அனைவரும் அடி முட்டாள்கள்
என்ற ஆணவ நினைப்பு.
துரோகம்-8: நடந்த அனைத்து தேச துரோகங்களும், குற்றங்களும் பொருளாதார மேதை
பிரதமருக்கு தெரிந்தே கண்முன்னே நடந்துள்ளது. இருந்தும் பிரதமர் வாய் மூடி
மௌனியாக இருப்பது மக்களுக்கு இழைக்கபடும் மகா மகா துரோகம்.

துரோகம்-9: ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் முறைகேடாக பெறபட்ட பணங்கள் பெரும்பாலானவை
இந்தியாவில் புழக்கத்தில் இல்லாமல் அந்நிய நாடுகளில்,வங்கிகளில் முதலீடு
செய்யப்பட்டுள்ளதாக தகவல். இந்த பணம் அரசுக்கு வருவாயாக கிடைத்து இருந்தால்
ஏராளமான அரசு கல்லூரிகள், பள்ளிகள், பாலங்கள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள்
என்று உருவாக்கி அனைவருக்கும் கல்வி,வேலைவாய்ப்பு, அடிப்படை வசதிகள் என்று
ஏற்படுத்தி ஏழைகளே இல்லாத நாட்டை உருவாக்கி இருக்கலாம். இலவசங்கள் பெறாத மக்களை
கண்டிருக்கலாம்.

துரோகம்-10: ஸ்பெக்ட்ரம் ஊழல் பணத்தை பயன்படுத்தி தலித் பற்றும் பிற இனத்தை
சேர்ந்த ஏழை விவசாய மக்களிடம் மிரட்டி விளை நிலங்களை அடிமாட்டு விலைக்கு
வாங்கப்பட்டதாக தகவல். இது மக்களுக்கு இழைக்கபட்ட துரோகம் பத்து. ஒரு
முறைகேட்டை செய்து அதையே மூலதனமாக வைத்து இன்னொரு முறைகேடு செய்யப்பட்டுள்ளது.
ஊழல் செய்வதினால் மக்களுக்கு இழைக்கபடும் துன்பங்களுக்கு இதை விட சிறந்த
உதாரணம் வேறென்ன வேண்டும். நண்டு கொழுத்தால் வலையில் தங்காது. இதுதான் ஊழலின்
விளைவுகள். இவர்கள் ரத்தம் குடிக்கும் கொசுக்கள் மாதிரி. நம்மிடம் உள்ள
ரத்தத்தை உறிஞ்சுவதோடு மட்டும் இல்லை அதோடு சேர்த்து நோய் கிருமிகளையும் நமது
ரத்தத்தில் விட்டு செல்கின்றனர்.

இப்படி 2G ஊழலில் மக்களுக்கு இழைக்கபட்ட துரோகங்கள் எண்ணில் அடங்காதது. இந்த
ஊழலின் தாக்கம் இதோடு நிற்காது. மக்களைத்தான் சுத்தி சுத்தி அடிக்கும். எப்படி?
ஊழல் பணத்தை வைத்து ஏழைகளின் நிலங்கள் அடிமாட்டு விலைக்கு வாங்கப்பட்டு அதை
பிளாட் போட்டு அதே மக்களிடம் அதிக விலை வைத்து விற்கப்படுகிறது. ஒரு ஏக்கரை
குறைந்த விலைக்கு விற்ற மக்கள் அந்த பணத்தை வைத்து அதே இடத்தில் அதாவது முந்தைய
சொந்த இடத்தில ஒரு கிரௌண்ட் நிலம் கூட வாங்க முடியவில்லை. இதுதான் ஊழலின்
விளைவு. இப்போது புரிந்து இருக்கும் ஏழைகள் எப்படி உருவாகிறார்கள் என்று. இது
மட்டும் இல்லை ஊழல் பணத்தை வைத்து அனைத்து இடங்களையும் வளைத்து போட்டு ரியல்
எஸ்டேட் நடத்தும் அனைத்து அரசியல்வாதிகளும் இப்படி ஊழல் பணத்தில்தான்
செய்கின்றனர். அவர்கள் சொல்வதுதான் விலை. விலைவாசி உயர்வது இயற்கை அல்ல.
அனைத்தும் மிக மிக செயற்கையே. இயற்கை என்று ஆளும் கட்சியினர் கூறுவது தவறு.
உண்மையை மூடி மறைக்கும் செயல். இது ரியல் எஸ்டேட் மட்டும் இல்லை. அனைத்து
பொருள்களுக்கும் பொருந்தும். குறைந்த விகிதத்தில் உள்ள பணக்காரர்கள் மேலும்
பணக்காரர்கள் ஆவார்கள். அதிக விகித்தில் உள்ள நடுத்தர மக்கள், ஏழைகள் மேலும்
ஏழைகளாக ஆவார்கள். இந்த ஏழை, பணக்காரன் இடை வெளியை குறைக்கத்தான் அரசாங்கம்
ஒன்றை மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள்.

இன்று ஆளும் வர்க்கத்தினரே அதற்கு முழு முதல் காரணமாக திகழ்கிறார்கள்.
சொல்லபோனால் அரசின் கடமைகளை அரசியல்வாதிகளும் மறந்துவிட்டனர். இவர்களை
தேர்ந்தெடுக்கும் மக்களும் தங்கள் கடமைகளை மறந்து இலவசத்துக்கு பின்
செல்கின்றனர். இலவசம் வாங்கும் மக்களே ஒன்றை நன்றாக தெரிந்து கொள்ளுங்கள்.
உங்கள் உழைப்பு என்னும் மூலதனத்தை மறந்து இலவசம் வாங்குவதால் எத்தனை தலைமுறைகள்
கடந்தாலும் நீங்கள் ஏழைகளாகத்தான் இருக்க முடியும். உங்கள் வாழ்கை தரமும்
உயரபோவதில்லை. இலசவசம் கொடுக்க தேவையான வரிபணத்தை செலுத்தும் உழைக்கும்
மக்களின் வாழ்கை தரமும் உயரபோவதில்லை. இது நிச்சயம். மாற்றம் ஒன்றே மாறாதது.
இலவசம் மாறவில்லை என்றால் உங்கள் வாழ்கை தரமும் மாறபோவதில்லை.

எனது நோக்கமே இந்த 2G உலக மகா ஊழலால் மக்கள் எவ்வாறு வஞ்சிக்கபட்டார்கள் என்பதை
ஒவ்வொரு இந்திய குடிமகனும் பத்திரிகை நிறுவனங்களில் பணிபுரியும் நண்பர்கள்
உள்பட அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதுதான். எனவே தெரிந்துகொள்ளுங்கள்,
புரிந்துகொள்ளுங்கள். ஒவ்வொரு ஏழை மக்களுக்கும் தெரியபடுத்துங்கள். ரோட்டில்
இறங்கிதான் போராடவேண்டும் என்று இல்லை.கொடி பிடிக்க அவசியமும் இல்லை. e -mail,
FAX , Facebook , orkut என்று எவ்வளவோ தொழில் நுட்ப வசதி உள்ளது. தங்களுக்கு
உகந்த ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து தங்களின் அன்றாட வேலைகள் பாதிக்காத வகையில்
சுலபமாக இதை செய்யமுடியும். செய்வீர்கள் என்று நினைக்கிறேன்.

நன்றி.

Sunday, February 20, 2011

சில தவறுகள்! சில திருத்தங்கள்!!!







யார் முட்டாள்?

ஒரு கோடியை வெல்ல அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அவருடைய பதில்களும் . . . .

1) நூறு வருடப் போர் எவ்வளவு காலம் நடந்தது?
a)116 b)99 c)100 d)150

2) பனாமா தொப்பிகள் எந்த நாட்டில் தயாரிக்கப் படுகின்றன?
a)பிரேசில் b)சிலி c)பனாமா d)இக்வேடார்


3) ரஷியர்கள் எந்த மாதத்தில் அக்டோபர் எழுச்சியைக் கொண்டாடுவர்?
a)ஜனவரி b)செப்டம்பர் c)அக்டோபர் d)நவம்பர்


4) கீழ்கண்டவற்றில் எது ஜார்ஜ் IV ஆம் மன்னனின் முதற்ப் பெயர்(First Name)?
a)எடர் b)ஆல்பர்ட் c) ஜார்ஜ் d)மானுவேல்



5)பசிபிக் சமுத்திரத்தில் இருக்கும் "கானெரித் தீவு", அந்தப் பெயரை எந்த விலங்கின் பெயரிலிருந்து பெற்றது?
a)கானெரிப் பறவை b)கங்காரு c)பப்பி d)எலி



கொஞ்சம் கீழே போங்கள்.

. .


. .


. .


. .


. .


. .

சரியான விடைகள் :
1) நூறு வருடப் போர் 116 வருடங்கள்(1337-1453) நடந்தது.
2) பனாமாத் தொப்பிகள் இக்வேடார் நாட்டில் தயாரிக்கப்படுகின்றன.
3) அக்டோபர் எழுச்சி நவம்பர் மாதம் கொண்டாடப்படுகிறது.
4) ஜார்ஜ் IV ஆம் மன்னனின் முதற்ப் பெயர் ஆல்பர்ட். 1936ஆம் வருடம் தன் பெயரை மாற்றிக்கொண்டான்.
5) பப்பி. "இன்சுலாரியா கானெரி" என்றால் லத்தினில் 'பப்பிகளின் தீவு'(பப்பிக்கு சரியான தமிழ் வார்த்தை என்னப்பா?) என்று அர்த்தமாம்.


இப்பொழுது சொல்லுங்கள் யார் முட்டாள்.     கொஞ்சம் யோசிப்போமாக.

மூன்று புதிர்கள்

1. கண்ணனுடைய அப்பாவுக்கு ஐந்து குழந்தைகள். ஆணழகன், ஈரழகன், ஊரழகன், ஏழழகன். ஐந்தாவது குழந்தையின் பெயர் என்னவாக இருக்கும் ?

ஓரழனா.. ஐயோ.. கேள்வியை வாசியுங்கள்.
கண்ணன் தான் மற்றவர்.

2. ஓட்டப் பந்தயத்தில் கடைசியாகச் செல்பவரை நீங்கள் முந்தினால், எத்தனையாவதாக ஓடுவீர்கள் ?

கடைசியாக ஓடுபவரை எப்படி முந்துவது. நீங்கள் கடைசி என்றால், உங்களை முந்தினாலும் நீங்கள் கடைசி தானே !
3. வேகமாகக் கூட்டுங்கள் பார்க்கலாம் : 1000, 40, 1000, 30, 1000, 20, 1000, 10. விடையென்ன ?
.
.
.
.
.
(5000 என்றால், மீண்டும் முயற்சி செய்யுங்கள். விடை 4100)

Tuesday, February 1, 2011

Vijay


      நடிகர் விஜய் 1974ஆம் ஆண்டு ஜுன் 22ஆம் நாள் பிறந்தார். இவரின் இயற்பெயர் ஜோசப் விஜய் ஆகும். இவர் இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகரின் மகன் ஆவார். இவரின் தாயார் ஷோபா ஒரு பின்னணி பாடகர் ஆவார். விஜய்யின் சகோதரி வித்யா தமது இரண்டாவது வயதிலே காலமானார். விஜய் லொயோலா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேசன்ஸ் படித்தார். விஜய் இலங்கையைத் தமிழரான சங்கிதாவை 1999ஆம் ஆண்டு ஆகஸ்டு 25ஆம் நாள் மணந்தார். அவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். முதல் மகன் ஜேசன் சஞ்சய் 2000ஆம் ஆண்டு ஆகஸ்டு 26ல் லண்டனில் பிறதார். இரண்டாவது மகள் திவ்யா சாஷா 2005ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9ஆம் நாள் பிறந்தார்.

விருதுகள்
        தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருதை விஜய் காதலுக்கு மரியாதை படத்துக்காக 1997ஆம் ஆண்டு பெற்றுள்ளார். தமிழக அரசு 1998 ஆம் ஆண்டு விஜய்க்கு கலைமாமணி விருது அளித்து கௌரவித்துள்ளது. விஜய் 2004ஆம் ஆண்டு கில்லி படத்துக்காக தினகரன் வழங்கிய சிறந்த நடிகர் விருதையும், அதே படத்துக்காக 2005 ஆம் ஆண்டு பிலிம் டுடே வழங்கிய சிறந்த நடிகர் விருதையும் பெற்றுள்ளார். கில்லி படத்துக்காக மெட்ராஸ் கார்பொரேட் கிளப் வழங்கிய சிறந்த நடிகர் விருதையும் விஜய் பெற்றுள்ளார்.

விஜய் நடித்துள்ள படங்கள்

1. நாளைய தீர்ப்பு - (தமிழ்) - 1992 - எஸ்.ஏ. சந்திரசேகர்
2. செந்தூரபாண்டி - (தமிழ்) - 1993 - எஸ்.ஏ. சந்திரசேகர்
3. ரசிகன் - (தமிழ்) - 1994 - எஸ்.ஏ. சந்திரசேகர்
4. தேவா - (தமிழ்) - 1994 - எஸ்.ஏ. சந்திரசேகர்
5. ராஜாவின் பார்வையிலே - (தமிழ்) - 1995 - எஸ்.ஏ. சந்திரசேகர்
6. விஷ்ணு - (தமிழ்) - 1995 - எஸ்.ஏ. சந்திரசேகர்
7. சந்திரலேகா - (தமிழ்) - 1995 - நம்பிராஜன்
8. கோயம்பத்தூர் மாப்ளே - (தமிழ்) - 1996 - சி. ரங்கநாதன்
9. பூவே உனக்காக - (தமிழ்) - 1996 - விக்ரமன்
10. வசந்த வாசல் - (தமிழ்) - 1996 - எம்.ஆர். சக்குதேவன்
11. மாண்புமிகு மாணவன் - (தமிழ்) - 1996 - எஸ்.ஏ. சந்திரசேகர்
12. செல்வா - (தமிழ்) - 1996 - ஏ.வெங்கடேசன்
13. காலமெல்லாம் காத்திருப்பேன் - (தமிழ்) - 1997 - ஆர். சுந்தர்ராஜன்
14. லவ் டுடே - (தமிழ்) - 1997 - பாலசேகரன்
15. ஒன்ஸ்மோர் - (தமிழ்) - 1997 - எஸ்.ஏ. சந்திரசேகரன்
16. நேருக்கு நேர் - (தமிழ்) - 1997 - வசந்த்
17. காதலுக்கு மரியாதை - (தமிழ்) - 1997 - பாசில்
18. நினைத்தேன் வந்தாய் - (தமிழ்) - 1998 - கே. செல்வபாரதி
19. பிரியமுடன் - (தமிழ்) - 1998 - வின்சென்ட் செல்வா
20. நிலாவே வா - (தமிழ்) - 1998 - ஏ. வெங்கடேசன்
21. துள்ளாத மனமும் துள்ளும் - (தமிழ்) - 1999 - ஏ. வெங்கடேசன்
22. என்றென்றும் காதல் - (தமிழ்) - 1999 - மனோஜ் பட்னாகர்
23. நெஞ்சினிலே - (தமிழ்) - 1999 - எஸ்.ஏ. சந்திரசேகர்
24. மின்சார கண்ணா - (தமிழ்) - 1999 - கே.எஸ். ரவிக்குமார்
25. கண்ணுக்குள் நிலவு - (தமிழ்) - 2000 - பாசில்
26. குஷி - (தமிழ்) - 2000 - எஸ்.ஜே. சூர்யா
27. பிரியமானவளே - (தமிழ்) - 2000 - கே. செல்வபாரதி
28. பிரண்ட்ஸ் - (தமிழ்) - 2001 - சித்திக்
29. தேவிபுத்ருலு - (மலையாளம்) - 2001 - சித்திக்
30. பத்ரி - (தமிழ்) - 2001 - அருண் பிரசாத்
31. தம்முடு - (தெலுங்கு) - 2001 - அருண் பிரசாத்
32. ஷாஜஹான் - (தமிழ்) - 2001 - ரவி
33. தமிழன் - (தமிழ்) - 2002 - ஏ. மஜீத்
34. யூத் - (தமிழ்) - 2002 - வின்சென்ட் செல்வா
35. பகவதி - (தமிழ்) - 2002 - ஏ. வெங்கடேசன்
36. வசீகரா - (தமிழ்) - 2003 - கே. செல்வபாரதி
37. புதிய கீதை - (தமிழ்) - 2003 - கே.பி. ஜெகன்
38. திருமலை - (தமிழ்) - 2003 - ரமணா
39. உதயா - (தமிழ்) - 2004 - அழகம் பெருமாள்
40. கில்லி - (தமிழ்) - 2004 - தரணி
41. மதுர - (தமிழ்) - 2004 - ஆர். மாதேஷ்
42. திருப்பாச்சி - (தமிழ்) - 2005 - பேரரசு
43. சச்சின் - (தமிழ்) - 2005 - ஜான் மகேந்திரன்
44. சுக்ரன் - (தமிழ்) (நட்புக்காக) - 2005 - எஸ்.ஏ. சந்திரசேகர்
45. சிவகாசி - (தமிழ்) - 2005 - பேரரசு
46. ஆதி - (தமிழ்) - 2006 - ரமணா
47. போக்கிரி - (தமிழ்) - 2007 - பிரபு தேவா
48. அழகிய தமிழ் மகன் - (தமிழ்) - 2008 - பரதன்
49. குருவி - (தமிழ்) - 2008 - தரணி
50. பந்தயம் - நட்புக்காக - 2008
51. வில்லு - (தமிழ்) - 2009
52. வேட்டைக்காரன் - (தமிழ்) - 2009
53. சுறா - (தமிழ்) - 2010